Home Cinema News ஹெச்.வினோத் இயக்கப்போகும் ‘தளபதி 69’ல் நடிக்க விஜய்-க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ஹெச்.வினோத் இயக்கப்போகும் ‘தளபதி 69’ல் நடிக்க விஜய்-க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் எவ்ளோ தெரியுமா?

by Sivaanantham RB

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யின் கைவசம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்‘ மற்றும் ‘தளபதி 69′ என இரண்டு படங்கள் மட்டுமே உள்ளது. இதில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை வெங்கட் பிரபு இயக்கிக் கொண்டிருக்கிறார்.

விஜய்யின் திரையுலக வாழ்வில் கடைசி படமான ‘தளபதி 69’ஐ ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று’ புகழ் ஹெச்.வினோத் இயக்கப்போகிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத (ஏப்ரல்) இறுதியில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Actor Vijay

‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் D.V.V. தானய்யா மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்போகும் இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கப்போகிறார்.

தற்போது, இந்த படத்தில் நடிக்க நடிகர் விஜய்-க்கு ரூ.250 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு (2023) வெளியான ‘லியோ’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் ரூ.120 கோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.