பாகுபலி படத்திற்கு பிறகு தொடர்ந்து பான் இந்தியா படங்களில் நடித்து வரும் பிரபாஸ் கடைசியாக கல்கி 2898 AD என்ற படத்தில் நடித்திருந்தார். அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோனே, பசுபதி, திஷா பதனி போன்ற நட்சத்திரங்களோடு விஜய் தேவர்கொண்டா, மிருணால் தாக்கூர், அன்னா பென் ஆகியோரும் நடித்திருந்தனர்.
பெரிய அளவில் வரவேற்பை பெற்று 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. பாகுபலி, salaar, கல்கி 2898 AD என சமீபகாலத்தில் நடித்த படங்கள் 500 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து பான் இந்தியா ஸ்டார் ஆக கொண்டாடப்பட்டார்.
அடுத்து நடிக்கவிருக்கும் ராஜா சாப் என்ற படம் காமெடி ஹாரர் படமாக ஏப்ரல் 10, 2025 -ல் வெளியாகும் எனவும், அதில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன், சஞ்சய் தத், முரளி சர்மா, வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வெளியாகவுள்ளது.
பிரபாஸ் – கமல்ஹாசன் சேர்ந்து நடிக்கும் ‘கல்கி 2898 AD’-யின் ரிலீஸ் தள்ளிப்போகிறதா?
மாருதி இயக்கத்தில், தமன் இசையில் பீப்புள் மீடியா ஃபெக்ட்ரி தயாரிப்பில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
First Look போஸ்டரில் நாற்காலியில் கால்மேல் கால்போட்டு புகைபிடித்துக்கொண்டு ராஜாவான தோரணையில் அமைந்திருக்கும் படி புகைப்படம் வெளியானது.
தொடர்ந்து பான் இந்தியா படங்களில் நடித்து வரும் பிரபாஸ் இந்தியா அளவில் பெரிய ஸ்டார் நடிகராக உருவாக்க முக்கிய காரணமாக இருந்தது SS. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படம் தான்.
அதில் ராஜாவாக நடித்திருந்த நிலையில் ராஜா சாப் படத்திலும் ராஜாவாக நடிக்கும்பட்சத்தில் பாகுபலி போன்ற வரவேற்ப்பு இந்தியா அளவில் கிடைக்குமா என படம் திரைக்கு வந்த பிறகு பார்க்கலாம்.