நயன்தாரா

டயானா மரியா குரியன் என்ற இயற்பெயர் கொண்ட நயன்தாரா பெங்களூரு மாநிலத்தில் பிறந்தார். இவரது தந்தை விமான படையில் வேலை செய்து வந்த காரணத்தால் பள்ளிப்படிப்பை குஜராத் , டெல்லி, கேரளா ஆகிய இடங்களில் படித்தார். கல்லூரி படிப்பை கேரளாவில் மார்த்தோமா கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் தேர்ச்சி பெற்றார். 2003-ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் மனசினகாரோ என்ற படத்தில் அறிமுகனான நயன்தாரா இரண்டு,மூன்று ஆண்டுகள் கழித்து தான் தமிழ் சினிமாவில் ஐயா என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் ரஜினி, சூர்யா என முன்னணி நடிகர்களின் படத்தில் வாய்ப்பு கிடைக்க தனது நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 2007-ஆம் ஆண்டு வெளிவந்த அஜித் குமாரின் பில்லா படத்தில் நயன்தாராவின் நடிப்பு அஜித்திற்கு இணையாக இருந்தது. கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திய நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அளவிற்கு பேசப்பட்டார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா மட்டுமே. 75 படங்களுக்கு மேல் நடித்து வரும் நயன்தாரா ஆரம்பம் முதல் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். கலைமாமணி , நந்தி விருது ஆகிய விருதுகளை வாங்கியுள்ளார்.
சமந்தா ரூத் பிரபு

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வளம் வரும் சமந்தா சென்னையில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். கல்லூரி படிக்கும்போதே நடிப்பில் ஆர்வம் கொண்டு விளம்பரத்தில் நடித்து வந்தார்.2010-ஆம் ஆண்டு இயக்குனர் கெளதம் மேனன் இயக்கி, ஏ. ஆர் ரகுமான் இசையமைத்த ஏ மாய சேசாவே என்ற தெலுகு படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார். 2010-ஆம் ஆண்டு நடந்த செம்மொழி மாநாட்டில் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்த “செம்மொழியான தமிழ் மொழியாம்” என்ற பாடலில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தமிழில் அதர்வா கதாநாயகனாக நடித்த பாணா காத்தாடி படத்தில் அறிமுகமானார். இந்தப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் வந்தன.
தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட சமந்தா நயன்தாராவிற்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார்.
திரிஷா கிருஷ்ணன்

18 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்து வருகிறார் திரிஷா கிருஷ்ணன். முதலில் ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக அறிமுகனானார். பின்னர் மௌனம் பேசியதே , மனசெல்லாம் , சாமி போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். கல்லூரியில் படிக்கும் போது குற்றவியல் உளவியல் துறையில் சேர வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். பின்னர் நடிப்பில் ஆர்வம் கொண்டு விளம்பரங்களில் நடித்து வந்தார். மிஸ் சென்னை பட்டம் வெற்ற திரிஷா 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் “பியூட்டிஃபுல் ஸ்மைல்” என்ற விருதை பெற்றார். தனது நடிப்பின் மூலம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தார். பீட்டா அமைப்பின் நல்லெண்ண தூதராக இருந்து வந்தார். விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸி கதாபாத்திரமும், 96 ஜானு கதாபாத்திரமும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத அளவிற்கு சிறப்பாக நடித்திருந்தார்.
தமன்னா பாட்டியா

மும்பையை பிறப்பிடமாக கொண்ட தமன்னா பள்ளியில் படிக்கும் போதே பிருத்வி தியேட்டரில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடித்து வந்தார். ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த தமன்னா கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தொடர்ந்து 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். 2015-ஆம் ஆண்டு “பெண்குழந்தைகளை காப்போம் பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற திட்டத்தில் பிரச்சார வேளைகளில் ஈடுபட்டார். 2018-ஆம் ஆண்டு ஐ பி எல் தொடக்க விழாவில் நடனமாடினார்.
கீர்த்தி சுரேஷ்

சென்னையில் பிறந்த கீர்த்தி சுரேஷ் பள்ளிப்படிப்பை கேரளாவில் முடித்தார். கல்லூரியில் பேஷன் டிசைன் பட்டம் பெற்றார். இவரது அப்பா தயாரிப்பாளராக இருந்ததால் குழந்தையாக இருக்கும் போதே கீர்த்தி நடிக்க தொடங்கினார். குழந்தை நட்சத்திரமாக 2,3 படங்களில் நடித்த கீர்த்தி 2013-ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்த கீர்த்தி இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிப்பு மட்டுமல்லாமல் வயலின் வாசிப்பதிலும் திறமையானவர்.
2018-ம் ஆண்டு வெளிவந்த மகாநதி என்ற படத்தில் பழம்பெரும் நடிகையான சாவித்ரி வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இதில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரி கதாபாத்திரத்தில் மிகப்பொருத்தமாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஹைத்ராபாத் டைம்ஸ் வெளியிட்டுள்ள 30 விரும்பத்தக்க பெண்கள் பட்டியலில் 2018 முதல் 2020 வரை இடம்பெற்றிருந்தனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]