Home Cinema News “The Goat” movie Latest Update: விஜய் இரட்டை வேடம் ,திரிஷா சிறப்பு தோற்றம்

“The Goat” movie Latest Update: விஜய் இரட்டை வேடம் ,திரிஷா சிறப்பு தோற்றம்

by John Kamalesh

த்ரிஷா, தளபதி விஜய் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் “The Goat” (The Greatest of All Time) திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில், AGS என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், விஜய் ஹீரோ மற்றும் வில்லன் ஆகிய இரு வேடங்களில் நடிக்கும் ஒரு ஆக்‌ஷன் கலந்த படமாகும்.

இந்த படத்தின் Shooting தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளன, படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் கேரளாவில் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘The Goat’ படத்தில் தளபதி விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இவர்களுடன்  இணைந்து ஜெயராம், சினேகா, லைலா, யோகிபாபு, வைபவ், பிரேம்கி, அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் மற்றும் பல பிரபல நடிகர்கள் பட்டாளமே இந்த படத்தில் உள்ளனர். நடன திறமைக்கு பெயர் பெற்ற விஜய் மற்றும் நடனபுயல் பிரபுதேவா இணைத்து ஒரு பாடலில் நடனம் ஆட உள்ளார்.

Leo ” என்ற வெற்றிப் படத்திற்குப் பிறகு த்ரிஷா விஜய்யுடன் இணைந்து “The Goat” படத்தில் இணையவுள்ளார். மேலும், ஒரு பாடலுக்கு விஜய்யுடன் திரிஷா இணைந்து நடனமாடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தின் தயாரிப்பு குழு த்ரிஷாவின் ஈடுபாட்டை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. 

“The Goat ” படத்தில் த்ரிஷாவின் தோற்றம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன் ஆக்‌ஷன் நிரம்பிய கதைக்களம் மற்றும் நட்சத்திரங்கள் நிறைந்த நடிகர்களுடன், “The Goat” பார்வையாளர்களுக்கு ஒரு பரபரப்பான சினிமா விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.