தமிழ் சினிமாவில் சமூகத்தில் நிலவும் அவலங்கள் அதன் விளைவாக ஏற்படும் மோசமான சூழ்நிலைகள் என இவை அனைத்தையும் தனது ஆழமான மற்றும் யதார்த்தமான திரைக்கதை மூலம் காண்பிக்கும் இயக்குனர் பா.ரஞ்சித் இரண்டு வருடங்கள் கடினமாக உழைத்து உருவாக்கிய “Thangalaan” திரைப்படம் ஆகஸ்ட் 15 அன்று இந்தியா முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியானது.
‘Thangalaan’ முனி, காடையன், அரசன் ஆகிய பல பரிமாணங்கள் ஒரே படத்தில் அள்ளி வழங்கிய சியான் விக்ரமின் நடிப்பு சினிமா மீது அவர் கொண்ட காதல், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்காக கடின உழைப்பை செலுத்தி அவரை தவிர வேறு எந்த நடிகரையும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
அதில் நடித்த மற்ற முக்கிய கதாபாத்திரங்கள் ஆன பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன், டேனியல், ஆனந்த்சாமி மற்றும் பலரின் பாத்திரங்கள் மிகச்சிறப்பாக எழுதப்பட்ட காரணத்தால் படம் நிறைவடைந்த பிறகும் அவர்கள் கதாபாத்திரத்தின் தாக்கம் மனதில் ஆழமாக நிலைத்து நிற்கிறது என ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர்.
இந்த திரைப்படம் சென்ற மாதம் ott-யில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் பல காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இன்று வெற்றிகரமாக ott-யில் வெளியானதை தயாரிப்பு நிறுவனமான Studio Green நிறுவனம் அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
Thangalaan – Ott விவரங்கள்
Ott-யில் வெளியான நாள் – டிசம்பர் 10, 2024
Ott பெயர் – Netflix, Simply South