1995-ல் செப்டம்பர் 23 ஆம் தேதி சென்னையில் நடிகர் விக்ரம் மற்றும் ஷைலஜா தம்பதிக்கு பிறந்தார். தனது படிப்பை நியூயோர்க்கில் உள்ள Lee Strasberg Theatre & Film Institute-ல் படித்து முடித்தார். திரைப்படம், நடிப்பு, limelight இவை எதுவும் நடிகர் துருவ் விக்ரமிற்கு புதிதல்ல. ஏனென்றால் அவரது தாத்தா வினோத் ராஜ், மற்றும் அவரின் தந்தை விக்ரம் என இருவரும் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களாக விளங்கி வருகின்றனர். இந்த legacy-ஐ தானும் தொடர வேண்டும் என்ற முனைப்போடு நடிப்பில் இறங்கிறனார்.
வர்மா/ஆதித்யா வர்மா
தெலுங்கில் 2017-ல் வெளியான “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து அதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக துருவ் விக்ரம் எண்ணினார். அதற்கு அவரின் தந்தை நடிகர் விக்ரம் அவர்கள் இடம் இருந்தும் பச்சைக்கொடி கிடைத்தது. ஆனால் சுலபமாக அமையவில்லை இந்த முதல் முயற்சி. முதலில் இயக்குனர் பாலா இயக்கத்தில் “வர்மா” என்ற தலைப்பில் படம் எடுக்கப்பட்டது ஆனால் தயாரிப்பாளருக்கு திருப்தி இல்லாத காரணத்தால் இயக்குனர் பாலா அந்த திரைப்படத்தில் இருந்து விலகினார். வர்மா திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் பட்டியல்,
அதன் பிறகு 2019-ல் கிரீசாயா இயக்கத்தில் “ஆதித்ய வர்மா” என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தின் மூலம் அவர் chocolate boy-ஆக ரசிகைகள் மத்தியில் வலம்வர தொடங்கினார். துருவ் விக்ரம் தவிர மற்ற அனைத்து நடிகர்களை மாற்றி வேறு தொழில்நுட்பக் கலைஞர்களுடன் வெளியானது. விமர்சன ரீதியாக நடிகர் துருவ் நல்ல வரவேற்பை பெற்றார். E4 Entertainment என்ற தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வெளியிட்டனர்.
2020-ல் ப்ரைம் வீடியோவில் “வர்மா” திரைப்படம் வெளியிடப்பட்டது. “ஆதித்ய வர்மா” திரைப்படத்தில் ‘எதற்கடி, ஆதித்ய வர்மா தீம்’ பாடலை எழுதி பாடியுள்ளார். இதன் மூலம் தன்னை பாடலாசிரியர் மற்றும் பாடகர் ஆக மெருகேற்றிக் கொண்டார்.
மகான் – 2022

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது தந்தை விக்ரம் உடன் இணைந்து நடித்து ப்ரைம் வீடியோ OTT தளத்தில் வெளியான “மகான்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் டாடா என்ற கதாபாத்திரம் துருவிற்கு ஒரு நடிகனாக ரசிகர்கள் மத்தியில் நன்மதிப்பை கிடைக்கச் செய்வது. Chocolate Boy என்ற பிம்பத்தை உடைப்பதற்கு இந்த திரைப்படம் அவருக்கு மிகவும் உதவியது என்றே கூறலாம். கொரோனா காரணத்தால் ஓடிடியில் வெளியானது. இந்த படத்தில் இடம் பெற்ற “Missing Me” என்ற பாடலை எழுதி பாடியுள்ளார். அதே வருடம் “மனசே” என்ற ஆல்பம் பாடலும் பாடியுள்ளார்.
பைசன் – (Bison)
தற்போது மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில் “பைசன்” (Bison) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மார்ச் 2025ல் இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா ஆவார்.
படம் | வெளியான நாள்/வருடம் | படக்குழுவினர் பெயர் | இயக்குனர் |
ஆதித்ய வர்மா (Adithya Varma) | 22 நவம்பர், 2019 | துருவ் விக்ரம், பனிதா சந்து, பிரியா ஆனந்த், ராஜா, தீபா ராமானுஜம், லீலா சாம்சன், அஸ்வின் குமார் லட்சுமிகாந்தன் | கிரீசாயா |
வர்மா (Varma) | 6 அக்டோபர், 2020 | துருவ் விக்ரம், மேகா சவுத்திரி, ரைசா வில்சன், ஆகாஷ் பிரேம்குமார், ஈஸ்வரி ராவ், மாத்தியூ வர்கீஸ், ஜெய் பாலா | பாலா |
மகான் (Mahaan) | 10 பிப்ரவரி, 2022 | விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சந்நன்த், வேட்டை முத்துக்குமார், பாலாஜி சக்திவேல் | கார்த்திக் சுப்புராஜ் |
பைசன் (Bison) | மார்ச் 2025 | துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், கலையரசன் | மாரி செல்வராஜ் |
வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் பட்டியலில் மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒருவராக நடிகர் துருவ் விக்ரம் விளங்கி வருகிறார்.
Indian Cinema-விற்கு உலகநாயகன் அறிமுகப்படுத்திய “Technologies”
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]