நடிகர் விஜய் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு முழுமையாக தன்னுடைய அரசியல் பயணத்தில் கவனம் செலுத்தப்போவதாக அறிவித்தது அவரின் கோடான கோடி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இந்த செய்தி 2024 பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டதும் அவரின் கடைசி இரண்டு படங்களான ‘The Greatest Of All Time’ மற்றும் ‘Thalapathy 69’ படங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகமானது.

செப்டம்பர் 5 ‘The Greatest Of All Time’ படம் வெளியாகி மக்களின் பேராதரவு பெற்றது. இந்த ஒரு படத்திலேயே விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் பல ஆச்சரியமான வசனங்களும், reference களும் சேர்க்கப்பட்டது. அதே போல அவரின் கடைசி படம் என கூறப்படும் 69வது படத்திலும் இது போல அமையுமா போன்ற கேள்விகள் எழுந்துள்ளது.
Un ratham en ratham verae illai.. Uthirathil vithaithayae anbin sollai ❤️
— KVN Productions (@KvnProductions) September 13, 2024
The Love for Thalapathy
▶️ https://t.co/fd7M28fem1
We all grew up with your films & you’ve been a part of our lives every step of the way. Thankyou Thalapathy for entertaining us more than 30 years… pic.twitter.com/4TZi7xHErB
தற்போது ‘Thalapathy 69’ படத்தின் முதல் அறிவிப்பை இன்று KVN தயாரிப்பு நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் உடைய திரை பயணம் இதுவரை எப்படி அமைந்தது, அவரின் ரசிகர்கள் விஜய்யின் கடைசி படம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என விவரிக்கிறது இந்த வீடியோ. தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடக, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களை சேர்ந்த ரசிகர்களும் இந்த வீடியோவில் தங்களுது வருத்தத்தை தெரிவித்துள்ளனர். One Last Time என்ற Hashtag தற்போது இந்த விடியோவுடன் வைரலாகியுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கப்போகும் ‘தளபதி 69’ல் நடிக்க விஜய்-க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் எவ்ளோ தெரியுமா?
‘Thalapathy 69’ படத்தை இயக்குனர் H. வினோத் இயக்குவது உறுதியான நிலையில், சமீபத்தில் நடந்து ஒரு விருது வழங்கும் விழாவில் “விஜய்யின் 69வது படம் 200% தளபதி உடைய படம் தான்” என தெரிவித்தார். கருத்துள்ள படமாக இல்லாமல், ஒரு கமர்ஷியல் ஆக்ஷன் படமாக உருவாகும் என அவர் கூறினார். நாளை மாலை ‘Thalapathy 69’ படத்தின் முதல் அப்டேட் வெளியாகும் என்றும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]