தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் இறுதியாக ‘லியோ’ என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த நிலையில் இதனைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
![100 கோடியில் மொத்த படமும் ஓவரா? ‘GOAT’ படத்தின் பட்ஜெட் என்ன? 2 GOAT Poster](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/06/goat-1024x608.jpg)
இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பர் 5-ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் கல்பாத்தி அளித்த பேட்டி ஒன்றில் ‘GOAT’ படத்தின் பட்ஜெட் குறித்து பேசி உள்ளார்.
அதாவது ‘GOAT’ திரைப்படம் மொத்தமாக 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருப்பதாகவும் தங்களது தயாரிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் திரைப்படம் இதுதான் எனவும் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு தளபதி விஜய் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் இவர் பட்ஜெட் குறித்து பேசி உள்ள தகவல் விவாதமாக மாறி உள்ளது.
![100 கோடியில் மொத்த படமும் ஓவரா? ‘GOAT’ படத்தின் பட்ஜெட் என்ன? 3 GOAT Vijay](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/06/goat-vijay-1024x445.jpg)
படத்தின் மொத்த பட்ஜெட்டில் 75% தளபதி விஜய்க்கு சம்பளமாக சென்றுவிட்ட நிலையில் மீதி 25% பட்ஜெட்டில் மொத்த படத்தையும் எடுத்தது மட்டுமல்லாமல் மற்ற நடிகர் நடிகைகளுக்கு சம்பளம் வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழ தொடங்கியுள்ளது.