Home Cinema News ‘கில்லி’ ரீ-ரிலீஸ்… வருசத்துக்கு ஒரு படமாவது கொடுங்க என்று தளபதி விஜய்யிடம் விநியோகஸ்தர் கோரிக்கை!

‘கில்லி’ ரீ-ரிலீஸ்… வருசத்துக்கு ஒரு படமாவது கொடுங்க என்று தளபதி விஜய்யிடம் விநியோகஸ்தர் கோரிக்கை!

விஜய் – த்ரிஷா நடிப்பில் சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2004-ல் ரிலீஸாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ‘கில்லி’.

by Santhiya Lakshmi


விஜய்க்கு கை விரல்களில் காயம் ஏற்பட்டிருக்க, வெங்கட்பிரபுவுக்கு எதிராக கொதித்துக்கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

விஜய் நடித்த கில்லி திரைப்படம் கடந்த 2004-ம் ஆண்டு அதாவது சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸ் ஆனது. இப்போது தமிழ்த்திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வெளியாகதாதால் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் ட்ரெண்ட் தொடங்கியிருக்கிறது. அதன் ஒரு தொடர்ச்சியாக கடந்த வாரம் ஏப்ரல் 20-ம் தேதி ‘கில்லி’ ரீ-ரிலீஸ் ஆனது. 

புதுப்படத்துக்கு குவிவதுபோல இந்தப்படத்துக்கு ரசிகர்கள் குவிய, ‘கில்லி’ ரீ-ரிலீஸும்  மிகப்பெரிய வெற்றியானது. இதனைக்கொண்டாடும் வகையில் ‘GOAT’ படத்தின் ஷூட்டிங்கில் இருந்த விஜய்யை படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னமும், தற்போது படத்தை ரீ-ரிலீஸ் செய்திருக்கும் சக்திவேலும், இயக்குநர் தரணியும் சந்தித்து மாலை அணிவித்திருக்கிறார்கள்.

படத்துக்கான ரெஸ்பான்ஸ் குறித்து சக்திவேலிடம் கேட்டு விஜய் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். ஆனால், இந்த செய்தியைவிட இந்தசந்திப்போது எடுக்கப்பட்ட படங்களில் விஜய்க்கு கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டிருக்க, வெங்கட் பிரபு எப்படி எங்க தளபதிக்கு ஷூட்டிங்ல அடிபட விட்டிருக்கலாம் என இயக்குநரை வறுத்தெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.