Home Cinema News GOAT ஆக்‌ஷன் படமே இல்லை..கங்கை அமரன் சொன்ன உண்மை!

GOAT ஆக்‌ஷன் படமே இல்லை..கங்கை அமரன் சொன்ன உண்மை!

GOAT திரைப்படம் குறித்து வெங்கட் பிரபு தந்தை கங்கை அமரன் சுவாரஸ்யமான தகவல் பகிர்ந்திருக்கிறார்.

by Sruthi Balasubramanian

தமிழ் சினிமாவின் தளபதியாக உயர்ந்து நிற்கும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் Greatest of All Time என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து எடிட்டிங் மற்றும் டப்பிங் பணிகள் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது. படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடைபெற்ற நிலையில், விஎஃப்எக்ஸ் பணிகளும் தற்போது  நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. 

GOAT Director

இந்நிலையில் ‘கோட்’ திரைப்படம் குறித்து வெங்கட் பிரபுவின் தந்தையும்  பிரபல இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் சொன்ன சுவாரஸ்யமான தகவல் வைரலாகி வருகிறது. ‘’கோட் திரைப்படத்தில் நான் ஒரு  குத்து பாடலை எழுதி பாடினேன். அதனைக் கேட்டு நடிகர் விஜய் நல்லா இருக்கு என்று என்னை பாராட்டினார். GOAT திரைப்படம் நீங்கள் கற்பனை செய்வது போல் ஆக்ஷன் திரைப்படம் இல்லை. அது ஒரு பக்கா பேமிலி சப்ஜெக்ட் படம்’’ என்று சொல்லி ரசிகர்களை பரவசப்படுத்தியிருகிறார் கங்கை அமரன்!

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.