இவர் ராசியான Director, ராசியான Hero, ராசியான நடிகை என்று நினைத்து தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என ஒரு குறிப்பிட நபருடன் அதிக முறை படங்களில் இணைந்து ஒன்றாக பணியாற்றிவருவார்கள். அப்படிப்பட்ட படங்கள் பெரும்பாலும் வெற்றியடைந்துள்ளது.
அந்த வகையில் ரஜினிகாந்த் முதல் சூர்யா வரை ஒரு சில நடிகர்கள் ஒரு குறிப்பிட இயக்குனருடன் அதிக முறை படங்களில் பணியாற்றியுள்ளனர்.
ரஜினிகாந்த் மற்றும் எஸ்.பி. முத்துராமன் கூட்டணி:
ரஜினி உடனான நட்பை கொண்டு இருவரும் கிட்டத்தட்ட 24 படங்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர். ரஜினிகாந்த் திரை வாழ்வில் அதிகபட்ச படங்களை இயக்கி தந்தது எஸ்.பி. முத்துராமன். “சூப்பர் ஸ்டார்” என்று உலகம் கொண்டாடும் ரஜினி அவர்களின் திரை பயணத்தில் முத்துராமன் முக்கிய பங்காற்றியுள்ளார். ஆக்ஷன், செண்டிமெண்ட், காமெடி என ரஜினியை ஒவ்வொரு படத்திலும் ரஜினியை செதுக்கியுள்ளார்.

புவனா ஒரு கேள்விக்குறி, ஆடு புலி ஆட்டம், பிரியா, ஆறிலிருந்து அறுபது வரை, முரட்டு காளை, கழுகு, நெற்றிக்கண், ராணுவ வீரன், போக்கிரி ராஜா, புது கவிதை, எங்கேயோ கேட்ட குரல், பாயும் புலி, அடுத்த வாரிசு, நான் மகான் அல்ல, நல்லவனுக்கு நல்லவன், ஸ்ரீ ராகவேந்த்ரா, மிஸ்டர் பாரத், வேலைக்காரன், மனிதன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், ராஜா சின்ன ரோஜா, அதிசய பிறவி, பாண்டியன் போன்ற படங்கள் ரஜினி மற்றும் எஸ்.பி. முத்துராமன் கூட்டணியில் வெளிவந்தன.
சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் கூட்டணி:
ஒரு சிலரது காம்போ என்றும் மறக்க முடியாத வகையில் சினிமாவில் கொண்டாடப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் சத்யராஜ், மணிவண்ணன் காம்போ சொல்லவே வேண்டாம். நக்கல், நையாண்டி, அடுத்தவர்களை கலாய்ப்பது என கலக்குவார்கள். இவர்களது கூட்டணியில் பெரும்பாலான படங்கள் ரசிக்கும் படியாக இருந்தது.

நூறாவது நாள், 24 மணி நேரம், ஜனவரி 1, மர்ம மனிதன், அன்பின் முகவரி, முதல் வசந்தம், விடிஞ்சா கல்யாணம், பாலைவன ரோஜாக்கள், சின்ன தம்பி பெரிய தம்பி, ஜல்லிக்கட்டு, இனி ஒரு சுதந்திரம், கணம் கோர்ட்டார் அவர்களே, வாழ்க்கை சக்கரம், தெற்கு தெரு மச்சான், புது மனிதன், அமைதிப்படை, தோழர் பாண்டியன், ஆண்டாள் அடிமை, நாகராஜா சோழன் MA MLA போன்ற படங்கள் இவர்களது வந்தது.
கமல் ஹாசன், K. பாலசந்தர் கூட்டணி:
இவர்களது கூட்டணியில் வெளியாகும் படங்கள் என்றாலே தனி எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது. Kamal Haasan திரை துறையில் செய்த சாதனைகளுக்கு தொடக்க காலத்தில் பாலச்சந்தர் உந்துகோலாக இருந்து வந்தார்.

அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர்கதை, நான் அவனில்லை, அபூர்வ ராகங்கள், மன்மத லீலை, மூன்று முடிச்சு, அவர்கள், நிழல் நிஜமாகிறது, தப்பு தாளங்கள், நினைத்தாலே இனிக்கும், வறுமையின் நிறம் சிவப்பு, புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி போன்ற படங்கள் கமல் பாலச்சந்தர் கூட்டணியில் வந்தன.
விஜயகாந்த், S.A. சந்திரசேகர் கூட்டணி:
மக்கள் கொண்டாடும் தலைவனாக சினிமா, அரசியல் என இரண்டிலும் கொடிகட்டி பறந்தவர் விஜயகாந்த் எனும் மாமனிதர். ஆரம்ப சினிமா வாழ்வில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமாவில் நுழைந்து இன்று தமிழ் சினிமா கொண்டாடும் தலைவனாக மாறியுள்ளார். இவரது பெரும்பாலான படங்கள் S.A. சந்திரசேகர் அவர்கள் இயக்கியதாகவே இருந்தது.

சட்டம் ஒரு இருட்டறை, நெஞ்சிலே துணிவிருந்தால், சாதிக்கொரு நீதி, நீதி பிழைத்தது, ஓம் சக்தி, பட்டணத்து ராஜாக்கள், சாட்சி, வெற்றி, வீட்டுக்கொரு கண்ணகி, குடும்பம், புதுயுகம், நீதியின் மறுபக்கம், வசந்த ராகம், எனக்கு நானே நீதிபதி, சட்ட்டம் ஒரு விளையாட்டு, ராஜ நடை, ராஜ துரை, செந்தூர பாண்டி, பெரியண்ணா போன்ற படங்கள் S.A. சந்திரசேகர் மற்றும் விஜயகாந்த் கூட்டணியில் வந்தது.
பிரபு மற்றும் P. வாசு கூட்டணி:
90-களில் முன்னணி நடிகராக இருந்து வந்த பிரபு பல வெற்றிப்படங்களை தந்துள்ளார். அந்த வகையில் P. வாசு உடன் கூட்டணி போது ரசிக்கும் படங்களை கொடுத்துள்ளனர். 1 வருடம் தியேட்டரில் ஓடி சாதனை படைத்த சின்ன தம்பி படம் இவர்களது கூட்டணியில் வந்தது தான்.

நீதியின் நிழல், என் தங்கச்சி படிச்சவ, பிள்ளைக்காக, சின்ன தம்பி, கிழக்கு கரை, செந்தமிழ் பட்டு, கட்டுமரக்காரன், மிஸ்டர் மெட்ராஸ், வண்ணத்தமிழ் பாட்டு, சந்தமுகி போன்ற படங்கள் பிரபு, P. வாசு கூட்டணியில் வந்தவை.
சரத் குமார், K.S. ரவிக்குமார் கூட்டணி:
ஒரு சில இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனநிலையை அறிந்து காலத்திற்கு ஏற்ப படைப்புகளை தந்து வந்தனர். அவற்றை ரசிகர்கள் ரசித்தும் கொண்டாடியும் வந்தனர். அவ்வாறு படைப்புகளை தந்து வந்தவர்களில் ஒருவர் KS.RAVIKUMAR. சரத்குமாரை ஹீரோவாக அறிமுகம் செய்து பல வெற்றிப்படங்களை தந்து அசத்தியுள்ளார்.

புரியாத புதிர், சேரன் பாண்டியன், ஊர் மரியாதையை, பேண்டு மாஸ்டர், நாட்டாமை, நட்புக்காக, பாட்டாளி, சமுத்திரம், பாறை, ஜக்குபாய் போன்ற படங்கள் சரத் குமார், KS.ரவிக்குமார் கூட்டணியில் வந்தது.
மேலும் ஒரு சில இயக்குனர்கள், நடிகர்கள் கூட்டணியில் 4,5 படங்களுக்கு மேல் இணைந்து பணியாற்றவில்லை. அர்ஜுன் மற்றும் ராமநாராயணன் கூட்டணி, விஜய் மற்றும் சந்திரசேகர் கூட்டணி, சூர்யா மற்றும் ஹரி கூட்டணி என ஒரு சில படங்களில் இணைந்து பணியாற்றி வெற்றிப்படங்களை தந்துள்ளனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]