Home Cinema News மூன்றாவது குழந்தை… மீண்டும் அப்பாவாகும் Sivakarthikeyan!

மூன்றாவது குழந்தை… மீண்டும் அப்பாவாகும் Sivakarthikeyan!

சிவகார்த்திகேயன் மீண்டும் அப்பாவாகப்போகும் செய்தி கசிந்திருக்கிறது.

by Vinodhini Kumar

இது மூன்றாவது குழந்தைகளுக்கான சீசன்போல. கடந்த சில நாட்களுக்கு முன்பு மூன்றாவது குழந்தைக்குத் தந்தையான இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டன் ஜாஸ் பட்லரை எல்லோரும் பாராட்டினார்கள். காரணம் இப்போதெல்லாம் இரண்டு குழந்தைகளுக்கு மேல் யாரும் பெற்றுக்கொள்வதில்லை என்பதால் மூன்றாவது குழந்தை அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. இந்தச்சூழலில்தான் Sivakarthikeyan மீண்டும் அப்பாவாகப்போகும் செய்தி கசிந்திருக்கிறது.

சிவகார்த்திகேயன் and Aarthi

சமீபத்தில் Sivakarthikeyan தனது ரசிகரின் குடும்ப விழாவில் குடும்பத்தோடு கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி கர்ப்பமாக இருப்பதைக் காணமுடிந்தது. ஏற்கெனவே சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்கிற மகளும், குகன் தாஸ் என்கிற மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில்தான் மூன்றாம் முறை கர்ப்பமாகியிருக்கிறார் ஆர்த்தி.

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை பிரபலங்களில் இளையராஜா, ஏஆர் ரஹ்மான் ஆகியோருக்குத்தான் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இணைய இருக்கிறார் சிவகார்த்திகேயன். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.