Home Cinema News சென்னை திரும்பினார் GOAT விஜய்!!

சென்னை திரும்பினார் GOAT விஜய்!!

GOAT படத்தில் செய்யப்பட்ட இருக்கும் டீஏஜிங் தொழில்நுட்ப வேலைகளுக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்குச்சென்றுவிட்டு நேற்று சென்னை திரும்பினார் நடிகர் விஜய். 

by Santhiya Lakshmi

GOAT படத்தில் செய்யப்பட்ட இருக்கும் டீஏஜிங் தொழில்நுட்ப வேலைகளுக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்குச்சென்றுவிட்டு நேற்று சென்னை திரும்பினார் நடிகர் விஜய். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக, கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இணையாக இருக்கிறார் நடிகர் விஜய். அரசியலுக்கு வரப்போகிறேன் என பல பிரஸ்மீட்கள் கொடுத்த ரஜினிகாந்தே அரசியலுக்கு வராதநிலையில், விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார்.

‘தமிழக வெற்றி கழகம்’ என கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய், கடைசி இரண்டு படங்கள் என அறிவித்துவிட்டு GOAT  மற்றும் இன்னொரு படத்துக்கு மட்டுமே டேட்ஸ் கொடுத்திருக்கிறார். இதில் GOAT படத்தில் விஜய் நடிக்கவேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது. இதனால் சினிமா வேலைகளுக்கு சின்ன பிரேக் கொடுத்துவிட்டு அரசியல் கட்சி மீட்டிங், தொண்டர்கள் சந்திப்பு, இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி உட்கட்சி கூட்டங்களில் பங்கேற்க இருக்கிறாராம். இதனால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ‘நோ சினிமா… ஒன்லி பாலிட்டிக்ஸ்’ என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.

GOAT படத்தில் இணைகிறார் நடிகர் யுகேந்திரன்! 

இதற்கிடையே இயக்குநர் ஹெச்.வினோத் விஜய்யின் அடுத்தப்படத்துக்கான கதையோடு தயாராக இருக்கிறார். இதற்கான காஸ்ட்டிங் வேலைகளும், இறுதிக்கட்ட ஸ்கிரிப்ட் வேலைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப்படத்துக்கான ஷூட்டிங் அநேகமாக ஆகஸ்ட்டில் தொடங்கலாம் எனத் தெரிகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.