Home Cinema News பாடல்கள் இல்லாத தமிழ் படங்கள் – சிறப்பு பார்வை

பாடல்கள் இல்லாத தமிழ் படங்கள் – சிறப்பு பார்வை

by John Kamalesh

தமிழ் மொழியில் வெளியாகி பாடல்கள் இல்லாமல் வெற்றி பெற்ற படங்கள் நிறைய இருக்கின்றன. ஒரு படத்திற்கு கதை எந்த அளவில் முக்கியமோ அதே அளவிற்கு பாடல்களும் முக்கியம். தமிழ் சினிமாவில் படம் நன்றாக இல்லை என்றாலும் பாடலுக்காகவே ஓடிய படங்களும் இருக்கின்றன. ஆனால்,அந்த காலம் முதல் இந்த காலம் வரை நிறைய படங்கள் பாடல்கள் இல்லாமல் வெளியாகியுள்ளன, கதையை மட்டுமே முக்கிய மூலமாக கொண்டு பாடல்கள் இல்லை என ஏங்கவைக்காமல் சுவாரசியமாக எடுத்து சென்ற படங்களின் தொகுப்பை பார்க்கலாம்.

அந்த நாள்

1954 ம் ஆண்டு வெளிவந்த இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிய படம் தான் அந்த நாள். இந்த படம் ஒரு மர்ம திரில்லர் படமாகும். தமிழ் திரையுலகில் இந்த படமே பாடல்கள், நடனம் மற்றும் எந்த ஒரு சண்டை காட்சிகளும் இல்லாமல் உருவான முதல் படமாகும். இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜாவர் என்.சீதாராமன், பண்டரி பாய் மற்றும் பலரின் நடிப்பில் உருவான திரைப்படமாகும். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது. சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் பெற்றது.

குருதிப்புனல்

1995 ம் ஆண்டு வெளியான ஆக்சன் திரில்லர் படமாகும். பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கமலஹாசன், அர்ஜுன், கௌதமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் கிட்டத்தட்ட ஒரு ஹாலிவுட்டிற்கு இணையான க்ரைம் திரில்லர் படமாகும். காவல்துறைக்கும் தீவிரவாதிக்கும் இடையே நடக்கும் சண்டையை தெளிவாக கூறியிருப்பார்கள். இந்த படம் பல விருதுகளை பெற்றது. இந்த படத்தில் ஒரு பாடல் காட்சிகள் கூட இடம்பெறவில்லை. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றியை தழுவியது.

ஏர்போர்ட்

1993 இல் வெளியான இந்த படத்தில் சத்யராஜ், கௌதமி, சார்லி மற்றும் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஜோஷ்லி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பாடல்கள் இல்லாததற்கு காரணம் இந்த படத்தின் கதைதான். ஒரு வட்டத்திற்குள்ளே ஒரே தேடலில் மிகவும் அழகாக படத்தை எடுத்திருப்பார்கள். ஒரு வேலை பாடல் இருந்தால் படத்தில் கதையை புரியவைப்பதில் ஒரு தேக்கம் இருக்குமோ என்ற காரணத்தினாலே இந்த படத்தில் பாடகள் இடம்பெறவில்லை. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

பயணம்

2011 ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நாகார்ஜுன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ராதா மோகன் அவைகள் இயக்கியுள்ளார். பொதுவாகவே இயக்குனர் ராதா மோகன் அவர்கள் படத்த்தில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் மற்றும் அவர் படத்தின் பாடல்கள் மிகவும் ஹிட் ஆனவையே. ஆனால் அவர் இந்த படத்தின் கதையில் சுவாரசியம் குறையகூடாது என்பதற்காக படத்தின் தேவையை அறிந்து பாடல்களை உருவாக்கவில்லை.

நடுநிசி நாய்கள்

2௦11 ம் ஆண்டு வெளிவந்த ஒரு திரில்லர் படம் தான் நடுநிசி நாய்கள்.  இந்த படம் கெளதம் வாசுதேவ் மேனனால் இயக்கப்பட்டது. இந்த படத்தில் முக்கிய வேடங்களில் வீரா, சமீரா ரெட்டி, தேவா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் அதிக வரவேற்ப்பை பெறவில்லை. இது ஒரு சைக்கோ கேரக்டரை உள்ளடக்கிய கதை. இந்த படத்தில் வரும் ஒரு சில காட்சிகள் மனச்சிதைவை  ஏற்படுத்தும். பாடல் காட்சிகள் இல்லை.  படமும் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் பெறவில்லை.

உன்னைப்போல் ஒருவன்

உன்னைப்போல் ஒருவன் படம் 2௦௦9 ம் ஆண்டு இயக்குனர் சாக்ரி டோலிடி என்பவரால் இயற்ற்றப்பட்டது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக கமலஹாசன் மற்றும் மோகன்லால் நடித்துள்ளனர். நான்கு பயங்கரவாதிகளை விடுவிக்க நகரத்தில் வெடிகுண்டு வைப்பது அதிலிருந்து மீட்க்க முயற்சிக்கும் ஒரு காவல்துறையினருக்கும் இடையேயான மோதலை விவரிக்கிறது. ஒரே நாளில் நடக்ககூடிய நிகழ்வுகளை கதையாக்கியதால் இதன் தொடர்ச்சி விட்டுவிடக்கூடாது என்பதற்காக  இந்த படத்தில் பாடல் காட்சிகள் இடம்பெறவில்லை. அடுத்து என்ன நடக்கும் என சுவாரசியத்தை தூண்டும் இந்த படம் வரவேற்ப்பு ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

விசாரணை

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2௦௦7 ம் ஆண்டு வெளியான படம் தான் விசாரணை. முக்கிய கதாபாத்திரங்களாக அட்டகத்தி தினேஷ், சமுத்திரகனி மற்றும் ஆனந்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தவறே செய்யாமல் சிறைக்கு செல்லும் ஒருவனின் கதையை மக்கள் யோசிக்கும் வண்ணம் எடுத்திருப்பார். இந்த படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் படத்தை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த பின்பும் கூட மனதில் இந்த படத்தின் தாக்கம் இருக்கும். இந்த படமும் பல விருதுகளை குவித்தது.

துப்பறிவாளன்

2017 ம் ஆண்டு வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படம் விஷால் அவர்களது நடிப்பில் இயக்குனர் மிஸ்கின் அவர்களால் இயற்றப்பட்டது. விஷால் மட்டுமல்லாமல் பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா மற்றும் பாக்யராஜ் போன்ற நட்சதிரங்கக்ளும் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. முதல் சீனிலே தொடங்கும் சுவாரசியம் படத்தின் இறுதிவரை நீட்டிபதர்காக இந்த படத்தில் பாடல் காட்சிகள் இடம்பெறவில்லை. வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. துப்பறியும் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது இந்த படம்.

சூப்பர் டீலக்ஸ்

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2019 ம் ஆண்டு வெளியானது இந்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்த, பஹத் பாசில் மற்றும் ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் வரும் அனைவரும் அவர் அவர்களுக்கு கொடுத்த வேடங்களை கதாபாத்திரங்களாகவே மாறி நடித்திருப்பார். இந்த படத்தில் ஒரு மிகபெரிய கதையை மக்களுக்கு புரிய வைக்கும் வண்ணத்தில் இயட்டறப்பட்டது. கதையை புரிய வைப்பதற்கே நேரம் இல்லாததால் பாடலுக்கு இடம் இல்லை. அதிலும் விஜய் சேதுபதி ஒரு திருநங்கையாக நடித்திருப்பது பார்போரை பிரம்மிக்கவைத்தது. இந்த படம் நான்கு குழுக்களை சுற்றி சுழல்கிறது. இந்த படம் பல விருதுகளை பெற்றது. தடைகளை தாண்டி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது அனைவராலும் ரசிக்கப்பட்ட படம்.

கைதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019 ம் ஆண்டு வெளிவந்த படம் தான் கைதி. இத்திரைபடத்தில் கார்த்திக் , அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். ஒரே நாளில் நடக்ககூடிய கதை தன்னை துரத்தும் குற்றவாளிகளை தவிர்க்கும்போது, தனது மகளை சந்திப்பதற்காக விஷம் அருந்திய காவல்துறையினரை காப்பாற்ற நேரத்தை எதிர்த்து ஓடும் கதையாகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் பிரியாணி சாப்பிடுவது மக்களிடையே பெரும் பரபரப்பை ஈற்படுத்தியது. இது சமூக வலைதளங்களில் இன்னமும் மீம் டெம்ப்ளேட் ஆக உள்ளது. இந்த படத்தின் கதை மக்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக பாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால் இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது. மக்களிடையே பாராட்டுகளை பெற்றபடம்.

இவை மட்டுமல்லாமல் கேம் ஓவர், யூ டர்ன், வன யுத்தம், ஆரண்ய காண்டம், ஷாக், பசி மற்றும் பல படங்கள் பாடல்கள் இல்லாமல் வெளிய்டான படங்கள் தான். இது போன்ற படங்களில் ஒரு சில படங்கள் தோல்வியை தழுவினாலும் பல படங்கள் வெற்றி கண்டன.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.