கொரோனா ஊரடங்குக்கு பின் OTT தளங்களின் ஆக்கிரமிப்பும், திரையரங்குகளுக்கு செல்வதன் குறைபாடு பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டாலும், இன்றளவும் திரையரங்குகளை நோக்கி ரசிகர்கள் படையெடுத்து வருவது ஆரோக்கியமான வழக்கமாக பார்க்கப்படுகிறது. முக்கியமாக 2024ல் முதல் பாதியில் பெரிதாக திரையரங்குகளில் ஓடாத தமிழ் படங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகி, தியேட்டர்கள் களைகட்டுகிறது.

தியேட்டர் உரிமையாளர்களுக்கு இதில் லாபம் தானே? என்று கேட்டால் அதற்கு முட்டுக்கட்டையாக குறுக்கே வருவது OTT தளங்கள் தான். நடைமுறையில் பின்பற்றப்படும் OTT தளத்தின் விதிமுறைகள் மற்றும் உரிமம் பற்றிய மாற்றங்கள் வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் மற்றும் FEFSI சங்கங்கள் சமீபத்தில் சில முடிவுகளை எடுத்துள்ளனர்.
தியேட்டர் உரிமையாளர்கள் சந்திக்கும் சிரமங்கள்
இத்தகைய வழக்கத்தில் பெரிய ஹீரோக்களின் படங்களை வார இறுதியில் வெளியிட்டு, இரண்டு வாரங்கள் தியேட்டரில் ஓட்டுவது பெரிய சவாலாக இருக்கிறது. ஒரு பெரிய பொருட்செலவில் உருவாகும் படம், வெளியாவதற்கு முன்னரே முன்னணி OTT நிறுவனங்களான Netflix, Amazon Prime, Hotstar, Zee 5 போன்ற பல நிறுவனங்கள், அந்த படத்துக்கு பல கொடிகள் கொடுத்து உரிமத்தை வாங்குகிறது.
இதை தெரிந்து மக்கள் பலரும் OTT யில் வெளியான பின் பார்த்துக்கொள்ளலாம் என நினைப்பதும், முதல் வாரத்திலேயே பல இணையத்தளங்களில் படத்தை Theater Print ஆக வெளியிடும் சிலரும் திரையரங்க உரிமையாளர்களுக்கு சிக்கலாக அமைகிறார்கள்.
அடேங்கப்பா!! 100 கோடிக்கு Kanguva படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்கிய Amazon Prime!
2024ல் குறிப்பாக பெரிய ஹீரோக்களின் படங்களை குறைந்தபட்சம் இரண்டு வரங்களாவது திரையிட்டு வசூலிக்கலாம் என்ற திட்டம், வாராவாரம் போட்டி போட்டு வெளியாகும் படங்களால் குறைந்த நாட்கள் மட்டுமே திரையிட சாத்தியமாகிறது.
தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்த கோரிக்கைகள்
திரைப்படங்கள் வெளியான தேதியில் இருந்து குறைந்தபட்சம் 8 வாரங்கள் கழித்து தான் OTT யில் வெளியாகவேண்டும். சிறிய பட்ஜெட் படங்களுக்கு 6 வார இடைவேளை வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
திரையரங்குகளில் டிக்கெட் விலை உயர்த்தவேண்டும். Multiplex தியேட்டர்களில் ரூ. 250, AC தியேட்டருக்கு ரூ. 200, AC வசதி இல்லாத திரையரங்குகள் ரூ. 150 விலை வேண்டும் என்றும். இந்த விலைகளுடன் வரிகள் சேராது.


Source : X (sekartweets)
தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகும் முதல் காட்சியின் நேரத்தில் தான் மற்ற மாநிலங்களில் வெளியாகவேண்டும். பெரிய ஹீரோக்களின் படங்கள் பெங்களூரு மற்றும் கேரளத்தில் 4 மணிக்கே வெளியாவது தவிர்க்கவேண்டும்.
தமிழ்நாட்டில் தற்போது 5 காட்சிகள் திரையிடப்படுகிறது. மேலும் ஒரு காலை காட்சியை சேர்க்கவேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை.
தயாரிப்பாளர் சங்கத்தினர் மற்றும் FEFSI முன்வைத்த கோரிக்கை
தயாரிப்பாளர் சங்கத்தினர் மற்றும் Film Employees Federation of South India (FEFSI) சங்கத்தினர் இணைந்து புது விதிமுறைகள் பிறப்பித்துள்ளனர். அதில் தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு தமிழ் நடிகர்கள் வேலைவாய்ப்பு, தமிழ்நாடு அல்லாத வேறு மாநிலத்தில் படப்பிடிப்பு நடந்தாலும் தமிழ் நடிகர்கள் இங்குள்ள தொழிலார்களை பயன்படுத்த வேண்டும்.
படப்பிடிப்பு சரியான நேரத்தில் முடியாவிட்டால் அல்லது பட்ஜெட் தீர்ந்துவிட்டால், அதை தயாரிப்பாளர் கடிதம் வழியாக தெரிவிக்கவேண்டும்.


கதை திருட்டை தவிர்க்க, இயக்குனர் கதையாசிரியராக இருக்கும் நிலையில், அந்த கதையை பதிவு செய்து, அந்த கதைக்கு இயக்குனர் தான் பொறுப்பு. தயாரிப்பாளருக்கு அந்த கதைக்கும் சம்பந்தமில்லை.
ஒப்பந்தமான தயாரிப்பு நிறுவனத்துடன் தான் நடிகர் நடிகைகள் படத்தை நடித்து முடித்துவிட்டு, அதற்கு பிறகே மற்ற புதிய தயாரிப்பு நிறுவனங்களுடன் பணிபுரியலாம்.
ஆகஸ்ட் 15 -க்கு பிறகு எந்த படங்களும் படப்பிடிப்பை தொடங்க கூடாது. ஏற்கனவே படப்பிடிப்பில் உள்ள படங்களை நவம்பர் 1 -க்குள் படமாக்கி முடிக்க வேண்டும்.
திரையரங்குகள் vs OTT சிக்கலுக்கு தீர்வு
சமீபத்தில் 2024ன் சிறந்த இயக்குனர்கள் ஐவரை நேர்காணல் செய்தது The Hollywood Reporter பத்திரிக்கை. அதில் தமிழ் இயக்குனர்கள் வெற்றிமாறன் மற்றும் பா. ரஞ்சித் கலந்துகொண்டு பேசினார்கள். முக்கியமாக திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்கும் கலாச்சாரம் குறைந்து வருகிறதா? என்ற கேள்விக்கு தங்களின் கருத்துக்களை பகிர்ந்தார்.

இயக்குனர் வெற்றிமாறன் கூறுகையில், OTT தளங்களில் இப்போது புது விதிமுறைகள் வந்துள்ளதாகவும், அதையும் தாண்டி “தியேட்டரில் படங்கள் வெளியாவதால் Box Office குறியாகிறது என்பது தவறு. OTT தளங்கள் ஒரு ரஜினிகாந்த் படுத்துக்கோ, விஜய் படுத்துக்கோ 100 கொடிகள் பட்ஜெட் நிர்ணையித்ததால், இப்போதும் 100 கொடியளவில் பொருட்செலவு செய்தால் தான் இயக்குனர்கள் பெரியளவில் படம் இயக்கவோ அதை வைத்து Box Office Hit கொடுக்க முடியும் என்ற எண்ணத்தில் உள்ளனர்”.
2020 முதல் OTT திரைப்படங்களை வாங்கி விற்பதையடுத்து, படங்களை தயாரிக்கவும் தொடங்கியதும், படங்களை உருவாகும் செலவும் அதிகமாகியுள்ளது. இதனால் அந்த படங்களில் நடிக்கும் நடிகர்களும் தங்களின் சம்பளத்தை உயர்த்தி, மொத்த படத்தின் பட்ஜெட்டில் பெரும்பகுதியை தங்கள் வசம் எடுத்துக்கொள்வது நீண்ட நாட்கள் நல்ல சினிமா இயக்குவதற்கு ஆரோக்கியமானதாக அமையாது.
Source : The Hollywood Reporter India
இந்த நேர்காணலில் இயக்குனர் பா. ரஞ்சித் கூறியதாவது, “இன்றும் தியேட்டர் தான் ஒரு ஜனநாயக இடமாக, எவ்வித கருத்தையும், எல்லாரும் தடையின்றி சினிமாவை ரசிக்கும் இடம்” என கூறினார். இவரின் கருத்துக்கு சான்றாக, இன்றும் மக்கள் வார இறுதியானால் திரையரங்குகளுக்கு குடும்பமாக சென்று படம் பார்ப்பதும், இளைஞர்கள் பலரும் கூட்டமாக செல்வதும் நடந்துகொண்டிருக்கிறது.

மேலும் OTT நிறுவனங்கள் ஆரம்பத்தில் எவ்வித சார்பும் இல்லாமல், படங்களின் கதையை மதிப்பிட்டு மட்டுமே வெளியிட்டனர். இப்போது கமர்ஷியல் மற்றும் பெரிய ஹீரோக்களின் படங்களும் OTT நிறுவனங்களின் வழியாக லாபம் ஈட்ட நினைப்பதால், Art Films என்று சொல்லப்படும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறிய பொருட்செலவில் உருவாகும் படங்களை வாங்க மறுப்பதும், பல மதம் சார்ந்த, சமூகம் சார்ந்த விதிமுறைகளை விதிப்பதையும் இந்த நேர்காணலில் பேசினார்கள்.
சில மாதங்களுக்கு முன் தயாரிப்பாளர் K. E ஞானவேல் ராஜா ஒரு நேர்காணலில் பேசும்போதும், தியேட்டர்களுக்கு மக்கள் வராமல் இருப்பதற்கு மற்றொரு முக்கியமான காரணம், திரையரங்கில் அதிக விலையில் விற்கப்படும் உணவு என அவர் கூறினார். சமீபத்தில் ஹிந்தி இயக்குனர் Zoya Aktar மற்றும் இயக்குனர் Karan Johar இதை பற்றி ஆழமாக பேசினார்கள்.

ஒரு குடும்பமாக சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு படம் பார்க்க சென்றால், அங்கு விற்கும் உணவுகளின் விலையே டிக்கெட் விலையை விட 10 மடங்கு இருப்பதாகவும், மாதத்தில் 4 – 5 படங்கள் பார்த்துவந்த பழக்கம் இந்த விலை உயர்வால் மாறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைப்பற்றி தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் எந்தவித கருத்தும் கூறப்படவில்லை.
திரைப்படங்களையும் தமிழ் மக்களையும் இன்றளவும் பிணைத்து வைத்திருப்பது தியேட்டர்கள் தான். இத்தககைய முக்கியத்துவம் இருந்தாலும், OTT போன்ற தொழில்நுட்ப சிக்கல்கள் இந்த கலாச்சாரத்தை சிதைக்கும் என்பதற்கு சினிமா ரசிகர்கள் தான் பதிலளிக்கவேண்டும்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]