Home Cinema News சாய் பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்த ‘தளபதி’ விஜய்… வைரலாகும் புகைப்படம்!

சாய் பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்த ‘தளபதி’ விஜய்… வைரலாகும் புகைப்படம்!

by Naveen Dhayalan

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யின் கைவசம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The GOAT) மற்றும் ‘தளபதி 69′ என இரண்டு படங்கள் மட்டுமே உள்ளது. இதில் ‘The GOAT’ படத்தை பிரபல நடிகரும், இயக்குநருமான வெங்கட் பிரபுவும், ‘தளபதி 69’ படத்தை பிரபல இயக்குநர் ஹெச்.வினோத்தும் இயக்குகின்றனர்.

‘The GOAT’ படத்தின் படப்பிடிப்பு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இது விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் முதல் படம் என்பதால், ஆடியன்ஸுக்கு இப்படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் மிக அதிகமாக உள்ளது. 

ஹெச்.வினோத் இயக்கப்போகும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் தான் வரப்போகிறது. 2K கிட்ஸின் ஃபேவரைட் இசையமைப்பாளர் அனிருத் தான் இதற்கு இசையமைக்கப்போகிறார்.

தனது திரையுலக வாழ்வில் கடைசி படமான ‘தளபதி 69’-க்காக விஜய்-க்கு ரூ.250 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. இந்நிலையில், இன்று நடிகர் விஜய் துபாயில் உள்ள சாய் பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்ததாக தகவல் வெளியானதுடன், அங்கே எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.