நடிகர் சூரியாவின் 44வது படத்தின் அவரின் பாத்திரம் பற்றிய அடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
Suriya 44 படத்தின் பெயர் மற்றும் கதாப்பாத்திரத்தை ஒரு டீஸராக வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. நடிகர் சூரியா நடிக்கும் பெயரிடப்படாத Suriya 44 படத்தில் அவரின் புதிய வேடத்தை தேர்வு செய்து முடித்துள்ளார் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்தில் நடிகர் சூரியா ஒரு புதுவித பாத்திரத்தில் தோன்றுவார் என்றும், அதற்கான வேடத்தை மூன்று நாட்கள் படப்பிடிப்பு செய்து முடிவு எடுத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
முதல் முறையாக சூரியா – கார்த்திக் சுப்புராஜ் இணையும் படம், இதுவரை காணாத வகையில் அதிரடியான படமாக அமையும் என்றும். இந்த படத்தில் சூரியாவின் கெட்டப் பல முயற்சிகளுக்கு பின் இயக்குனரின் ஒப்புதலுடன் விரைவில் வெளியாக உள்ளது. தனது 44 வந்து படத்தின் பெயரும் அந்த கதாப்பாத்திரம் பற்றிய அறிவிப்போடு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
Happy Birthday Dear @Music_Santhosh 🎉🎉🎉 🤗🤗
— karthik subbaraj (@karthiksubbaraj) May 15, 2024
Let us Start the Music for #Suriya44#LoveLaughterWar#HBDSanthoshNarayanan@Suriya_offl @2D_ENTPVTLTD @stonebenchers @rajsekarpandian @kaarthekeyens pic.twitter.com/9UWqvyEH4s
இந்த அறிவிப்பை ரசிகர்களுக்கு ஒரு சிறிய டீஸர் போல ஒருங்கிணைத்து வெளியிடவும், அதற்கான படப்பிடிப்பு மூன்று நாட்கள் நடத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எப்போதும் போல இந்த படத்திற்கும் அவரின் வெற்றிக் கூட்டணியை இசையமைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன் உடன் தொடர்கிறது. ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்றும் முதல் கட்டமாக அந்தமானில் காட்சிகள் இயக்க உள்ளதாக தகவல்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் முதல் முறையாக நடிகர் சூரியாவின் படத்திற்கு இசை அமைக்க உள்ளார். இதற்கு முன் இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த படத்தின் பெயர், பாத்திரங்கள் என அனைத்தையும் ஒரு பெரிய தகவலாக வெளியிடுவது ரசிகர்களுக்கு உற்சாகமானது தான். தற்போது நடிகர் சூரியா, சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படமும் விரைவில் வெளியாகும்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com