Home Cinema News Thalapathy 69 படத்தில் இணையும் தரமான நடிகர் பட்டாளம்!

Thalapathy 69 படத்தில் இணையும் தரமான நடிகர் பட்டாளம்!

H. வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் கடைசியாக நடிக்கவுள்ள 'Thalapathy 69' படத்தின் நடிகர் நடிகைகள் பற்றிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது. 

by Vinodhini Kumar

தமிழ் நாட்டில் வெற்றிகரமாக திரைத்துறையில் நடித்து, பல கோடி ரசிகர்களை தன வசம் வைத்திருக்கும் நடிகர்கள் இயல்பாக அடுத்தகட்டமாக அரசியலில் இறங்கி அதில் சாதிக்க நினைப்பது கிட்டத்தட்ட ஒரு பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த நடிகர் அரசியலில் இறங்குவதற்கு முன்னே அவரை வருங்கால அரசியல் தலைவர் என ஊரெங்கும் பரப்புவதும் இன்றளவும் நடந்துவருகிறது.

அப்படி நடிகர் விஜய் நடிப்பதை விட்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது, அவரின் ரசிகர்கள் அவரின் அறிவிப்பை வரவேர்த்தாலும், நடிப்பதை நிறுத்துவதை ஏற்கமுடியாமல் வருத்தமாகவும் இருக்கிறார்கள். அப்படி நடிகர் விஜய் கடைசியாக நடிக்கும் Thalapathy 69 படத்தின் அறிவிப்பு வந்துள்ளது. இந்த படத்தை KVN Productions நிறுவனம் தயாரிக்க, இப்படத்தின் முக்கிய தகவல் கிடைத்துள்ளது. 

H. வினோத் இயக்கும் பெயரிடப்படாத ‘Thalapathy 69’ படத்தில் நடிகர் விஜய் உடன் நடிக்கும் நடிகர்கள் பெயர்கள் தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் அவரின் ‘GOAT’ படம் வெற்றியானதை அடுத்து அவரின் கடைசி படமென சொல்லப்படும் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 14ம் தேதி Thalapathy 69 படத்தின் முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் போஸ்ட்டரை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், இதில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இணைந்துள்ளதாகவும், இப்படத்தை அக்டோபர் 2025ல் வெளியிடவுள்ளதாகவும் அறிவித்தனர். 

‘Thalapathy 69’ – விஜய் ரசிகர்களுக்காக வெளியான உணர்வுப்பூர்வமான அப்டேட்! 

இதை தொடர்ந்து இன்று காலை, Thalapathy 69 படத்தின் Cast அதாவது நடிக்கும் நடிகர்கள் பற்றிய தகவல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு நடிகராக அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில் இன்று முதல் அறிவிப்பை மாலை 5 மணிக்கு வெளியிட்டனர். அதில் ஹிந்தி நடிகர் Bobby Deol நடிக்கவுள்ளது உறுதியானது. மேலும் பல நடிகர்கள் பற்றிய தகவல் பின்வருமாறு. 

Thalapathy 69 நடிகர்கள்

Bobby Deol 

Bobby Deol on board Thalapathy 69

ஹிந்தி சினிமாவில் 90களில் கதாநாயகனாக நடித்துவந்தவர் நடிகர் Bobby Deol. இவர் அதற்கு பிறகு துணை நடிகராக நடித்து, பின்னர் 2010க்கு மேல் குணச்சித்திர நடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். அவருக்கு திரைத்துறையில் பெரிய திருப்பமாக அமைந்த படம் 2024ல் வெளியான ‘Animal’.

இந்த படத்துக்கு பின் தமிழ் படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ள Bobby Deol, சூரியாவின் ‘கங்குவா’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துவரும் நிலையில் தற்போது ‘Thalapathy 69’ படத்திலும் இணைந்துள்ளார்.

Pooja Hegde

Pooja Hegde in Thalapathy 69

2012ல் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் அறிமுகமானவர் நடிகை Pooja Hegde. இப்படத்திற்கு பின் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் நடிக்க தொடங்கி முன்னணி ஹீரோக்கள் பலருடன் கதாநாயகியாக வளம் வருகிறார்.

தமிழில் 10 ஆண்டுகள் கழித்து 2022ல் விஜய் உடன் ‘Beast’ படத்தில் நடித்தவர் தற்போது Thalapathy 69 படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் விஜய் மற்றும் Pooja Hegde உடைய ஜோடி ‘Halamathi’ பாடல் முதல் பெருவாரியாக கொண்டாடப்பட்டதால், இந்த படத்திலும் ஹிட்டாகும்.

Mamitha Baiju 

Mamitha Baiju in Thalapathy 69

மலையாள சினிமாவில் 2017 முதல் துணை நடிகையாக நடிக்க தொடங்கியவர் நடிகை Mamitha Baiju. இவர் பல ஆண்டுகளாக நாயகியாக நடித்துவந்தாலும் சமீபத்தில் வெளியான ‘Premalu’ படத்தின் மூலம் தமிழிலும் ரசிகர்களை சம்பாதித்துள்ளார்.

நடிகை Mamitha Baiju தமிழில் ‘Rebel’ படத்தில் ஜி வி பிரகாஷ் உடன் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் உடன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து இப்போது விஜயின் கடைசி படத்தில் நடிக்கிறார்.

Priya Mani 

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் ‘முத்தழகு’ என்ற பாத்திரம் வழியாக இன்றும் பேசப்படும் நடிகை Priya Mani. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என அணைத்து முன்னணி திரைத்துறையில் தடம் பதித்து தன்னுடைய திறமையால் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு பின் தமிழ் சினிமாவில் மறுபடியும் நடிக்கவுள்ள Priya Mani, Thalapathy 69 படத்தில் நிச்சயமாக ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடிப்பார்.

Gautham Vasudev Menon

Gautham Vasudev Menon in Thalpathy 69

காதல் படங்களை இயக்கி தமிழ் சினிமா நடிகர்கள் பலரையும் அவரின் இயக்கத்தில் நடிக்க விரும்பும் அளவிற்கு பிரபலமாக இருந்தவர் இயக்குனர் Gautham Vasudev Menon. சமீபத்தில் நடிகராக அவர் பெயர் இல்லாத படமே இல்லை என்றளவில் தமிழ், மலையாளம், தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் நடித்துவருகிறார்.

இவர் தளபதி விஜய் நடிக்கும் அடுத்திய படத்தில் இணைந்திருப்பது தெரியவந்துள்ளது. இருவரும் இணைந்து கடைசியாக ‘Leo’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Narain

Narain on Board Thalapathy 69

2006ம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் தமிழில் அறிமுகமானவர் நடிகர் நரேன். பின்னர் ‘பள்ளிக்கூடம்’, ‘அஞ்சாதே’, ‘தம்பிக்கோட்டை’ ஆகிய படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியவர் நரேன்.

2019ல் ‘கைதி’ படத்தின் மூலம் மீண்டும் பிரபலமாக தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் தற்போது H. வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் ஒரு அங்கமாக சேர்ந்திருப்பது போஸ்டர் வழியாக படக்குழு அறிவித்துள்ளது.

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.