இந்த வருடம் Vikatan சினிமா விருதுகளை வாங்கப் போகும் வெற்றியாளர்கள் இவர்கள் தான்!
Vikatan பத்திரிக்கை ஒவ்வொரு ஆண்டும் சினிமா துறையில் சிறந்த படங்கள் மற்றும் அதனை உருவாக்கிய பின்னனி கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பார்கள். இதை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டின் சிறந்த படங்கள், நடிகர், நடிகை, கலைஞர்கள் என பல துறைகளை ஊக்குவிக்க Vikatan சினிமா விருதுகளை அறிவித்துள்ளது. அதன் பட்டியல் தொடர்கிறது.

2023ம் ஆண்டின் சிறந்த படமாக S.U. அருண் குமார் இயக்கிய ‘சித்தா’ விருது வென்றுள்ளது. இந்த படத்தின் கதாநாயகியாகன் சித்தார்த், சிறந்த நடிகர் விருதும், படத்தின் நாயகி நிமிஷா சஜயன் சிறந்த நடிகை விருதைப் பெற்றனர். ‘சித்தா’ படத்தில் தன்னுடைய மழலை நடிப்பால் மக்களின் மனதை கவர்ந்த சஹஸ்ரா ஸ்ரீ, சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற விருதை வென்றார்.

மற்றொரு சிறந்த நடிகர் விருதும் நடிகர் சூரிக்கு வழங்கப்பட்டது. ‘விடுதலை பாகம் 1’ படத்தில் அவருடைய நடிப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அவர்களுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருது கிடைத்தது.

சிறந்த வலை தொடர் (web series) விருதை விமர்சையாக பாராட்டப்பட்ட ‘அயலி’ சீரீஸ்க்கு கிடைத்தது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் X படம் ஐந்து விருதுகளை அள்ளிச் சென்றது. சிறந்த இயக்குனர், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை, சிறந்த கலை இயக்குனர் ஆகிய விருதுகளைப் பெற்றது இந்த படக்குழு. சிறந்த எண்டர்டெய்னர் விருது நடிகர் எஸ் ஜெ சூர்யாவுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த கதை மற்றும் டயலாக் ‘மாமன்னன்’ படத்திற்காக இயக்குனர் மாரி செல்வராஜ் வென்றார்.

சிறந்த நகைச்சுவை நடிகராக ‘மாவீரன்’ படத்தில் நடித்த யோகி பாபு விருது கிடைத்தது. இந்த படத்தில் ஷோபி மாஸ்டர் சிறந்த நடன கலைஞர் விருதும், சிறந்த சண்டை காட்சிகளுக்காக யானிக் பென் விருதை பெற்றனர். இந்த படத்தின் எடிட்டர் ஃபிலோமின் ராஜ் ‘மாவீரன்’ மற்றும் ‘பார்கிங்’ படத்துக்காக சிறந்த படத்தொகுப்பாளர் விருதை வென்றார்.

சிறந்த குணச்சித்திர நடிகர், நடிகை விருதுகளை ‘குட் நைட்’ படத்தில் நடித்த ரமேஷ் திலக் மற்றும் ரேச்சல் ரெபேக்கா வென்றனர். சிறந்த வில்லனாக ‘பார்கிங்’ படத்தில் நடித்த நடிகர் எம். எஸ். பாஸ்கர் தேர்வானார்.
சிறந்த அறிமுக நடிகராக ‘800’ படத்தில் நடித்த மாதுர் மிட்டல் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை ‘அயோதி’ படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ராணி தட்டி சென்றார்.

சிறந்த அறிமுக இயக்குனர் விருதை ‘கூழாங்கல்’ படத்தின் இயக்குனர் P.S. வினோத் ராஜ் பெற்றார்.
சிறந்த இசையமைப்பாளர் விருது ‘ஜெய்லர்’ மற்றும் ‘லியோ’ படங்களின் இசைக்காக அனிருத் ரவிச்சந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. சிறந்த பின்னணி பாடகி விருது சக்தி ஸ்ரீ கோபாலன் அவர்களுக்கு மாமன்னன் படத்தின் ‘நெஞ்சமே நெஞ்சமே’ மற்றும் பொன்னியின் செல்வன் படத்தின் ‘அகநக’ பாடலுக்காக வாங்கினார்.

சிறந்த பின்னணி பாடகராக ‘அயோதி’ மற்றும் ‘குட் நைட்’ படத்தில் பாடியதற்காக பிரதீப் குமாருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த பாடலாசிரியர் விருதை கவிஞர் யுகபாரதி பெற்றார். சித்தா படத்தின் ‘கண்கள் ஏதோ’ பாடலுக்காகவும் மாமன்னன் படத்தின் ‘நெஞ்சமே நெஞ்சமே’ பாடலுக்கும் இந்த விருதை பெற்றார்.
சிறந்த அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் விருதை லியோ படக்குழு பெற்றது. கவுரவ விருதான எஸ் எஸ் வாசன் விருதை தயாரிப்பாளர் ஏ வி எம் சரவணன் அவர்களுக்கு வழங்கியது Vikatan குழுமம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]