தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தற்போதைய படங்களின் பட்ஜெட் விதிமுறைகள் மற்றும் புது படங்களுக்கான டிஜிட்டல் ரைட்ஸ் உரிமம் தொடர்பான விதிமுறைகள் பற்றி கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக பெரிய ஹீரோக்கள் மீது தொடர்ந்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று நடிகர் தனுஷ் மீது கொடுக்கப்பட்ட கண்டனத்தில், அவர் அடுத்தடுத்து படங்களில் நடிக்க முன்பணம் பெற்று, சில படங்களுக்கு கால்ஷீட் தராமல் ஏமாற்றி வருகிறார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை அடுத்து, நடிகர் தனுஷ்க்கு ‘Red Card’, அதாவது எந்த தயாரிப்பாளரும் மற்ற திரை துறையினரும் தனுஷை வைத்து படப்பிடிப்பு நடத்தக்கூடாது அன்று தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டது. நடிக்க ஒப்புக்கொண்டு முன்பணம் வாங்கி, நடித்து முடிக்காமல் வேறு படங்களில் நடித்துவருகிறார் தனுஷ் என சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, தமிழ் சினிமா நடிகர் சங்கம் சார்பில் இந்த குற்றச்சாட்டை ஏற்க மறுத்துள்ளனர்.
நடிகர் சங்கம் சார்பில் உறுப்பினர்கள் நடிகர் கார்த்தி, நடிகர் கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடிகர் கார்த்தி பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, இதற்கு முன் எந்தவித சர்ச்சை ஏற்பட்டாலும் அதை நடிகர் சங்கத்துடன் பேசி தான் முடிவெடுத்தார்கள் என்றும், இப்போது எடுத்திருக்கும் இந்த முடிவு கலந்தாலோசிக்கவில்லை என கூறினார்கள்.
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சில விதிமுறைகள் முன்வைக்கப்பட்டது.
- முன்னணி நடிகர்களின் படங்கள் தற்போது வெளியாகி 4 வாரங்களில் OTT தளங்களில் வெளியாகிறது. அதை மாற்றி, வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு தான் OTTக்கு விற்கப்படவேண்டும்.
- ஒப்பந்தமான தயாரிப்பு நிறுவனத்துடன் தான் நடிகர் நடிகைகள் படத்தை நடித்து முடித்துவிட்டு, அதற்கு பிறகே மற்ற புதிய தயாரிப்பு நிறுவனங்களுடன் பணிபுரியலாம்.
- தற்போது வெளியாக தயாராக உள்ள படங்களுக்கே திரையரங்குகள் கிடைக்காமல் இருப்பதால், ஆகஸ்ட் 15 -க்கு பிறகு எந்த படங்களும் படப்பிடிப்பை தொடங்க கூடாது. ஏற்கனவே படப்பிடிப்பில் உள்ள படங்களை நவம்பர் 1 -க்குள் படமாக்கி முடிக்க வேண்டும்.

இதுபோன்ற இன்னும் பல விதிமுறைகளை திரைத்துறையினர் பின்பற்ற வேண்டும் என்ற நோட்ஸை வெளியிட்டுள்ளது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். இந்த மாதிரியான சர்ச்சைகள் இதற்கு முன்னரும் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]