Home Cinema News 14 March 2025 – வெள்ளித்திரையில் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைப்படங்கள் 

14 March 2025 – வெள்ளித்திரையில் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைப்படங்கள் 

இந்த வாரம் வெள்ளிக்கிழமை [14 March 2025] தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் பட்டியலை காண்போம்.

by Shanmuga Lakshmi

தமிழ் திரைப்படங்களின் தீவிர ரசிகர்கள் பார்த்து ரசித்து கொண்டாடும் வகையில் பல்வேறு புதிய திரைப்படங்கள் 14 March 2025 [வெள்ளிக்கிழமை] அன்று திரையரங்கில் திரையிடப்படவுள்ளது. ரொமான்ஸ், ஆக்ஷன், திரில்லர், ட்ராமா, ஆழமான உணர்வுகள் கொண்ட கதைகள் உருவாக்கப்பட்டுள்ளது. உங்களின் விருப்பமான ரசனைக்கு ஏற்ப வெளிவரும் படங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்!

1.ஸ்வீட் ஹார்ட் 

அழகான கவிதை போல் சென்று கொண்டிருக்கும் காதலில் யாரும் எதிர்பாராத புயல் வந்து அடிக்க காதலர்களுக்குள் மிக பெரிய விரிசல் ஏற்படுகிறது. மேலும், தற்கால காதலர்கள் அவர்களின் கமிட்மென்ட் மீது அவர்களுக்கு இருக்கும் சமநிலையற்ற மனப்பான்மை குறித்த காமெடி கலந்த ரொமான்டிக் திரைப்படம் ‘ஸ்வீட் ஹார்ட்’.  

  • நடிகர்கள் – ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரெஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லீ 
  • இயக்குனர் – ஸ்வினீத் சுகுமார் 
  • தயாரிப்பு – YSR Films 

2.பெருசு 

அதே நாளில் வெளியாகும் மற்றொரு காமெடி திரைப்படம் ‘பெருசு’. வீட்டில் இருக்கும் பெரியவர் உயிருக்கு போராடிய நிலையில் இருக்கிறார். அவரின் மரணத்திற்காக வீட்டில் உள்ள அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி அவர் இறந்தால் என்ன ஆகும்?

  • நடிகர்கள் – வைபவ், சுனில், நிஹாரிகா, சாந்தினி தமிழரசன், தீபா
  • இயக்குனர் – இளங்கோ ராமநாதன் 
  • தயாரிப்பு – Stone Benchers 

3.வருணன் 

ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது அவன் வாழும் இடம், அங்கு இருக்கும் அரசியல் மற்றும் தண்ணீர்.

  • நடிகர்கள் – ராதாரவி, சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கப்பிரியல்லா, ஹரிப்ரியா 
  • இயக்குனர் – ஜெயா வேல்முருகன்  
  • தயாரிப்பு – Yakkai Films  

4.டெக்ஸ்டர் 

படத்தின் நாயகனான ஆதி என்ற கதாபாத்திரம் PTSD அதாவது ஒரு விபத்திற்கு பிறகு ஏற்படும் பாதிப்பு அதன் தொடர்ச்சியாக விளையும் கோளாறால் அவதிப்பட்டு வருகிறான். அவனின் பழைய இணைவுகள் அழிக்கப்பட்டு புது வாழ்க்கையை தொடங்க அவனின் வாழ்க்கையில் வேறு புதிய பிரச்சனைகள் உருவாகிறது.

  • நடிகர்கள் – ராஜீவ் கோவிந்தா பிள்ளை, அபிஷேக் ஜோசப், யுக்தா பேர்வி, சித்தாரா விஜயன் 
  • இயக்குனர் – சூர்யன்.G   
  • தயாரிப்பு – Ram Entertainers 
March 2025 – திரையரங்கில் வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் 

5.ராப்பர் 

மெட்ரோ படத்தை இயக்கி கோலிவுட்டில் தனக்கான முத்திரை பதித்த இயக்குனர் பாண்டியின் அடுத்த திரில்லர் திரைப்படம் ராப்பர்.

  • நடிகர்கள் – சத்யா, டேனியல் ஆன்னி போப், தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ட்ராயன் 
  • இயக்குனர் – SM பாண்டி 
  • தயாரிப்பு – Sakthivel Film Factory, Impress Film Productions, Metro Productions 

6.மாடன் கொடை விழா 

தென்மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நிகழும் கதை போல் உருவாக்கப்பட்டுள்ளது ‘மாடன் கொடை விழா’. பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் திருவிழா மக்களின் நலனுக்காக மீண்டும் நடைபெற வேண்டும். கிராம மக்களின் வேண்டுதல் நிறைவேற்ற நடக்கும் நிகழ்வுகளே மீதிக்கதை.

  • நடிகர்கள் – ராஜீவ் கோவிந்தா பிள்ளை, அபிஷேக் ஜோசப், யுக்தா பேர்வி, சித்தாரா விஜயன் 
  • இயக்குனர் – விபின்.R 
  • தயாரிப்பு – Sri Thenandal Films, Deiva Productions 

7.குற்றம் குறை 

ஆக்ஷன் த்ரில்லர் அடிப்படையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குற்றம் குறை’.

  • நடிகர்கள் – லுகாஸ் கனகராஜ், ஸ்ரீ மதி  
  • இயக்குனர் – சதீஷ் K.சேகர், விஜய் திருமூலம் 
  • தயாரிப்பு – கால பைரவா மூவிஸ் 

8.கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் 

பல வருடங்களுக்கு பிறகு ரொமான்டிக் திரைப்படத்தில் சோலோ கதாநாயகனாக நடிக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். பணத்தால் இரு இதயம் ஒன்று சேர எண்ணி மனதால் அவர்களின் பொய்யான பிம்பம் உடைகிறது.

  • நடிகர்கள் – ஸ்ரீகாந்த், புஜிதா, KR விஜயா, டெல்லி கணேஷ், சிங்கம் புலி 
  • இயக்குனர் – K.ரங்கராஜ்    
  • தயாரிப்பு – ஸ்ரீ கணபதி பிலிம்ஸ்  

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.