Home Cinema News Thalapathy69 Update – வினோத்துடன் கூட்டணி சேரும் Vijay!!

Thalapathy69 Update – வினோத்துடன் கூட்டணி சேரும் Vijay!!

Thalapathy 69 Update பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தளபதி 69 திரைப்படத்தை H Vinoth இயக்கியுள்ளார்!!

by John Kamalesh

‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்துவைத்த ஹெச்.வினோத் கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’, அஜித்துடன் ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ என மூன்று படங்களை இயக்கிமுடித்துவிட்டார். 

விஜய் சமீபத்தில் ஹாட்ரிக் கூட்டணி அமைத்து மூன்றுமே சக்ஸஸ் கொடுத்தது அட்லிதான். ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என விஜய்யை பக்கா மாஸ் ஹீரோவாக காட்டியதால்தான் ஷாருக்கானே அட்லிக்கு டேட் கொடுத்து ஜவான் படத்தில் நடித்தார். 

‘கில்லி’ ரீ-ரிலீஸ்… வருசத்துக்கு ஒரு படமாவது கொடுங்க என்று தளபதி விஜய்யிடம் விநியோகஸ்தர் கோரிக்கை!

இந்நிலையில் 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனிக்கட்சி தொடங்கியிருக்கும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘GOAT’ படத்தில் நடித்துவருகிறார். தேர்தலுக்கு முன்பாக இன்னும் ஒரு படத்தில் நடிப்பேன் என அறிவித்திருந்தார் விஜய். இந்த சூழ்நிலையில் தேர்தலுக்கு முன்பாக விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது யார் என்கிற போட்டாபோட்டி கோலிவுட்டில் கடந்த சில மாதங்களாகவே நிலவிவந்தது.

Thalapathy 69 update

இயக்குநர் யார் என்கிற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்திருக்கிறது. அட்லி விஜய் கூட்டணி சேருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அட்லிக்கு நோ சொல்லியிருக்கிறார் விஜய். மிகக்குறைந்த நாட்களில் ஷுட்டிங்கை முடித்து படத்தை ரிலீஸுக்கு கொண்டுவருபவருக்கு முன்னுரிமை என விஜய் தனது டீமிடம் சொல்ல, அத்தனைப் பொருத்தங்களும் தற்போது பக்காவாகப் பொருந்தியிருப்பது இயக்குநர் ஹெச்.வினோத்துக்குத்தானாம்.

சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்துவைத்த ஹெச்.வினோத் கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, அஜித்துடன் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று படங்களை இயக்கிமுடித்துவிட்டார். தற்போது கமல்ஹாசனுக்கு கதை சொல்லி ஹெச்.வினோத் ஓகே வாங்கியிருக்கும் நிலையில்தான் Thalapathy69 படத்துக்கு தற்போது வினோத்தை அனுகியிருக்கிறார்கள்.

வினோத் சொன்ன கதை விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு ஏற்றாற்போல சோஷியல் மெசேஜோடு, பட்ஜெட்டிலும் பக்கவாக இருந்ததால் விஜய் ஓகே சொல்ல தற்போது வேகவேகமாக காஸ்ட்டிங் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

Thalapathy69 படத்தில் விஜய்யோடு மீண்டும் இணைகிறார் சமந்தா. சமந்தா ஏற்கெனவே விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகயிருக்கிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.