Home Cinema News நயன்தாரா இல்லைனா த்ரிஷா… ‘சுந்தர் சி’ ரூட்டு பிடித்த ஆர்ஜே பாலாஜி!

நயன்தாரா இல்லைனா த்ரிஷா… ‘சுந்தர் சி’ ரூட்டு பிடித்த ஆர்ஜே பாலாஜி!

சுந்தர் சி-யின் ரூட்டைப்பிடித்துவிட்டார் ஆர்ஜே பாலாஜி, ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் பார்ட் 2-வை இயக்குவது என முடிவெடுத்துவிட்டார்.

by Vinodhini Kumar

ரேடியோ ஜாக்கியாக இருந்து நடிகரான ஆர்ஜே பாலாஜி குறிப்பிட்ட சில படங்களே நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல நடிகராக புகழ்பெற்றுவிட்டார். இவரது நடிப்பு மற்றும் துணை இயக்கத்தில் வெளியான நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால், இதற்கு அடுத்து ஆர்ஜே பாலாஜி நடித்த ‘வீட்ல விசேஷம்’, ‘ரன் பேபி ரன்’, ‘சிங்கப்பூர் சலூன்‘ ஆகிய படங்கள் பெரிதாக ஓடவில்லை என்பதோடு வியாபாரத்திலும் சரிவை சந்தித்தது.

ஆர்ஜே பாலாஜி Mookuthi amman

இதனால் சுந்தர் சி-யின் ரூட்டைப்பிடித்துவிட்டார் ஆர்ஜே பாலாஜி. ‘அரண்மனை’ என்கிற தலைப்பே வைத்தே நான்கு படங்களை இயக்கிவிட்ட சுந்தர்-சியின் ஃபார்முலாபடி, ஆர்ஜே பாலாஜி தனக்குப் பெரிய அளவில் பேர் வாங்கிக்கொடுத்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் பார்ட் 2-வை இயக்குவது என முடிவெடுத்துவிட்டார். ஆனால், பார்ட் 2-வில் நயன்தாரா டேட்ஸ் இல்லை என மறுக்க ‘நயன்தாரா இல்லைனா த்ரிஷா’ என செட்டில் ஆகி த்ரிஷாவை டிக் அடித்திருக்கிறார் ஆர்ஜே பாலாஜி.

விரைவில் மூக்குத்தி அம்மனாக த்ரிஷாவை தரிசிக்கலாம்!

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.