தமிழ் சினிமாவில் நாளடைவில் நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவிற்கு இணையாக கொண்டாடப்பட்டனர். பின்னர் காமெடி நடிகர்கள் கதைக்கு முக்கியத்துவம் தரும் Lead Role கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வந்தனர்.
ஒருவருடைய வாழ்வில் மகிழ்ச்சி, சிரிப்பு என்பது உடல்நலம், மன நலத்திற்கு மிக முக்கியான ஒன்று. தமிழ் சினிமாவின் ஆரம்பகாலகட்டத்தில் இருந்தே திரைப்படங்களில் நகைச்சுவை என்ற ஒன்று எதாவது ஒருவகையில் இருந்து கொண்டே இருக்கும். ஹீரோ, ஹீரோயின் போலவே நகைச்சுவை நடிகர்கள் பெரும்பாலான படங்களில் இருந்து வந்தனர். அந்த வகையில் அன்றைய காலம் முதல் இன்று வரை காமெடி நடிகர்கள் ஹீரோவாகவும், LEAD ROLE-லிலும் ஒரு சில படங்களில் நடித்து ரசிக்க வைத்தனர்.
நாகேஷ்:

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் என பட்டியலிட்டால் நாகேஷ் அவர்கள் தான் முதல் நபராக இருப்பார். 60’s, 70’s காலகட்டத்தில் காமெடியில் கிங் ஆக வளம் வந்தார். சுறுசுறுப்பான பேச்சு, முக பாவனை, உடல் மொழி என ரசிகர்களை கவர்ந்தார். நீர்க்குமிழி, எதிர்நீச்சல், அனுபவிராஜா அனுபவி, யாருக்காக அழுதான், சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் கதாநாயகனாக அசத்தினார். இன்னும் எத்தனை காலங்கள் ஆனாலும் நாகேஷ் என்ற மனிதரின் நடிப்பிற்கு ஈடுகொடுக்க முடியாது.
கவுண்டமணி:

எந்தவொரு நபரையும், யாராக இருந்தாலும் கிண்டல் செய்து பேசும் குணம் கொண்டவர் கவுண்டமணி. சத்யராஜ் கவுண்டமணி கம்போ, கார்த்திக் கவுண்டமணி காம்போ, கவுண்டமணி செந்தில் கம்போ என ஒரு சில நடிகர்களுடன் மிக இணக்கமாக நடித்து இருப்பார். அவர்களுடன் எதார்த்த பேச்சும், நடிப்பும் எத்தனை முறை பார்த்தாலும் ரசிக்க வைத்துக்கொண்டே இருக்கும். நடிகர்களுக்கு இணையாக கொண்டாடப்பட்ட கவுண்டமணி ராஜா எங்க ராஜா, பிறந்தேன் வளர்ந்தேன், 49ஓ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருப்பார். 49ஓ என்ற படத்தில் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த கதை. சமூக பிரச்னை, மக்களின் அறியாமை பற்றி மிக அழகாக பேசியிருப்பார்.
வடிவேலு:

தனது ஆரம்ப காலகட்டத்தில் கவுண்டமணி, செந்தில் போன்றவர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கி வந்தார். தனது கடின உழைப்பு, உடல் மொழி, நகைச்சுவை திறனால் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து ‘வைகை புயல்’ என்று தமிழ் சினிமாவில் கொண்டாடப்படுகிறார். காமெடியில் கலக்கினாலும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் “இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி”, “இந்திரலோகத்தில் நா.அழகப்பன்”, “தெனாலிராமன்”, “எலி”, “நாய் சேகர்” போன்ற படங்களில் நடித்தார்.
சந்தானம்:

கவுண்டமணிக்கு அடுத்து தமிழ் சினிமாவில் அனைவரையும் கிண்டல் செய்து பேசும் நடிகர் சந்தானம். விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கி வருகிறார் சந்தானம். டைமிங் காமெடியால் அனைவரையும் கலாய்த்து தள்ளும் சந்தானம் அறை எண் 305-இல் கடவுள், டிக்கிலோனா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, சர்வர் சுந்தரம், இங்க நான் கிங்கு போன்ற படங்களில் நடித்துள்ளார்.
யோகிபாபு:

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த இவர் உடல் அமைப்பால் கேலி கிண்டலுக்கு உள்ளனார் Yogi Babu. தனது விட முயற்ச்சியால் அதே உடல் தோற்றத்தை வைத்து திரைத்துறையில் தன்னை நிரூபித்தார். கோலமாவு கோகிலா, தர்ம பிரபு, கூர்க்கா, மண்டேலா, லக்கிமேன், பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி இருக்கிறார். இந்த படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது.
சூரி:

திரைத்துறைக்கு வந்த தொடக்க காலத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சூரி தனது கடின உழைப்பால் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிவகார்திகேயன், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களுடன் காமெடி ரோலில் நடித்து ரசிக்க வைத்தார். காமெடியில் கலக்கி வந்த சூரி விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும் கருடன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
RJ. பாலாஜி:

ஆரம்ப காலத்தில் RJ-வாக அறிமுகமாகி தனது கடின உழைப்பால் திரை துறைக்கு வந்தார்.பல படங்களில் காமெடி ரோலில் ரசிக்க வைத்தார். காமெடி நடிகரான ஆர்.ஜே. பாலாஜி எல்.கே.ஜி. , சிங்கப்பூர் சலூன், வீட்ல விசேஷம், மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன் போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தினார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]