தமிழ் மக்களின் திருவிழா காலங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தனி ரசிகர்/ரசிகை கூட்டம் உள்ளது, ஏனென்றால் சினிமா மக்களின் உணர்வில் கலந்த உறுதியான உணர்வு. இந்த 2025 Pongal திருநாள் ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. மேலும் விடுமுறை நாட்கள் வார இறுதி நாட்கள் உடன் இணைந்து கொள்ளவுள்ளதால் பொங்கல் விடுமுறை காலத்தை குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செலவிட உங்கள் அருகில் இருக்கும் திரையரங்கு மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.
2025 Pongal திருநாள் அன்று வெளியாக உள்ள திரைப்படங்களின் பட்டியல்.
வணங்கான்
Filmfare Award விருதை என்ற தமிழ் சினிமா இயக்குனர் பாலா ஐந்து வருடங்களுக்கு பிறகு இயக்கும் “வணங்கான்” திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் வெளியான ட்ரைலரில் இந்த திரைப்படம் இதற்கு முன் வெளியான இயக்குனர் பாலாவின் trademark எமோஷனல் காட்சிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
நடிகர்கள் : அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின்
வெளியாகும் நாள் : ஜனவரி 10, 2025
கேம் சேஞ்சர்
பான் இந்திய நடிகர் ஆன ராம் சரண் மற்றும் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் இயக்குனர் ஷங்கர் உடன் முதல் முறை கூட்டணி அமைத்து இந்த பொங்கலுக்கு வெளியாக உள்ள பெரிய பட்ஜெட் திரைப்படம் “கேம் சேஞ்சர்”. தெலுங்கு மொழியில் படமாக்கபட்டாலும் தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளிலும் வெளியாகிறது.
நடிகர்கள் : ராம் சரண், கியாரா அத்வானி, சமுத்திரக்கனி, அஞ்சலி, SJ சூர்யா
வெளியாகும் நாள் : ஜனவரி 10, 2025
மெட்ராஸ்காரன்
மலையாள சினிமாவை தொடர்ந்து கண்டு வரும் ரசிகர்/ரசிகர்களுக்கு நடிகர் ஷேன் நிகாம் மிகவும் பிடித்தமான நடிகராக இருப்பார் என்பதில் ஐயமில்லை. தற்போது ‘மெட்ராஸ்காரன்’ என்ற தமிழ் படத்தின் மூலமாக கோலிவுட்டுக்கு அறிமுகம் ஆகிறார். இந்த படத்தின் மற்றொரு முன்னணி கதாபாத்திரமாக கலையரசன் நடித்துள்ளார். இந்த இருவரின் எதிர்பாரா கோபத்தின் உச்சம் அவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. அது ஏன்? எதனால்? எதற்காக? என்பது தான் இந்த படத்தின் கதைக்கரு.
நடிகர்கள் : ஷேன் நிகாம், கலையரசன், ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், நிஹாரிகா கோனிடேலா
வெளியாகும் நாள் : ஜனவரி 10, 2025
படைத்தலைவன்
தமிழ் சினிமா மற்றும் ரசிகர்களுக்கு 2015 ஆம் ஆண்டு முதல் அறிமுகம் ஆன சண்முக பாண்டியன் நடிப்பில் இந்த பொங்கலுக்கு “படைத்தலைவன்” வெளிவரவுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் என்பதால் இந்த படம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு ட்ரைலரில் காடு, அங்கு வாழும் மக்கள் மற்றும் யானை என இவை அனைத்திற்கும் எதிராக உருவாகும் எதிரிகளை எதிர்த்து போராடும் படைத்தலைவனாக நடிகர் சண்முக பாண்டியன் பணியாற்றியுள்ளார்.
நடிகர்கள் : சண்முக பாண்டியன், முனிஷ்காந்த், கஸ்தூரி ராஜா, கருடன் ராம், யூகி சேது
வெளியாகும் நாள் : ஜனவரி 10, 2025
2K லவ் ஸ்டோரி
2k கிட்ஸ்களின் வாழ்க்கை, நண்பர்கள், அவர்களின் காதல் அதற்கான முயற்சி, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என அவர்கள் உலகத்தை சுவாரஸ்யம், காதல், நகைச்சுவை நிறைந்த கதையாக மக்களிடம் படைக்க உள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.
நடிகர்கள் : ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜன், பால சரவணன், ஜெயபிரகாஷ்
வெளியாகும் நாள் : ஜனவரி 10, 2025
மதகஜராஜா
நடிகர் விஷால், வரலக்ஷ்மி சரத்குமார், அஞ்சலி நடிப்பில் உருவான ‘மதகஜராஜா’ திரைப்படம் பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளித் திரைக்கு வரவுள்ளது இன்று அதிகாரபூர்வமாக நடிகர் சந்தானம் தனது X தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் இயக்குனர் சுந்தர்.சி என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர்கள் : விஷால், வரலக்ஷ்மி சரத்குமார், அஞ்சலி, சந்தானம்
வெளியாகும் நாள் : ஜனவரி 12, 2025
Kings of Entertainment @VishalKOfficial #SundarC @iamsanthanam
— Santhanam (@iamsanthanam) January 3, 2025
A @vijayantony musical
are all set to make this Pongal a Laughter Festival.
Gemini Film Circuit’s#MadhaGajaRaja
worldwide release on Jan 12.#MadhaGajaRajaJan12
#MGR #மதகஜராஜா @johnsoncinepro pic.twitter.com/9gfRXMUkH0
நேசிப்பாயா
கோலிவுட்டின் cult இயக்குனர் என்று அழைக்கப்படும் விஷ்ணுவர்தன் இயக்கும் காதல் காவியம் தான் “நேசிப்பாயா”. இந்த படத்தில் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆகாஷ் முரளி தனது திரைப்பயணத்தை தமிழ் சினிமாவில் தொடங்குகிறார்.
நடிகர்கள் : ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு, பிரபு
வெளியாகும் நாள் : ஜனவரி 14, 2025
A festive treat from #VishnuXYuvan🌟
— XB Film Creators (@XBFilmCreators) January 2, 2025
Get ready to celebrate #Pongal with a love story that brims with fire and passion—#Nesippaya🥀, in cinemas January 14!#NesippayaFromJan14♥🔥
A @vishnu_dir film
A @thisisysr musical#VV10 #ArjunDiya@_akashmurali @AditiShankarofl pic.twitter.com/bBfPykT5h7
காதலிக்க நேரமில்லை
இந்த பொங்கலுக்கு வெளியாகும் மற்றொரு ரொமான்டிக் காமெடி திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. இதில் பணியாற்றி உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நடிகர்கள் படத்தின் மீதுள்ள ஆர்வத்தை கூடியுள்ளனர். AR ரஹ்மான் இசை, ஜெயம் ரவி, நித்யா மேனன் இருவரின் முதல் முறை கூட்டணி என பலவற்றை கூறலாம்.
நடிகர்கள் : ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு, வினய் ராய், ஜான் கொக்கேன், லால்
வெளியாகும் நாள் : ஜனவரி 14, 2025
தேதி அறிவிக்க படாத பொங்கல் வெளியீடு!
திரைப்படம் | நடிகர்கள் | இயக்குனர் |
டென் ஹவர்ஸ் | சிபி சத்யராஜ் | இளையராஜா கலியபெருமாள் |
தருணம் | கிஷன் தாஸ், ஸ்ம்ருதி வெங்கட், ராஜ் ஐயப்பா | அரவிந்த் ஸ்ரீனிவாசன் |