Home Cinema News குழந்தை சிரிப்பு, காதல் நாயகன், சுட்டித்தனம் கொண்ட விண்டேஜ் இளைய Thalapathy Vijay!!

குழந்தை சிரிப்பு, காதல் நாயகன், சுட்டித்தனம் கொண்ட விண்டேஜ் இளைய Thalapathy Vijay!!

இப்பொது மாஸ் ஹீரோவாக வலம்வந்து கொண்டிருக்கும் Thalapathy Vijay, 2000 காலகட்டத்தில் காதல் மன்னனாக, குறும்புத்தனமாக, காமெடியில் கலக்கி அன்றைய இளசுகளை தனது நடிப்பால் மயக்கி வைத்திருந்தார்.

by Sudhakaran Eswaran

சினிமாவில் தனது ஆரம்ப காலத்தில் பல்வேறு சோதனைகளை கடந்து, இயக்குனர் மகன் என்ற பிம்பத்தை உடைத்து தனக்கொரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் தளபதி விஜய். நடிக்க தொடங்கிய ஆரம்ப காலத்தில் இந்த அளவிற்கு ரசிகர் பட்டாளத்தை சம்பாரிக்க முடியுமா என்று அவரது கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். இதற்க்கு ஒரே காரணம் தனது நடிப்பை மட்டுமே நம்பினார். எந்த சூழ்நிலையிலும் நடிப்பை மட்டும் விடாமல் தொடர்ந்து நடித்து வந்தார். வெற்றி, தோல்வி என விஜய்யின் படவாழ்க்கை மாறி மாறி அமைந்தது. தோல்வி வந்த போதில் மனம் தளராமல் வெற்றியை நோக்கி பயணம் செய்தார். 2000 கால கட்டத்தில் குழந்தை சிரிப்பு, எதார்த்தமான நடிப்பு என கிளாஸ் ஹீரோவாக வலம்வந்து கொண்டிருந்தார்.       

அந்த காலகட்டத்தில் விஜய் குறிப்பிட சில படங்களில் தனது நடிப்பால் மக்கள் மனதை கொள்ளையடித்திருந்தார். அந்த படங்கள் வியாபார ரீதியாகவும், ரசிகர்கள் ரசிக்கும்படியாகவும் வெற்றி பெற்றன. 

பூவே உனக்காக

1996-ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான “பூவே உனக்காக” என்ற படத்தின் மூலம் விஜய் சினிமா உலகிற்கு தனது நடிப்பால் தன்னை நிரூபித்தார். ஆரம்ப காலகட்டத்தில் நடித்த படங்கள் சரியாக அமையாமல் தவிர்த்து வந்த விஜய்க்கு இந்த படம் பேர் சொல்லும் படியாக இருந்தது. பல அவமானங்களை கடந்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். நம்பியார், நாகேஷ், சங்கீதா, ஜெய் கணேஷ், மலேசியா வாசுதேவன் ஆகியோர் நடித்திருந்தனர்.  

நேருக்கு நேர்

1997-ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் விஜய், சூரியா முதன் முதலில் இணைந்து நடித்த படம் “நேருக்கு நேர்“. இருவருக்கும் முக்கியத்துவம் தந்து கதையை சிறப்பாக எடுத்திருப்பார் இயக்குனர். “அவள் வருவாளா, மனம் விரும்புதே” என இரண்டு பாடல்களும் ஹிட் அடித்தது. அதே ஆண்டு எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான “ஒன்ஸ் மோர்” படத்தில் சிவாஜி கணேசன்,சரோஜா தேவி ஆகியோருடன் நடித்திருப்பார். 

நினைத்தேன் வந்தாய்

தெலுங்கு படத்தின் ரீமேக் ஆனா “நினைத்தேன் வந்தாய்” என்ற படத்தை செல்வா பாரதி இயக்கியிருப்பார். இதில் ரம்பாவை தனது கனவில் நினைத்து நேரில் கண்டு காதலித்து வந்திருப்பார். பின்னர் அப்பாவின் வற்புறுத்தலால் வேறு பெண்ணை திருமணம் செய்ய பார்க்க சென்ற போது ரம்யாவின் அக்காவாக தேவயானி இருப்பார். இந்த மூவருக்கிடையில் நடக்கும் சுவாரசியமான கதையை காமெடி கலந்து அழகாக இயக்குனர் எடுத்திருப்பார்.   

துள்ளாத மனமும் துள்ளும்

1999-ஆம் ஆண்டு எழில் இயக்கத்தில் வெளியான “துள்ளாத மனமும் துள்ளும்” என்ற படம் விஜய் சினிமா வாழ்க்கையில் உச்சத்திற்கு கொண்டு சென்றது. குட்டி கதாபாத்திரத்தில் தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ருக்குமணியாக சிம்ரன் கண்பார்வை இல்லாமல் இருந்த போது உதவி செய்து கலெக்டர் ஆக்கியிருப்பர். பின்னர் இறுதியில் இருவரும் சேர்ந்தார்களா என “இன்னிசை பாடி வரும்” என்ற பாடலில் கிளைமாக்ஸ் காட்சி அமைந்திருக்கும்.   

மின்சார கண்ணா

1999- ஆம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான மின்சார கண்ணா என்ற படத்தில் விஜய், ரம்பா, மோனிகா காஸ்டெலினோ, குஷ்பு, மணிவண்ணன், மன்சூர் அலி கான், கரண், ஆர். சுந்தர்ராஜன், மனோ பாலா, மதன் பாபு, மாஸ்டர் மஹேந்த்ரன், கே.எஸ். ரவிக்குமார் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். அக்கா, தங்கை பாசம் மற்றும் காதலுக்காக எதையும் செய்ய தயாராக இருந்த குடும்பம் என காமெடி கலந்த சென்டிமெண்டாக படம் இருந்தது.    

குஷி

எஸ்.ஜே. சூரியா இயக்கத்தில் விஜய், ஜோதிகா கூட்டணியில் கல்லூரி மாணவனாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த படம் குஷி. அம்மாவின் செல்ல பிள்ளையாக எதார்த்தமான கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் விஜய். இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது.

ப்ரியமானவளே

2000-ஆம் ஆண்டில் விஜய், சிம்ரன் கூட்டணியில் மெகா ஹிட்டான படம் ப்ரியமானவளே. இதில் கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் உறவை அழகாக காட்டியிருப்பார் இயக்குனர் செல்வா பாரதி. கணவன் எப்படி இருக்க கூடாது என்று முதல் பாதியிலும், மனைவியை கணவன் எப்படி புரிந்து கொண்டார் என்று இரண்டாவது பாதியிலும் காட்டியிருப்பார். எஸ்.பி. பாலசுப்ரமணியம், விவேக், வையாபுரி, ராம்ஜி, டெல்லிகணேஷ், தலைவாசல் விஜய் ஆகியோரும் நடித்திருந்தனர். இது விஜயின் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது. 

பிரண்ட்ஸ்

2001-ஆம் ஆண்டு விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா  ஆகியோர் கூட்டணியில் காமெடியில் மெகா ஹிட்டான பிரண்ட்ஸ் படத்தை சித்திக் இயக்கியிருப்பார். வடிவேலு உடன் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, சார்லி ஆகியோர் செய்யும் காமெடி பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். தேவயானி, விஜயலட்சுமி, அபிநயா ஸ்ரீ, ராதா ரவி, மதன் பாபு என்று நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும்.  

பத்ரி

தெலுங்கு ரீமேக் படமான பத்ரி 2001-ஆம் ஆண்டு பி.ஏ. அருண் பிரசாத் இயக்கத்தில் வெளியானது. இந்த படத்தில் பொறுப்பில்லாமல் இருந்து வந்த விஜய் தனது அண்ணனுக்கு ஏற்பட்ட விபத்தால் பாக்ஸிங் கற்றுக்கொள்வார். பூமிகா, மோனல், ரியாஷ் கான், விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டானது.  

ஷாஜஹான்

2001-ஆம் ஆண்டு இயக்குனர் ரவி, தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்திரி, இசையமைப்பாளர் மணி சர்மா கூட்டணியில்  வெளியான படம் ஷாஜஹான். கிட்டத்தட்ட 125 நாட்கள் தியேட்டரில் ஓடி வெற்றி கண்டது. விஜய், ரிச்சா பல்லோட், விவேக், கோவை சரளா, நிழல்கள் ரவி ஆகியோர் நடித்திருந்தனர். காதலர்களை சேர்த்து வைக்கும் விஜய் கடைசியாக தனது காதலை வெளிப்படுத்த முடியாமல் தவித்திருக்கும் காட்சிகள் பார்ப்போரை கண்ணீர் வர வைத்தது. “உண்மை காதல் என்றால் சொல் உயிரை தந்து சேர்த்து வைக்கிறேன்” என்று விஜய் பேசிய வசனம் காதலின் மகிமையை உணர்த்தியது.  அனைத்து பாடல்களும் ஹிட் அடிக்க நடிகை மீனாவுடன் விஜய் “சரக்கு வெச்சிருக்க” என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருப்பார். 

தமிழன்

2002-ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் மஜித், இசையமைப்பாளர் டி.இம்மான் ஆகியோர் கூட்டணியில் சமூக சேவை செய்யும் வக்கீலாக விஜய் நடித்த படம் தமிழன். அனைவரும் சட்டம் அறிய வேண்டும் என்ற கருத்தை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில் நீதிமன்றத்தில் விஜய் வாதாடும் காட்சிகள் மாஸாக இருக்கும். இந்த படத்தில் ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தமிழில் அறிமுகமாகியிருப்பார். ரேவதி, நாசர், விவேக், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்து மாபெரும் வெற்றியை தந்தது. 

யூத்

தெலுங்கு ரீமேக் படமான யூத் 2002-ஆம் ஆண்டு வின்சென்ட் செல்வா இயக்கத்தில் மணி சர்மா இசையில் வெளி வந்தது. இதில் விஜய், சந்தியா, விவேக், மணிவண்ணன், விஜய் குமார் உள்ளிடோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜய் குறும்பு தனமாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த படத்தில் 2,3 பாடல்கள் ஹிட் அடிக்க சிம்ரன் உடன் குத்தாட்டம் போட்ட “அட ஆல்தோட்ட பூபதி நானடா” என்ற பாடல் அன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்தனர். 

அதற்க்கு பின்னர் பல படங்களில் நடித்து வந்த விஜய் 1995 முதல் 2000 காலகட்டத்தில் நடித்த படங்கள் போல இருந்ததில்லை.  

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.