Home Cinema News De Aging செய்ய அமெரிக்கா பறந்த விஜய்…  ‘GOAT’ படத்தில் ‘காதலுக்கு மரியாதை’ விஜய்யை பார்க்கலாமாம்!

De Aging செய்ய அமெரிக்கா பறந்த விஜய்…  ‘GOAT’ படத்தில் ‘காதலுக்கு மரியாதை’ விஜய்யை பார்க்கலாமாம்!

செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக இருக்கும் GOAT 'கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில்தான் முழுமையான டீஏஜிங் தொழில்நுட்பத்தை தமிழ் ரசிகர்கள் தமிழ் படத்தில் ரசிக்க இருக்கிறார்கள். 

by Santhiya Lakshmi

செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக இருக்கும் GOAT ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில்தான் முழுமையான டீஏஜிங் தொழில்நுட்பத்தை தமிழ் ரசிகர்கள் தமிழ் படத்தில் ரசிக்க இருக்கிறார்கள். 

Thalapathy Vijay Biography

நடிகர் விஜய் நேற்று சென்னையில் இருந்து கிளம்பி துபாய் வழியாக இன்று இரவு அமெரிக்கா போய்சேர இருக்கிறார். டைம் ட்ராவல் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமான GOAT படத்தில் ‘காதலுக்கு மரியாதை’ காலத்து விஜய் காட்சிகள் இடம்பெற இருக்கிறது. இதற்கு  DeAging டெக்னாலஜி பயன்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான ஷூட்டிங் லாஸ் எஞ்சலீஸில் இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது. இந்த ஷூட்டிங் முடிந்து மீண்டும் மே 19-ம் தேதி சென்னை வருகிறார் விஜய். 

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கும் ‘GOAT’ படத்தில்  DeAging டெக்னாலஜி பயன்படுத்தப்பட இருக்கிறது. டீஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் நிறைய படங்கள் எடுக்கப்பட்டுவிட்டபோதிலும் தமிழில் இன்னும் DeAging  டெக்னாலஜி படங்கள் வரவில்லை. கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் DeAging  டெக்னாலஜியை பயன்படுத்த முதலில் திட்டமிட்டிருந்தார்கள். இதற்கான வேலைகளும் நடந்தன. ஆனால், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் சூழல் உருவானதால் இந்த முயற்சி கைவிடப்பட்டது. 

அதனால் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக இருக்கும் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில்தான் முழுமையான டீஏஜிங் தொழில்நுட்பத்தை தமிழ் ரசிகர்கள் ரசிக்க இருக்கிறார்கள். 

மே மாதத்தோடு ‘GOAT’ படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. போஸ்ட் ப்ரொடன்ஷன் வேலைகளும் நடந்துகொண்டிருப்பதால் படம் திட்டமிட்டப்படி செப்டம்பர் 5 ரிலீஸ் என்கிறார்கள்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.