தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் போனவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். சமீபத்தில் ஒரே ஷாட்டில் எடுத்த படம் ‘இரவின் நிழல்’ போல புதிய கதைகளை எடுக்கும் பார்த்திபன் தற்போது டீனேஜ் பசங்களை வைத்து ‘Teenz’ படத்தை இயக்கியுள்ளார்.

13 சிறுவர்கள் தங்களை இன்னும் குழந்தைகளாக பார்க்கும் பெற்றோர்களுக்கு பாடம் புகட்ட பள்ளியை ஒரு நாள் பங்க் அடித்து அதில் ஒரு மாணவியின் பாட்டி ஊருக்கு செல்ல முடிவெடுக்கின்றர். அப்படி ஒரு நாள் ஸ்கூலை கட் அடித்து கிளம்பும் அவர்கள் நடுவில் பல அமானுஷ்யங்களை சந்திக்கிறார்கள். படத்தின் முதல் பாதி முழுவதும் அவர்கள் அனுபவிக்கும் விசித்திரமான சம்பவங்கள் மட்டும் தான்.
இரண்டாம் பாதியில் இந்த சிறுவர்களை தாண்டி ஒரு பாத்திரம் அறிமுகமாகிறது, அவர் தான் பார்த்திபன். ஒரு வானியல் இயற்பியலளராக (Astrophysicist) வருகிறவர், வேறு ஒரு கோணத்தில் கதையை திருப்ப முயற்சித்து, ஒரு கட்டத்தில் அந்த சிறுவர்களை சந்திக்கும் முனைப்பில் கதையை எழுதி அதை திரையில் காட்சிப்படுத்த தவறிவிட்டார்.
படத்தின் பலம்

தொடக்கத்தில் வரும் பாடலும், அதில் நடித்துள்ள சிறுவர்களின் பெயரை வைத்து வரும் வரிகள் பிரமாதம். நடித்த சிறுவர்களும் நல்ல திறமைகளாக தெரிகிறார்கள்.
டி. இமான் இசை படத்தில் பல இடங்களில் கை கொடுத்திருக்கிறது. பின்னணி இசை சில இடங்களில் பொருந்தியுள்ளதும் பலம்.
படத்தின் பலவீனம்
பள்ளி படிக்கும் சிறுவர்கள் முற்போக்கு சிந்தனையுடன் இருப்பது நல்லது தான், அதை செயலில் காட்ட அவர்கள் எடுக்கும் முடிவுகளும், வசனங்களும் எரிச்சலை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
நிஜத்தில் Gen Z கலாச்சாரத்தில் வளரும் சிறுவர்கள் இப்படியான கண்ணோட்டத்தில் இருக்கிறார்களா என்பதை அலசாமல், படத்துக்காக சிறுவர்களின் வாழ்க்கையில் ஒரு நாளை இப்படி கற்பனை செய்திருப்பது ஏற்றுக்கொள்ள சிரமாமக உள்ளது.
பின்னணி இசை உதவியிருந்தாலும் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. காட்சிகளில் செயற்க்கையாக சேர்க்கப்பட்ட பாடல்கள் சலிப்பை ஏற்படுத்துகிறது.

சைன்ஸ் ஃபிக்ஷன் மாதிரி கதை நகரும் போது படத்தில் பார்த்திபன் திடீரென நீண்ட அறிவியல் ஆய்வுகள் பற்றியும் நடந்ததை பற்றி பேசுவது தேவையில்லாதது. பார்க்கும் ஆடியன்சுக்கும் உடன் நடிக்கும் நடிகர்களுக்கும் அதனால் எந்த தெளிவும் ஏற்படவில்லை.
யோகி பாபுவின் கதாப்பாத்திரம் முதல் பாதியில் வரும்போது படத்தில் நல்ல ஒரு பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அவரை மறந்து இரண்டாம் பாதியில் ஒரு காட்சியில் வந்து நகைச்சுவைக்கு முயற்சித்துள்ளனர்.
படத்தின் மையமாக குழந்தைகள் இருப்பதும் திடிரென்று அவர்களுக்குள் வரும் காதல் மற்றும் பேசப்படாத கருத்துக்கள், பார்த்திபனின் பாத்திரமும் குழப்பமாக அமைந்தது. படத்தின் பட்ஜெட் குறைவானது என்பது பல நேரங்களில் தெரிகிறது. முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் பெரிய மாற்றங்கள் ஏற்ப்பட்டது பார்ப்பவர்களின் பொறுமையை சோதிப்பதாக உள்ளது.
ஆக மொத்தம் Teenz படம் தேவையில்லாத தேடலில் உருவான சலிப்பான சிறுவர்கள் படம். இதில் இரண்டாம் பாகம் Teenz 2 வர வாய்ப்புள்ளதாக படம் முடியும்போது சொல்லியுள்ளனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]