Home Cinema News “தமிழன் கொடி பறக்குது” த.வெ.க கட்சி கொடியை அறிமுகம் செய்தார் Vijay!!

“தமிழன் கொடி பறக்குது” த.வெ.க கட்சி கொடியை அறிமுகம் செய்தார் Vijay!!

Vijay -க்கு ஆரம்பம் முதலே அரசியலில் ஆர்வம் இருந்ததால் தனது ரசிகர் மன்றம் மூலம் செய்து வந்த சேவையை தற்போது அதிகாரப்பூர்வமாக கட்சி ஒன்றை தொடக்கி சேவையை தொடர உள்ளார். 

by Sudhakaran Eswaran

Vijay -க்கு ஆரம்பம் முதலே அரசியலில் ஆர்வம் இருந்ததால் தனது ரசிகர் மன்றம் மூலம் செய்து வந்த சேவையை தற்போது அதிகாரப்பூர்வமாக கட்சி ஒன்றை தொடக்கி சேவையை தொடர உள்ளார். 

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நபராக இருந்து வரும் Vijay குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று சூப்பர் ஹீரோவாக இந்திய சினிமா அளவில் புகழ்பெற்றுள்ளார். இதற்க்கு காரணம் அவரின் விடா முயற்சி தான். இயக்குனரின் மகன் என்பதை தாண்டி சினிமா உலகில் தளபதி என எல்லோராலும் கொண்டாடப்படும் நபராக இருந்து வருகிறார்.  

நடிகருக்கான தகுதி இல்லை என்று பேசப்பட்ட இடத்தில் காதல் நாயகன், ஆக்சன் ஹீரோ, மாஸ் ஹீரோ, பாக்ஸ் ஆபீஸ் கிங் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னை நிரூபித்து வந்துள்ளார் Vijay.   

நடிப்பில் மட்டுமல்ல போது சேவை செய்வதிலும் கில்லி என்பதை நிரூபிக்கும் விதமாக 2009 ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கம் என்ற சமூக சேவை இயக்கத்தை புதுக்கோட்டையில் தொடங்கினார். தனது ரசிகர்களை நிர்வாகிகளாக மாற்றி தொடர்ந்து பல சமூக சேவைகளை செய்து வந்தார். புயல், மழை வெள்ளம் ஏற்படும் போது தனது இயக்கத்தின் மூலம் பல உதவிகளை செய்து வந்தார். ஏழை மாணவர்களுக்கு உயர் படிப்பிற்கு உதவி வந்தார். 10 மற்றும் 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியருக்கு ஊக்க தொகை அளித்து வந்தார். 

Vijay with Chinnadurai

மக்கள் இயக்கம் தொடக்கி சேவைகள் செய்ய ஆரம்பித்த பிறகு தனது படங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் அரசியல் சார்ந்த பிரச்சனை வர ஆரம்பித்தது. 

படத்தின் இசை வெளியிட்டு விழாவில் விஜய்யின் பேச்சுக்கள் அரசியல் சார்ந்தர்வர்களை விமர்ச்சிக்கும் விதமாக இருக்கிறது என பட வெளியீட்டின் போது சிக்கல் ஏற்பட்டு வந்தது. 

IMG 20240822 WA0023

2013 -ல் தலைவா படத்தில் “Time to lead” என்ற வாசகம் படத்தின் தலைப்பிற்கு கீழ் இடம்பெற்றிருந்தது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி தமிழகத்தில் மாற்றப்பட்டு 2 வாரங்களுக்கு பிறகே தமிழகத்தில் தலைவா படம் வெளியானது. 

அதன் பின்னர் கத்தி படத்தில் இடம் பெற்ற வசனமும் சர்ச்சையானது. அதனை தொடர்ந்து புலி படத்தின் ரிலீஸ் சமயம் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்தது. இதனால் படத்தின் காலை காட்சி ரத்தானது. பின்னர் மதியம் முதல் காட்சிகள் ஒளிபரப்பானது. 

மெர்சல் படத்தில் பண மதிப்பிழப்பு பற்றியும், GST வரி பற்றியும் பேசிய வசனம் மத்திய அரசை நேரடியாக விமர்சிக்கும் படியாக இருந்ததால் பெரிய அளவில் சர்ச்சையானது. அதனை தொடர்ந்து சர்கார் படத்தில் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படம் என்பதால் அரசியல் கட்சியினர் விஜய்யின் அரசியல் சார்ந்த பேச்சுக்களை எதிர்த்து வந்தனர். 

இவ்வாறு அரசியலில் நுழையாமல் அரசியல் சார்ந்த கருத்துகளை படத்தில் பேசியதற்க்கே இவ்வளவு எதிர்ப்பும், சர்ச்சையும் எழுகின்ற நிலையில் நான் முழு நேர அரசியலுக்கு வருகிறேன் என்று விஜய் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்திருந்தார்.

twittervid.com actorvijay 493993

விஜய்க்கு ஆரம்பம் முதலே அரசியலில் ஆர்வம் இருந்ததால் தனது ரசிகர் மன்றம் மூலம் செய்து வந்த சேவையை தற்போது அதிகாரப்பூர்வமாக கட்சி ஒன்றை தொடக்கி சேவையை தொடர உள்ளார். அரசியல் கட்சி தொடக்கி தனது ரசிகர்கள், நிர்வாகிகள் என இளைய தலைமுறையின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளார். 

IMG 20240822 WA0022

தமிழ் சினிமாவின் தளபதி டூ நாளைய அரசியல் தளபதி என விஜய் ரசிகர்கள் விஜய்யின் அரசியல் எண்ட்ரியை கொண்டாடினர். 

இதற்க்கு முன்பு 2011 சட்ட மன்ற தேர்தலில் அதிமுக  தலைமையிலான கூட்டணியை ஆதரித்தது. அதனை தொடர்ந்து 2021 -ல் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் ரசிகர் மன்றம் சார்பாக 169 இடங்களில் போட்டியிட்டவர்கள் 115 இடங்களில் வெற்றி பெற்றனர்.  

இதுவரை Vijay நேரடியாக அரசியலில் நுழையாமல் இருந்து வந்த நிலையில் பிப்ரவரி மாதம் 2 – ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக கட்சி ஒன்றை ஆரம்பித்தார். “தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரில் தலைவராக விஜய் கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற திருக்குறளின் வரியை கட்சி கோட்பாடாக கொண்டு பிறப்பால் அனைவரும் சமம் என்ற நோக்கத்தில் கட்சியை வழிநடத்தவுள்ளார். கட்சி பெயரை அறிவிக்கப்பட்ட நாளிலேயே தேர்தல் ஆணையத்தில் அதிகாரபூர்வமாகப் பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்டது.

வெற்றி கழகம் என்ற வார்த்தைக்கு நடுவில் “க்” வரும் என்று பலரும் கருத்து கூறி வந்த நிலையில் அவர்களின் கருத்துக்களை ஏற்று “தமிழக வெற்றிக்கழகம்” என்று திருத்தம் செய்தார் விஜய்.    

கட்சி தொடங்கிய  2,3 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வந்த நிலையில், நமது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல் தான் என்றும், தமிழக அரசியலில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தகவல் வெளியானது.  

ஆகஸ்ட் 22 பனையூரில் தனது கட்சி அலுவலகத்தில் கொடியை அறிமுகம் செய்து, அங்கு கூடியிருந்த நிர்வாகிகளிடம் உரையாற்றினார். கவிஞர் விவேக் எழுதிய பாடலில் தமன் இசையில் “தமிழன் கொடி பறக்குது… தலைவன் யுகம் பிறக்குது” என்ற வரியில் தொடங்கும் கட்சிக்காக பாடல் திரையிடப்பட்டது. அதை தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். வரும் செப்டம்பர் 5 -ஆம் தேதி விஜய்யின் GOAT படம் வெளியாகவுள்ளது. பட ரிலீஸின் போது திரையரங்கில் பட போஸ்டர் உடன் விஜய் மற்றும் கட்சிக்கொடி இடம் பெறும். 

படம் பார்க்க வருபவர்கள் விஜய்யின் போஸ்டர் உடன் கட்சிக்கொடியையும் பார்ப்பார்கள். இதனால் கட்சிக்கொடியை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்த்து விடலாம் என்ற மாஸ்டர் பிளான் மூலம் படத்தின் ரிலீஸ் முன்பே கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தவுள்ளனர். 

விஜய்யின் ஒவ்வொரு அரசியல் நகர்வும் சரியான நேரத்தில் செய்து வருவதாகவும், வரும் நாட்களில் ஒன்று, இரண்டு படங்கள் மட்டுமே நடிப்பதாகவும் பின்னர் முழு நேர அரசியலில் மக்களின் நலனுக்காக ஈடுபடவுள்ளதாகவும் தெரிகிறது.  

IMG 20240822 WA0024

மேலும் கீழும் சிவப்பு நிறத்திலும், நடுவில் மஞ்சள் நிறத்தில் இரண்டு யானை உருவம் இருக்கும்படி, நடுவில் வாகை மலர் நட்சத்திரங்களுக்கு மத்தியில் இடம்பெற்றிருந்தது.

twittervid.com Ayyappan 1504 fb281a
IMG 20240822 WA0021

என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அனைவரும் பாடுபடுவோம் என்றும், அரசியல் கட்சி அறிவிப்பை பிப்ரவரியில் அறிவித்த பிறகு கொடியை அறிமுகம் செய்த நாளுக்காக காத்திருந்தேன். அடுத்து கட்சியின் முதல் மாநாடு தேதி விரைவில் அறிவிக்கப்படும். அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்காக உழைப்போம். தமிழக மக்களின் வெற்றிக்காக கொடியாக “த வெ க” கொடி அமையும். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் போன்ற நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை தொண்டர்கள் முன்னாள் விஜய் பேசியிருந்தார்.

IMG 20240822 WA0020 1

கொடியை அறிமுகப்படுத்தியதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாக இருந்து வரும் நிலையில் அடுத்த கட்ட அரசியல் பணிகள் என என்பது வரும் நாட்களில் தெரியவரும். மேலும் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு வெளியாகும் படம் GOAT என்பதால் அந்த படத்தின் மீதும் அதிக அளவில் எதிர்பார்ப்பு இருக்கும்.

வரும்நாட்களில் விஜய்யின் அரசியல் பயணம் எந்த மாதிரியாக இருக்கும் என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும். தமிழக அரசியலில் விஜய் தன்னை நிலைநிறுத்தி மக்களுக்காக அரசை அமைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.