உலகின் தலைசிறந்த விருதுகளில் ஒன்றான Oscar விருதுக்கு நம் தமிழ் சினிமா படங்களில் சில இதுவரை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Oscar விருதுகள் உலகின் அனைத்து மொழி படங்களையும் அங்கீகரித்து சிறப்பு விருதுகள் பல கொடுத்து வருகிறது. இந்த Oscar விருதினை வாங்குவது அவ்வளவு எளிதல்ல. இந்த விருதிற்கு பரிந்துரை ஆவது கூட பெரிய விஷயமாக கருதுகிறார்கள் நடிகர்கள். இந்திய படங்கள் பல இந்த விருதிற்கான பரிந்துரை பெற்றுள்ளது. பிரபல சினிமா இயக்குனரும் தலைசிறந்த சிந்தனையாளருமான சத்யஜித் ரேவுக்கு மரியாதை நிமித்தமாக Oscar விருது வழங்கப்பட்டது. இந்த மதிப்பிற்குரிய விருதை பெற்ற ஒரே இந்தியர் இவர் தான்.
தமிழ் சினிமாவில் இது போல பரிந்துரைக்கப்பட்ட படங்கள் பற்றிய பட்டியல் இது.
தெய்வ மகன் (1969)

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படம் நூறு நாட்கள் ஓடியது பெரிய தகவல் இல்லை ஆனால் தமிழின் முதல் Oscar பரிந்துரை படம் இவர் நடிப்பில் வந்த ‘தெய்வ மகன்’. இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர் பிரபல பெங்காலி புதினத்தை திரைப்படமாக இயக்கி, நடிகர் சிவாஜி கணேசனுக்கு மூன்று வேடங்களை தந்து வெற்றி படமாக தந்துள்ளார். இந்த படத்தில் பின்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம். என். நம்பியார், நாகேஷ், வி. நாகைய்யா நடித்துள்ளனர்.
நாயகன் (1987)

உலக நாயகன் கமல் ஹாசனின் வாழ்க்கை புத்தகத்தில் முக்கியமான படம். இயக்குனர் மணிரத்னம் தமிழ் சினிமாவை உலகளவில் பேசவைத்து படம் நாயகன். இன்றைக்கும் ஒரு கல்ட் கிளாசிக் படமாக கருதப்படும் படம் ஆங்கிலத்தில் வந்த காட்பாதர் படத்துடன் ஒப்பிடப்பட்ட படமாகும். இந்த படத்தின் பாடல்களும் காட்சிகளும் வசனங்களும் திரைத்துறையில் மறக்கமுடியாதவை. நாயகன் படத்துக்கு Oscar விருது தராதது இன்றும் பேசப்படுகிறது. இந்த படத்தில் நடிகை சரண்யா, ஜனகராஜ், கார்த்திகா, நாசர், டெல்லி கணேஷ் நடித்திருப்பர்.
அஞ்சலி (1990)

மற்றொரு இயக்குனர் மணிரத்னத்தின் பிரபல தமிழ் படம். பெரும்பாலானவர்களின் குழந்தை பருவத்தை நினைவூட்டும் ஒரு உணர்ச்சிகரமான படம். இந்த படத்தின் கதையும் நடிப்பும் Oscar விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது பெரிய வியப்பு அல்ல. இந்த படத்தின் பாடல்கள் தித்திப்பாக இன்றும் கேட்கப்படுகிறது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிகை ஷாமிலி, நடிகர்கள் ரகுவரன், ரேவதி, தருண் நடித்திருப்பர்.
அதிக முறை தேசிய விருது வென்ற Tamil நடிகர்கள்
தேவர் மகன் (1992)

கமல் ஹாசனின் இரண்டாவது Oscar பரிந்துரை, கடைசி பரிந்துரை அல்ல. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் திரையில் தோன்றி அந்த படம் உலகின் மிகப்பெரிய விருதை பெறாமல் இருப்பது ஆச்சரியம் தான். தேவர்மகன் படம் பேசாத அரசியல் இல்லை, தொடாத உணர்வு இல்லை. இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும், வரியும் சினிமா என்பதற்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இந்த படத்தில் பெரிய நடிகர் பட்டாளம்-ரேவதி, கௌதமி, நாசர், வடிவேலு நடித்துள்ளனர்.
குருதிப்புனல் (1995)

நடிகர் கமல்ஹாசன், ஆக்ஷன் கிங் அர்ஜுன், நாசர், கௌதமி நடிப்பில் பி.சி.ஸ்ரீராம் இயக்கிய படம். தீவிரவாதத்தை எதிர்க்கும் காவல்துறை அதிகாரிகள், ஆக்ஷன் படமாக அமைந்த குருதிப்புனல் தமிழில் பாடல்கள் ஏதும் இல்லாமல் வந்த சில படங்களில் ஒன்று. இந்த படம் தமிழ், தெலுங்கில் வெளியானது, ஆனால் தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரோட்ரடாம் பட விழாவில் காட்டப்பட்டு பாராட்டுக்கள் பெற்ற படம். இந்தியா சாற்பாக ஆஸ்கர் விருதின் பரிந்துரையாகவும் 1995ம் ஆண்டில் இருந்த்து.
இந்தியன் (1996)

தொடர்ச்சியாக ஒரு நடிகரின் படத்தை இந்தியா ஆஸ்கர் பரிந்துரையாக அறிவிப்பது அனைவராலும் எண்ணக்கூடிய உயரம் அல்ல. நடிகர் கமல் ஹாசன் இயக்குனர் சங்கரின் கூட்டணியில் மாபெரும் வெற்றி படமாக வந்த படம் இந்தியன். சமுதாய சீர்திருத்த வேலைகளை கையில் எடுக்கும் இந்தியன் தாத்தா. இந்த படத்தின் வெற்றிக்கு ஆஸ்கர் பரிந்துரையை சாட்சி. கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, செந்தில், கவுண்டமணி, நாசர் நடித்த படம். கமல்ஹாசன் ஏற்கனவே நடித்த நாம் பிறந்த மண் என்ற படத்தின் அடிப்படை கதையில் இருந்து எடுக்கப்பட்ட படம்.
ஜீன்ஸ் (1998)

இயக்குனர் சங்கரின் பிரம்மாண்டத்தை, திரைப்படத்தின் தொழில்நுட்ப பயன்பாட்டை பாராட்டும் வகையில் இந்தியாவின் 1998 ஆஸ்கர் பரிந்துரையாக இருந்து படம் ஜீன்ஸ். இரட்டையர்கள் கொண்டு கதையில் மற்றவர்களை போல் இல்லாமல் கிராஃபிக்ஸ் பயன்படுத்தி தமிழ் சினிமாவை மேன்மை அடைய செய்த படம். இந்த படத்தை இப்போது பார்த்தாலும் வியக்கும் வண்ணம் அவ்வளவு நுட்பமாக எடுத்திருப்பார் இயக்குனர் சங்கர்.
ஹே ராம் (2000)

இந்தியா முழுதும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்திய காந்தியின் மரணத்தை பற்றி புதிய கோணத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான படம். கமல்ஹாசன் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை, மத நல்லிணக்கம், பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய அம்சங்கள் பற்றிய ஆழமான கதையை படமாக்கி அதை ஆஸ்கர் விருது பெர பரந்துரையும் செய்த பெருமை நடிகர் கமல்ஹாசன் உடையதே. நடிகர்கள் ஷாருக்கான், ராணி முகர்ஜி, ஹேம மாலினி, கிரீஸ் கர்ணாட், நசீருதின் ஷா, வசுந்தரா தாஸ் நடித்துள்ளார்கள்.
விசாரணை (2016)

இயக்குனர் வெற்றிமாறனின் துணிச்சலான படம். விசாரணை படத்தை இயக்கி, தயாரித்து 16 வருடங்களுக்கு பின் தமிழ் சினிமா பக்கம் ஆஸ்கர் வாடை வீச வைத்தார் இயக்குனர் வெற்றிமாறன். லாக்கப் மரணங்கள் அதாவது சிறைச்சாலை வன்கொடுமைகளை பற்றி எதார்த்தமான படம். நடிப்பை தாண்டி படத்தின் பின்னணி உழைப்பின் பயன் படத்தை பார்ப்பவர்கள் திகிலடைய வைத்து. நடிகர்கள் அட்டக்கத்தி தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி, ஆடுகளம் முருகதாஸ் நடித்துள்ள படம். தேசிய விருது பெற்ற படம்.
ஒத்த செருப்பு (2019)

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் எழுதி,இயக்கி, தயாரித்து, நடித்த படம். தமிழ் திரையரங்குகளில் பெரிய வரவேற்பு கிடைக்காமல் ஆஸ்கர் விருதின் பரிந்துரையாக அறிவிக்கப்பட்ட படம். பல சர்ச்சைகள் படத்தின் வரவேற்பை ஒட்டி எழுந்தது. தமிழில் முதல் முறையாக ஒரு கதாப்பாத்திரம் வைத்து எடுக்கப்பட்ட படம் என்ற பெயரும் உண்டு. சிறைச்சாலையில் நடக்கிற உரையாடலை ஒரே நடிகராக திரையில் தோன்றி இயக்கியிருப்பார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]