Home Cinema News தமிழ் சினிமா இயக்குனர்களின் Signature film styles! 

தமிழ் சினிமா இயக்குனர்களின் Signature film styles! 

இயக்குனர்கள் தங்களுக்கென தனி ஸ்டைலில் படங்கள் எடுப்பது உண்டு. அதில் சிலர் அவர்களது படங்களில் ஒரு signature விஷயத்தை சேர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

by Vinodhini Kumar

சினிமாவில் ஒரு படத்தை இயக்கி வெளியிடும் அனைவரும் பல ஆண்டுகளுக்கு ஞாபகார்த்தமாக இருப்பது இல்லை. தனக்கென தனி வழியில் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே தனித்துவமான ஸ்டைலை உருவாக்கி அதை தொடர்கிறார்கள். 

மணிரத்னம்

Maniratnam's signature bus frame

மணிரத்னம் படங்கள் என்றாலே உருகி உருகி காதலின் பல பரினாமங்களை காட்டியிருப்பார் என்று தெரியும். மேலும் கதையின் நாயகன் நாயகி கண்டிப்பாக பேருந்தில் அல்லது ரயிலில் பயணிக்கும் ஒரு காட்சி இருக்கும். இருவரும் தங்களின் உணர்வுகளை பரிமாறிக்கொள்ள, இந்த ஒரு சின்ன ரயில் பயணம் தேவையான பின்னணியை அமைக்கும் என இயக்குனர் மணிரத்னம் ஒரு நேர்காணலில் கூறியிருப்பார். முகம் பார்க்கும் கண்ணாடியை கூட காட்சிக்கு ஃப்ரேமாக உபயோகித்திருப்பார் மணிரத்னம். இதை தாண்டி இவரின் படங்களில் துவைத்த துணியை காணப்போகும் காட்சியும் கண்டிப்பாக இடம்பெறும். சில படங்களில் துணிகளை கையில் ஏந்திய இருப்பார்கள் அல்லது மொட்டை மாடியில் இருந்து காய வைத்தபடியே காட்சி நகரும். 

வெற்றிமாறன் 

Vadachennai character narration

ஒரு சமூகத்தில் நடக்கும் கதைகளை மிக இயல்பாக, நிஜத்தின் நிழலாக எடுக்கும் ஒரு இயக்குனர். இவரின் படங்களில் நிரைய கதாப்பாத்திரங்கள் இருப்பதும், அவர்கள் பேசும் பாமர மக்களின் மொழி, சலனமின்றி கூறப்படும் வசனங்கள் என பல அவரின் தனித்துவமாக இருக்கிறது. இந்த காட்சிகள் தான் அவரின் படங்களில் ஒரு உண்மைத்தன்மையை சேர்க்கிறது. இதோடு அவருடைய படங்கள் பெரும்பாலும் கதை சொல்லும் நடையில் அமையும். படத்தின் கதை களத்தை ஒரு voice over கொடுத்து அதன் வழியாக பார்ப்பவர்களுக்கு புரியவைப்பார் இயக்குனர் வெற்றிமாறன். 

ஹரி 

Haris signature sickle
Source: Facebook

தமிழ் சினிமாவில் பட்டித்தொட்டி எங்கும் இயக்குனர் ஹரியின் படங்களுக்கு ரசிகர்கள் உண்டு. அவரின் ஆக்ஷன் படங்களை டிவியில் ஒளிபரப்பினால் கூட TRP ஏறும் அளவிற்கு ஒரு கமர்ஷியல் மாஸ் படங்களை தன்னுடைய ஸ்டைலாக எடுத்துக்கொண்டவர். பிரபல நடிகர்கள் ஹிட் கொடுக்க முடியாமல் இருந்தபோது இவரின் இயக்கத்தில் நல்ல வெற்றி படங்களில் நடித்தது உண்டு. அவரின் படங்களில் பெரும்பான்மையாக சிறு நகரங்களில் நடக்கும் கதையாக இருக்கும். அதில் முக்கியமாக கோவில்கள் காட்சிப்படுத்தப்பட்டு குடும்ப கதையாக அமைந்திருக்கும். சண்டை காட்சிகளில் அறிவாள் பயன்படுத்துவதும் இவரின் எல்லா படங்களிலும் பார்க்கலாம். குடும்பத்தில் உள்ள நபர்களை என்னென்ன உறவு என்றும் எடுத்துக் கூறும் வசனமும் இருப்பது வழக்கம். 

ஷங்கர் 

Mudhalvan Arjun

பிரம்மாண்டமான படங்கள் மற்றும் மாபெரும் பட்ஜெட்டில் படம் எடுப்பதில் இயக்குனர் ஷங்கர் பெயர் போனவர் என்றாலும், அவரின் படங்கள் சமூக ஊழல்களை பேசும். அப்படி அவரின் படங்களில் மற்றுமொரு தனித்துவம் உண்டு. படத்தில் எதாவது ஒரு துணை பாத்திரத்தின் இறப்பு படத்தின் நாயகனை தட்டிக்கேட்க தூண்டும். அவரின் பெரும்பான்மையான படங்களில் இதை பார்க்கலாம். இதுவே படத்தின் கதையில் ஒரு திருப்பமாக அமையும். 

கவுதம் வாசுதேவ் மேனன் 

Vinnaithandi Varuvaaya Trisha

காதல் படங்களுக்கென தனி ரசிகர்களை ஒரு இடைவேளைக்குப் பின் அமைத்தவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் தன்னுடைய படங்களில் அழகான இடங்கள், ஆங்கில வசனங்கள் என பல விஷயங்களுக்காக டிரெண்டானவர். அப்படி ஒன்று தான் மிடில் க்ளாஸ் வாழ்க்கையை இவர் காட்டியிருப்பது. ஹீரோ ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர் என்றாலும் அவர் நினைத்த நொடியில் அமெரிக்கா செல்வதை மீம்களில் கலாய்த்தனர்‌. காட்டன் புடவையில் கதாநாயகி, வயது வித்தியாசம் என அவருக்கென சில விலக்கம் இல்லாத தனித்துவங்கள் இருக்கிறது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.