கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யின் கைவசம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The GOAT) மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கும் படம் என இரண்டு படங்கள் மட்டுமே உள்ளது. இதில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை பிரபல நடிகரும், இயக்குநருமான வெங்கட் பிரபு இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இப்படத்திற்கு பிறகு ‘சதுரங்க வேட்டை’ புகழ் ஹெச்.வினோத் இயக்கப்போகும் படம் விஜய்யின் கேரியரில் 69-வது படமாம். இப்படத்தின்அறிவிப்பு இம்மாத இறுதியில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விஜய் நடிப்பில் 2004-ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான ‘கில்லி’ படம் வருகிற ஏப்ரல் 20-ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Get ready to witness the full #Ghilli performance of THALAPATHY @actorvijay sir on big screens once again! 🔥
— Mega Surya Production (@MegaSuryaProd) April 3, 2024
Let's celebrate the massiest cult blockbuster of Namma Vijay Anna in theatres this 20th April commemorating its 20th Anniversary! 💥 pic.twitter.com/fUwFXSMu5n
இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமே தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் ‘தளபதி’ விஜய்-க்கு ஜோடியாக த்ரிஷா டூயட் பாடி ஆடியிருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், தாமு, ஆஷிஷ் வித்யார்த்தி, மயில்சாமி, பொன்னம்பலம், பாண்டு, ஜெனிஃபர் ஆகியோர் நடித்திருந்தனர்.
இயக்குநர் தரணி இயக்கியிருந்த இந்த படம் விஜய்யின் கேரியர் கிராஃப்பில் ரொம்ப முக்கியமான படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார், கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com