இயக்குனர் Sudha Kongara-வின் அடுத்த படத்திற்கான கதாநாயகன் தேர்வுக்காக முன்னணி நடிகர்களிடம் பேசி வருகிறார்.

Sudha Kongara தன்னுடைய வித்தியாசமான நம்பிக்கையூட்டும் படங்களை தமிழ் சினிமாவில் இயக்கியவர். இவர் 2024ல் நடிகர் சூர்யாவுடன் புறநானூறு படத்தை எடுப்பதாக தகவல். ஆனால் இப்போது படப்பிடிப்பு மற்றும் இதர தகவல்கள் கால்வரை இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டது. பெயரிடப்படாத இந்த படம் ‘புறநானூரு’ என நம்பப்பட்டு அதில் நடிக்க நஸ்ரியா நாசிம், துல்கர் சல்மான், விஜய் வர்மா ஆகியோரை இணைந்திருந்தார் இயக்குனர் Sudha Kongara. இந்த படம் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக இவர் ஒரு ஆக்ஷ்ன் கதையை படமாக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
My next!
— Sudha Kongara (@Sudha_Kongara) October 26, 2023
With an awesome bundle of talents@Suriya_offl @dulQuer #Nazriya @MrVijayVarma @gvprakash #Jyotika @rajsekarpandian @meenakshicini #Suriya43 has begun! pic.twitter.com/6EBQNUL301
இயக்குனர் Sudha Kongara இதற்கு முன் சூரியாவுடன் ‘சூரரை போற்று’ படத்தை இயக்கி பல பாராட்டுக்கள் பெற்றார். இப்போது சூரியாவின் 43வது படம் ஆரம்பத்திலேயே தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்தின் ப்ரி புரொடக்சன் வேலையில் ஈடுபட்டு வரும் இயக்குனர் சுதா கோங்கரா, இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர்கள் சிம்பு, விக்ரம், சிவகார்த்திகேயனிடம் பேச்சு வார்த்தையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் சிம்பு தக் லைஃப் படத்திலும், நடிகர் விக்ரம் தக்கலான் படத்திலும் நடித்து வருகிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையான ‘அமரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆகையால் மூன்று முன்னணி நடிகர்களில் கதைக்கு யார் சரியான தேர்வு என முடிவு எடுப்பது இயக்குனரின் கையில் தான். மூன்று நடிகர்களும் தற்போதைய படத்தின் கால்ஷீட் முடியும் தருவாயில் உள்ளனர். இப்போது சிவகார்த்திகேயன் மட்டும் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் உடன் இணைந்து பெயரிடப்படாத SK23 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]