புதிய படத்தில் Pradeep Ranganathan உடன் இணையும் மமிதா பைஜு. தொடர்ந்து படங்களில் நடிக்கும் கோமாளி பட இயக்குனர்.
Pradeep Ranganathan காட்டில் அடைமழை. தமிழ் சினிமாவில் இடம்பிடிக்க இயக்குனராக அறிமுகமான பிரதிப் ரங்கநாதன், தன்னுடைய முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் தனக்கென இளம் ரசிகர்களை திரட்டினார். 2019ல் கோமாளி படத்தை நடிகர் ஜெயம் ரவி, யோகி பாபுவை வைத்து எடுத்து கமர்ஷியல் ஹிட் படத்தின் மூலம் பிரபலமானார்.

இரண்டாவது படத்தை தானே இயக்கி நடித்து மற்றுமொரு மாபெரும் ஹிட் படமாக்கினார். ‘லவ் டுடே’ படம் கமர்ஷியல் ஹிட் மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இயக்கம், நடிப்பு என கோலிவுட்டில் வெற்றிகரமாக வலம் வரும் பிரதிப் ரங்கநாதன், இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான சீமான் முக்கிய பாத்திரம் ஏற்கிறார். தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல நடிகர் எஸ் ஜே சூர்யாவும் இந்த படத்தில் நடிப்பது குறிப்பிட்டத்தக்கது.
What is #Dragon ?
— Pradeep Ranganathan (@pradeeponelife) May 5, 2024
That will be our next video . pic.twitter.com/dVXWzDKIO6
இதை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அடுத்த படத்திற்கான பூஜையும் முடித்துவிட்டார் பிரதிப் ரங்கநாதன். ‘டிராகன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பும் விரைந்து நடப்பதால் உடனடியாக அடுத்த படமும் தயாராகி வருகிறது.
இயக்குனர் சுதா கோங்கராவின் உதவி இயக்குனராக இருந்த கீர்த்தீஸ்வரன் தன்னுடைய அடுத்த படத்தின் கதாநாயகனாக பிரதிப் ரங்கநாதன்ஐ தேர்வு செய்துள்ளார். இந்த படத்தின் அறிவிப்பில் கதாநாயகியாக ‘பிரேமலு’ பட கதாநாயகி மமிதா பைஜு நடிக்க உள்ளதாகவும் தகவல்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]