Home Cinema News Vijay Sethupathi நடிப்பில் ‘மகாராஜா’ டிரெய்லர் வெளியாகியுள்ளது! 

Vijay Sethupathi நடிப்பில் ‘மகாராஜா’ டிரெய்லர் வெளியாகியுள்ளது! 

நடிகர் Vijay Sethupathi-யின் 50வது படமான ‘மகாராஜா’வின் டிரெய்லர் வெளியாகி டிரெண்ட் ஆகி வருகிறது.

by Vinodhini Kumar

நடிகர் Vijay Sethupathi-யின் 50வது படமான ‘மகாராஜா’வின் டிரெய்லர் வெளியாகி டிரெண்ட் ஆகி வருகிறது.

Vijay Sethupathi தன்னுடைய இயல்பான நடிப்பால் தமிழ் சினிமாவில் பெரியளவில் வெற்றிகரமாக கோலாச்சி வருகிறார். அவருடைய 50வது படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் நிதிலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். 

இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இதற்கு முன் ‘குரங்கு பொம்மை’ படம்‌ மூலம் அறியப்பட்டவர். Vijay Sethupathi உடன் ‘மகாராஜா’ படத்தில் இணையும் இவர், ஒரு த்ரில்லர் கலந்த ஆக்ஷன் படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு சலூன் கடை வைத்து நடத்துபவர், அவரின் வீட்டை உடைத்து ஒன்று திருட்டுப் போகிறது. காவல் நிலையத்தில் விஜய் சேதுபதி அவருடைய ‘லட்சுமி’யை கட்டுப்படுத்து தர கேட்கிறார். ‘லட்சுமி’ யார், எது என‌ தெளிவாக கூறாமல் இருக்கும் வகையில் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 

Vijay Sethupathi in Maharaja

சமீபத்தில் நடித்த படங்களை விட இந்த படத்தில் வித்தியாசமான பாத்திரத்தில் தோன்றும் விஜய் சேதுபதி, ஆக்ரோஷமான வேடத்தில் நடித்துள்ளார். டிரெய்லரின் கடைசி நொடி வரை எதாவது தகவல் உள்ளதா என்றும், யார் இந்த ‘லட்சுமி’ என்றும் ஆவலுடன் முடித்துள்ளனர். 

இந்த படத்தில் முன்னணி பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் வில்லனாக நடித்துள்ளார். நடிகைகள் அபிராமி மற்றும் மம்தா மோகன் நடித்துள்ளனர். இந்த படத்தின் OTT உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கியுள்ளது. மகாராஜா படம் மே 16-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.