Home Cinema News தமிழ் சினிமாவில் 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட டீஸர்களின் பட்டியல்!

தமிழ் சினிமாவில் 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட டீஸர்களின் பட்டியல்!

தமிழ் சினிமாவில் வெளியாகிய டீஸர்களில் ரசிகர்களிடம் ஒரு சில குறிப்பிட்ட படங்களின் டீஸர்கள் பெரும் வரவேற்பை பெற்று 24 மணி நேரத்திற்குள் அதிகளவு பார்க்கப்படுகிறது.

by M Abinaya

கோடிக்கணக்கான படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகிருந்தாலும், ஒரு சில படங்கள் மட்டுமே மக்கள் பெரிதும் வரவேற்கும் திரைப்படங்களாக அமைகிறது. மேலும், அப்படிப்பட்ட படங்களின் டீஸர், ட்ரைலர் போன்றவை வெளியாகவுள்ளது என்றாலே ரசிகர்கள் அதிகம் உற்சாகத்துடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். எனவே, டீஸர் வெளியாகியதும் ரசிகர்கள் பார்த்துவிடுவார்கள். இப்படி டீஸர் வெளியாகிய 24 மணி நேரத்திற்குள் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட பிரபலாமான திரைப்படங்களின் பட்டியல் மற்றும் படத்தின் விவரங்களை பின்வருவனவற்றில் தெரிந்து கொள்ளலாம். 

1. மாஸ்டர் 

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி மோதிக்கொள்ளும் மாஸ் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவான இப்படம் ரசிகர்களிடம் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது.

  • இயக்குனர் – லோகேஷ் கனகராஜ்
  • நடிகர்கள் –  விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ்.
  • தயாரிப்பு நிறுவனம் – XB Film Creators
  • வெளியான தேதி – 13 ஜனவரி 2021
  • டீஸர் பார்வை – 19.35M (24 மணி நேரம்)

2. கேப்டன் மில்லர் 

தனுஷ் நடிப்பில் உருவான பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்று ஆக்ஷன் திரைப்படம் கேப்டன் மில்லர்.  இப்படம் 1930 களின் காலக்கட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக களமிறங்கும் வீரன் பற்றிய கதை.

  • இயக்குனர் – அருண் மாதேஸ்வரன் 
  • தயாரிப்பு நிறுவனம் – Sathya Jyothi Films
  • நடிகர்கள் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார்
  • வெளியான தேதி – 12 ஜனவரி 2024
  • டீஸர் பார்வை – 17.46M (24 மணி நேரம்)

3. குட் பேட் அக்லி

விடாமுயற்சிக்கு பின் தல அஜித்து குமார் நடிக்கும் ஒரு அக்ஷன் நிறைந்த அதிரடி திரைப்படம் குட் பேட் அக்லி.  இப்படத்தின் டீஸர் 28 பிப்ரவரி 2025 வெளியாகியதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் பெருகியுள்ளது. 

  • இயக்குனர் – ஆதிக் ரவிச்சந்திரன் 
  • நடிகர்கள் – அஜித் குமார், திரிஷா கிருஷ்ணன்
  • தயாரிப்பு நிறுவனம் – Mythri Movie Makers
  • வெளியீட்டு தேதி – 10 ஏப்ரல் 2025
  • டீஸர் பார்வை – 16.8M (12 மணி நேரம்)

4. சர்க்கார் 

விஜய் நடிக்கும் அரசியல் ஆக்ஷன்  திரைப்படம். ஒருவர் தனது வாக்குரிமையை பயன்படுத்த இந்தியா வரும்போது, அரசியல் சூழ்ச்சிகளால் அவருக்கு நிகழும் பிரச்சனைகளை எதிர்த்து போராடும் கதை தான் சர்க்கார்.

  • இயக்குனர் – ஏ.ஆர். முருகதாஸ்
  • நடிகர்கள் – விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு 
  • தயாரிப்பு நிறுவனம் – Sun Pictures
  • வெளியான தேதி – 6 நவம்பர் 2018
  • டீஸர் பார்வை – 14.92M (24 மணி நேரம்)

5. கங்குவா 

சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரமாண்டமான வரலாற்று ஆக்ஷன் நிறைந்த திரைப்படம் தான் கங்குவா. சிவா இயக்கிய இப்படம், பழங்கால போர்களையும் அதில் ஒரு வீரனின் வாழ்க்கையையும்  மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

  • இயக்குனர் – சிவா
  • நடிகர்கள் – சூர்யா, திஷா பட்னி
  • தயாரிப்பு நிறுவனம் – Studio Green, UV Creations
  • வெளியான தேதி – 14 நவம்பர் 2024
  • டீஸர் பார்வை – 14.72M (24 மணி நேரம்)

6. மெர்சல் 

விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் பிரமாண்டமான ஆக்ஷன் திரைப்படம். அட்லீ இயக்கிய இப்படம், மருத்துவத்தில் நடக்கும் ஊழல்களை வெளிக்காட்டும் படமாக உள்ளது. 

  • இயக்குனர் – அட்லீ 
  • நடிகர்கள் – விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு
  • தயாரிப்பு நிறுவனம் – Thenandal Studio Limited
  • வெளியான தேதி – 18 அக்டோபர் 2017
  • டீஸர் பார்வை – 11.29M (24 மணி நேரம்)

7. விடாமுயற்சி 

விடாமுயற்சியுடன் போராடும் ஒரு நபரின் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம்தான் விடாமுயற்சி திரைப்படம்.

  • இயக்குனர் – மகிழ் திருமேனி 
  • நடிகர்கள் – அஜித் குமார், திரிஷா கிருஷ்ணன், அர்ஜுன் சர்ஜா
  • தயாரிப்பு நிறுவனம் – Lyca Productions
  • வெளியான தேதி – 6 பிப்ரவரி 2025
  • டீஸர் பார்வை – 7.3M (24 மணி நேரம்)

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.