Indian 2 அப்டேட் – அனிருத் இசையில் அதிரடியான முதல் பாடல் ‘பாரா’ வெளியாகியுள்ளது.
உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கி வரும் Indian 2 படத்தில் முதல் பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. இசையமைப்பாளர் அனிருத் இசையில் ‘பாரா…வருவது ஓராட் படையா’ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலின் வரிகளை கவிஞர் பா. விஜய் எழுதியுள்ளார்.
Waiting for this day since I was a kid.. A dream come true to make music for the master @shankarshanmugh sir and ulaganayagan @ikamalhaasan sir once again 🔥🔥🔥
— Anirudh Ravichander (@anirudhofficial) May 22, 2024
Here is #Paaraa – https://t.co/rQ5IGYasZy
First single from #Indian2 🥁🥁🥁
🖋️@poetpaavijay#ShruthikaSamudhrala…
முற்றிலும் கிராஃபிக்ஸ் காட்சிகள் கொண்டு அதிரடியான பாடலை வெளியிட்டுள்ளனர். Indian 2 படத்தின் முதல் போஸ்டரில் குதிரையில் வரும் இந்தியன் தாத்தா சேனாதிபதி, இந்த பாடலின் பின்னணி இசையும் அவ்வாறே அமைந்துள்ளது. லைகா புரொடக்சன் தயாரிப்பில் வரும் இந்த படத்தின் மற்றுமொரு முக்கிய அறிவிப்பும் இன்று வெளியான பாடலின் முடிவில் உள்ளது.
Indian 2 படத்தின் இசை வெளியீடு ஜூன் மாதம் 1ம் தேதி என அறிவிப்பு வந்துள்ளது. இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு சோனி மியூசிக் சவுத் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள். வெளியான அரை மணி நேரத்தில் 1 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது இந்த பாடல்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்திரன் முதல் முறையாக இயக்குனர் சங்கர் உடன் இணையும் படம். இதில் முதல் பாடலில் மிரட்டி உள்ளார். கம்பீரமான பாடலை அனிருத் மற்றும் ஷ்ருதிகா சமுத்ராளா பாடியுள்ளனர். இதை தொடர்ந்து இந்த படத்தின் மற்ற பாடல்களை கேட்கவும் பார்க்கவும் ஆவல் அதிகரித்தது உள்ளது. இயக்குனர் சங்கர் எப்போதும் போல கிராஃபிக்ஸ் காட்சிகளில் பிரம்மாண்டத்தை காட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]