பெரும்பாலும் முன்னணி ஹீரோக்களின் படங்களின் தலைப்பு என்ன என்ற எதிர்ப்பார்ப்பும் உற்சாகமும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் இருக்கும். அப்படி ஏற்கனவே வெளியான ஒரு படத்தின் பெயர், வேறொரு படத்தின் கதைக்கு தேவை என்றாலோ, அந்த படத்தின் கதாபாத்திரம் ஏற்கனவே வந்த படத்தில் இருப்பவராக இருந்தாலோ அதே தலைப்பை மீண்டும் பயன்படுத்தி படத்தை வெளியிடுவார்கள். அப்படி ஒரே பட பெயரில் வெளியான இரண்டு படங்களின் பட்டியல்.
வேட்டைக்காரன்

புரட்சி தலைவர் MGR நடிப்பில் 1964ல் வெளியான படம் தான் ‘வேட்டைக்காரன்’. இந்த படத்தில் ஒரு வேட்டையனாக, காட்டில் மிருகங்களை வேட்டையாடும் வாலிபனாக நடித்திருப்பார் நடிகர் MGR. நடிகை சாவித்ரி, நடிகர் நம்பியார், M. R. ராதா, S. A. அசோகன் நடிப்பில் வெற்றி படமாக அமைந்தது இந்த படம்.

அப்படியே 2009ல் நடிகர் விஜய் நடிப்பில் இதே தலைப்பில் ‘வேட்டைக்காரன்’ என்ற படம் வெளியானது. இந்த தலைப்புக்கும் படத்தின் கதைக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்றாலும், படத்தில் வில்லனை வேட்டையாடும் ஹீரோ என்ற கண்ணோட்டத்தில் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளனர்.
பில்லா

1980ல் ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா நடிப்பில் வெளியான gangster படம் ‘பில்லா’. இந்த படம் ஹிந்தியில் சலீம்-ஜாவேத் இயக்கத்தில் அமிதாப் பச்சன் நடித்து வெற்றியடைந்த படத்தின் தமிழ் ரீமேக் படமாகும். ரஜினிகாந்துக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்த படம். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து ஒரு முன்னணி ஹீரோவாக ரஜினிகாந்தை உயர்த்திய படம்.

இதே கதைக்களத்தில் 2007ம் ஆண்டில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் ‘பில்லா‘ படம் வெளியானது. அஜித் குமாரின் ஸ்டைலான, அதிகம் கொண்டாடப்பட்ட படமாக இது அமைந்தது. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையில் இந்த படத்துக்கான ரசிகர் கூட்டம் மேலும் உயர்ந்தது. ரஜினிகாந்த் மற்றும் அஜித்துக்கு நல்ல புகழை தேடி தந்த படங்கள் ‘பில்லா‘ என கூறலாம்.
முரட்டு காளை

காளையன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைத்து, ஒரு கிராமத்து நாயகனாக களமிறங்கிய படம் ‘முரட்டு காளை‘. நேர்மையான கதாபாத்திரத்தில், சண்டை காட்சிகளில் அசத்தி, அந்த ஆண்டின் பெரிய ப்ளாக்பூஸ்டர் படமாக அமைந்தது இந்த படம். ‘பொதுவாக என் மனசு தங்கம்’ பாடலில் காளையை அடக்கும் காட்சிகள் இன்றும் ஆரவாரமாக கொண்டாடப்படுகிறது.

இதே பெயரில் 2012ம் ஆண்டு சுந்தர் சி நடிப்பில் வெளியான படம் தோல்வி அடைந்தது. ஜல்லிக்கட்டு விளையாட்டில் கைதேர்ந்த கதாநாயகன், தனது தம்பிகளுடன் நேர்மையாக வாழ்கிறார் என்ற அதே கதையை வெற்றி படமாக மாற்ற தவறினர். இரண்டும் படங்கள், கதை ஒன்று, அனால் வெவ்வேறு காலக்கட்டத்தில் அதன் வெற்றி தோழ்வி தீர்மானம் ஆகியுள்ளது அந்த நடிகர்கள் மற்றும் திரைக்கதையின் முக்கியத்துவத்தை காட்டுகிறது.
மாப்பிள்ளை

ரஜினிகாந்த், அமலா, ஸ்ரீவித்யா நடிப்பில் 1989ல் வெளியான மாபெரும் வெற்றி படம் ‘மாப்பிள்ளை‘. தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வெற்றியடைந்த படத்தை தமிழில் எடுத்து 200 நாட்களுக்கு மேல் திரையிட்டனர். ஒரு விளையாட்டான கமர்ஷியல் படத்தில் நக்கலான ஹீரோவாக நடித்தார் ரஜினிகாந்த்.

2011ல் ரஜினிகாந்தின் மருமகனும் நடிகருமான தனுஷ் இதே பெயர் மற்றும் கதையை படமாக்கி நடித்தார். ஸ்ரீவித்யா கதாப்பத்திரத்தில் மனிஷா கொய்ராலா நடித்து, ஹன்சிகா ஹீரோயினாக நடித்தார். முந்தைய படத்தை போல இல்லாமல், சுமாராக ஓடியது இந்த படம்.
விக்ரம்

1986ல் ராஜசேகர் இயக்கத்தில், கமல் ஹாசன் மற்றும் எழுத்தாளர் சுஜாதா இணைந்து எழுதி வெளியான படம் ‘விக்ரம்‘. பல ஒத்து முயற்சிகளுடன், இந்தியாவில் முதல் முறையாக கம்ப்யூட்டர் உதவியுடன் இசை அமைக்கப்பட்ட படம் இது. கமர்ஷியல் வெற்றி பெட்ரா படமாக அமைந்து, ஏஜென்ட் விக்ரம் என்ற கதாபாத்திரத்தை பிரபல படுத்திய படம். 2022ல் ‘விக்ரம்’ படத்தில் கமல் ஹாசன் மீண்டும் ஏஜென்ட் விக்ரம் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அந்தாண்டின் இரண்டாவது அதிக வசூல் ஈட்டியாகி படமாக அமைந்தது ‘விக்ரம்’ திரைப்படம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]