சர்வதேச திரைப்பட கலைஞர்களை அங்கீகரிக்கும் பல விருதுகள் இருந்தாலும் ஒவ்வொரு கலைஞனும் ஏங்கும் விருது “Oscar/Academy Awards” ஆகும். அப்படிப்பட்ட Oscar Award-க்கு தேர்வு செய்யப்பட்டாலே மிகவும் கௌரவம் என நினைக்கும் பல கலைஞர்கள் உண்டு. இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழ் படங்கள் சர்வதேச அளவிலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி பாராட்டுகளை பெற்று வருகின்றனர். ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு மிகவும் முக்கியமான விஷயமாக கருதப்படுவது அதன் கதை மற்றும் திரைக்கதை ஆகும். இதற்கு முன் Oscar விருதுக்கு தகுதியான திரைப்படங்களில் ஐந்து திரைப்படங்கள் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “நாயகன்(1987), தேவர் மகன்(1992), குருதிப்புனல்(1995), இந்தியன்(1996), ஹே ராம்(2000)” ஆகியவை ஆகும். இதற்கு முன் 1969-ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான “தெய்வ மகன்” திரைப்படமும் தகுதி பெற்றது. ஆனால் சில காரணங்களால் நூலிழையில் விருதுகளை தவறவிட்டது இந்த மகத்தான காவியங்கள்.
Parking (2023)
மொத்த திரையுலகமே பெருமை கொள்ளும் வகையில் இந்த வருடம் இரண்டு தமிழ் திரைப்படங்களின் திரைக்கதையை Oscar Academy Library-ல் சேர்க்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. அதில் முதல் படமாக நடிகர் ஹரிஷ் கல்யாண், M.S.பாஸ்கர், நடிகை இந்துஜா ரவிச்சந்திரன், ப்ராத்தனா நாதன், ரமா ராஜேந்திர ஆகியோர் நடிப்பில் வெளியான “Parking” திரைப்படம் ஆகும். இந்த படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு இதுவே முதல் படம் ஆகும். வாடகை வீட்டில் தங்கும் கணவன், மனைவி புதிதாக கார் வாங்கியவுடன் வண்டியை Parking செய்யும் இடத்தை பெருவாரியாக கார் பிடித்து விடும் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக படத்தில் முன்னணி கதாபாத்திரமாக இருக்கும் ஹரிஷ் கல்யாண் மற்றும் M.S.பாஸ்கர் இருவருக்கும் இடையே இடையே உண்டாகும் “Ego Clash”எந்த எல்லை வரை செல்கிறது என்பது தான் கதை. எளிமையான கதையை சிறப்பான திரைக்கதையினால் சுவாரஸ்யமாக மக்களுக்கு கூறப்பட்ட காரணத்தால் மிகப்பெரிய வெற்றியை இந்த திரைப்படம் பெற்றது. படக்குழுவினர் அனைவருக்கும் மிகப்பெரிய நெகிழ்ச்சியான சம்பவமாக அமைந்தது Oscar Academy
பார்ட் 2-வுக்கு ஸ்கெட்ச் போடும் ‘பார்க்கிங்’ படக்குழுவினர்…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
Library-யின் அறிவிப்பு.
From your hearts to the #Oscars library.
— Harish Kalyan (@iamharishkalyan) May 23, 2024
Oru Nalla Kadhai adhukaana edatha thaney thedi pogum. 🙏 #Parking #Academy
Grateful for this incredible Journey. Thank you! Love to my team ❤️🙏 @ImRamkumar_B @Actress_Indhuja @sinish_s @jsp2086 @philoedit @SoldiersFactory… pic.twitter.com/p6AOwsjlZU
ராயன் (2024)
கோலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் வரை சென்று தனது நடிப்பின் மூலம் தன்னை நிலைநாட்டிய நடிகர் தனுஷ், தற்போது இயக்குநராகவும் சர்வதேச திரையுலகில் இடம் பிடித்துள்ளார். ஜூலை மாதம் வெளியான “ராயன்” திரைப்படம் நடிகர் தனுஷ் அவர்களின் 50-வது படமாகும். நடிகர் தனுஷ் அவர்களின் திரைக்கதை, மற்றும் இயக்கத்தில் அவரே நடித்து வெளியான “ராயன்” திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல பாராட்டுக்களை பெற்றது. Oscar நாயகன் இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில், சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், SJ சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன் என திரையுலக பட்டாளம் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தின் திரைக்கதை தற்போது Oscar Academy Library-ல் இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் நடிகர் தனுஷ் தற்போது சிறந்த திரைக்கதை எழுதுவதிலும் வல்லவர் என்பதை நிரூபித்துள்ளார். இது குறித்த செய்தியை Sun Pictures அவர்களின் இணையதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
#Raayan screenplay has been selected to be a part of the library of the Academy of Motion Picture Arts and Sciences.#RaayanMegaBlockbuster in cinemas near you!@dhanushkraja @arrahman @iam_SJSuryah @selvaraghavan @kalidas700 @sundeepkishan @prakashraaj @officialdushara… pic.twitter.com/wcZnAOdo0y
— Sun Pictures (@sunpictures) August 2, 2024
சர்வதேச அளவில் தமிழ் திரைபடங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் அடுத்து வரக்கூடிய படைப்பாளர்களுக்கு உந்துகோலாக அமைவதோடு மட்டுமல்லாமல், ஒரு படம் வெற்றி பெற அதன் கதை, திரைக்கதை, பின்னணி இசை, சிறந்த நடிப்பு, ஒளிப்பதிவு தான் காரணமே தவிர அதன் பட்ஜெட் இல்லை என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]