Elon Musk உலகின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர். டெஸ்லா, X வலைதளம், ஸ்பேஸ் X என பல நிறுவனங்களின் தலைவராகவும் உள்ளார். இவர் சமீபத்தில் ‘தப்பாட்டம்’ என்ற தமிழ் படத்தின் புகைப்படத்தை மீமாக மாற்றி தன்னுடைய X தளத்தில் பதிவிட்டார். ஆப்பிள் நிறுவனம் எப்படி பயனாளர்களின் டேட்டாவை திருடி AIயிடம் பறிமாருகிறது என்பதை பற்றி அவருடைய கருத்தை நகைச்சுவையாக பதிவிட்டார்.
My thanks to Elon Musk for making my movie thappattam poster world famous..😁🙏🏻@elonmusk https://t.co/LRQ7teFgzn pic.twitter.com/pg9DRMImFa
— Adham Bava (@adham_bava) June 11, 2024
இதில் வரும் புகைப்படம் 2017ல் ‘தப்பாடம்’ படத்தில் இருந்து எடுக்கப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர் ஆதாம் பாவா Elon Muskன் பதிவை மறுப்பதிவு செய்து நன்றி தெரிவித்துள்ளார். படத்தின் நாயகன் பப்லிக் ஸ்டார் துரை சுதாகரும் இந்த படத்தை டிரெண்டாக்கியதற்காக நன்றி கூறியுள்ளார்.
தப்பாட்டம் படக்குழு
‘Thappattam’ படத்தை எழுதி இயக்கியவர் முஜிபுர் ரஹ்மான். ஒளிப்பதிவாளர் – K. ராஜன், இசை- பழனி பாலு, எடிட்டர்- R. சரண் சண்முகம், படத்தில் நடித்தவர்கள்- பப்லிக் ஸ்டார் துரை சுதாகர், டோனா ரொஸாரியோ, ஸ்டண்ட்- ஆக்ஷன் பிரகாஷ்.
தப்பாட்டம் OTT நிலவரம்
இந்த படம் தற்போது டிரெண்டாகி வருகிறது ஆனால் எந்த OTT தளத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]