Home Cinema News 2024-ன்‌ ஆக்ஷ்ன் படம் ‘Coolie’யிலிருந்து விலகும் பாலிவுட் பிரபலம்! 

2024-ன்‌ ஆக்ஷ்ன் படம் ‘Coolie’யிலிருந்து விலகும் பாலிவுட் பிரபலம்! 

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘Coolie’ படத்தில் இருந்து விலகும் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.

by Vinodhini Kumar

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘Coolie’ படத்தில் இருந்து விலகும் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.

Coolie படத்தின் டீஸர் வெளியாகி அதிரடியான அப்டேட்டாக, ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆக்ஷன் வேடத்தில் தனி ஆளாக எதிரிகளை பதம் பார்க்கும் டீஸராக இருந்தது. இந்த படத்தை ‘விக்ரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். டீஸர் வெளியாகி அதில் வரும் பின்னனி இசைக்கு சிக்கல் வந்தாலும், படத்தின் அடுத்த அப்டேட் கிடைத்துள்ளது.

Coolie Poster

கூலி படம் ஒரு பான் இந்தியன் படமாக, பெரிய நடிகர்கள் நடிக்க உள்ளதாக இயக்குனர் எழுதியிருப்பதாகவும், அந்த வகைகள் பாலிவுட்டில் பிரபல ஹிட் கதாநாயகன் ரன்வீர் சிங் ‘கூலி’ படத்தில் இணைய உள்ளதாக தகவல் வந்தது. ரன்வீர் சிங் இணைவதில் தற்போது ஒரு இடையூறு வந்துள்ளது.

Ranveer Singh

பாலிவுட்டில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ரன்வீர் சிங், ‘கூலி’ படத்தில் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் அவர் கேட்ட தேதிகளில் ரன்வீர் சிங் தராததும், சம்பள பிரச்சனைகள் ஏற்ப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் இந்த படத்தில் இருந்து விலகினார். 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றொரு பிரபல நடிகரை படத்தில் இணைக்க தீவிரமாக தேடி வருகிறார். கூலி படத்தில் எதிர்பார்த்த நடிகர்கள், கதை என அனைத்தையும் சரியாக செய்ய நினைக்கும் லோகேஷ் கனகராஜ், இந்த படத்திற்காக மும்முரமாக வேலை செய்து வருகிறாராம். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.