2020 தொடங்குவதற்கு முன் சினிமா மட்டுமல்ல பல துறைகள் நல்ல லாபத்திலும், முன்னேற்றத்தை நோக்கியும் சென்று கொண்டு இருந்தது. கொரோனாவின் வருகைக்கு பிறகு பலரின் வாழ்வும், பலவிதமான துறைகளும் மாற்றங்களுக்கு உள்ளானது. அதில் மிக முக்கியமாக கருதப்படுவது சினிமா துறை தான். திரையரங்கில் வெளியாகி கொண்டாடப்பட்டு வசூலில் லாபம் ஈட்டி வந்த நடைமுறை மாறியது. OTT-யின் ஆதிக்கம் துவங்க ஆரம்பித்தது. அதை தலைகீழாக மாற்றிய பெருமை தளபதி விஜய் அவர்களையே சேரும். பல கட்டுப்பாடுகள் திரையரங்கிற்கு அரசு விதித்த நிலையில் படத்தை திரையரங்கில் வெளியிட பலர் தயங்கினர். தைரியமான முயற்சியை “மாஸ்டர்” படக்குழு எடுத்து திரையரங்கில் வெளியிட்டனர்.
திரையரங்கில் வெளியிடுவது வாடிக்கையானது ஆனால் 10 நாட்களுக்கு மேல் ஓடுவது மிகப்பெரிய சவாலாக அமைந்தது. 2021 ஆம் ஆண்டுக்கு பின் திரைப்படங்களை காண பல வழிகள் இருந்தாலும், அத்தனை தடைகளையும் கடந்து “100 Day Club”-ல் மூன்று தமிழ் படங்கள் இணைந்து உள்ளது.
1.மாஸ்டர் – 2021
படத்தில் மட்டும் அல்ல வசூல் ரீதியாகவும் தன்னை மாஸ் ஹீரோவாக நிரூபித்து உள்ளார் தளபதி விஜய். நவீன காலத்திலும் தனது ரசிகர்களுக்காக திரையரங்கில் “மாஸ்டர்” படத்தை வெளியிட்டார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய் கூட்டணியில் உருவான முதல் படமாகும். முதல் முறையாக தமிழில் உச்ச நட்சத்திரங்களாக உள்ள நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து பணியாற்றினர். 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு “100 Day Club”-ல் இணைந்த முதல் படம் இதுவே ஆகும்.
வெளியான நாள்/வருடம் | படம் | இயக்குனர் | படக்குழுவினர் |
13 ஜனவரி 2021 | மாஸ்டர் | லோகேஷ் கனகராஜ் | விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், நாசர், கவுரி கிஷன் |
2.மாநாடு – 2021
நடிகர் சிம்புவின் comeback படமாக அமைந்த Sci-Fi ஆக்ஷன் திரில்லர் படமாக வெளியான “மாநாடு” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதன் வெளிப்பாடாக ரசிகர்கள் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கொண்டாடி “100 Day Club”-ல் இணைத்தனர். கதை, திரைக்கதை, பின்னணி இசை, மாஸ் ஆன BGM, சிறப்பான நடிப்பு, Sci-Fi கதை கரு என இவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது.
வெளியான நாள்/வருடம் | படம் | இயக்குனர் | படக்குழுவினர் |
25 நவம்பர் 2021 | மாநாடு | வெங்கட் பிரபு | சிம்பு, SJ சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், S.A.சந்திரசேகர், Y.G.மஹேந்திரன், பிரேம்ஜி அமரன், வாகை சந்திரசேகர், கருணாகரன் . |
3.விக்ரம் – 2022
தனது நான்காவது திரைப்படத்தை தனது முன்னோடி ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் உடன் இணைந்து பணியாற்றிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி, பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்த “விக்ரம்” திரைப்படம் 2022-ல் வெளியானது. வெற்றிகரமாக “100 Day Club”-லும் இணைந்தது. தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் சேர்ந்து நடிப்பது அரிதாக இருந்த நிலையை இந்த திரைப்படம் மாற்றியது என்றே பலரும் பாராட்டினர். இந்த படத்திற்கு பிறகு தான் “LCU – லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்” என்ற கருத்துப்படிவம் உருவானது.
தமிழ்ல இவ்ளோ படம் தான் நடிச்சாங்களா!!! ஆச்சர்யமூட்டும் Top – 5 நடிகைகள்
வெளியான நாள்/வருடம் | படம் | இயக்குனர் | படக்குழுவினர் |
3 ஜூன் 2022 | விக்ரம் | லோகேஷ் கனகராஜ் | கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், சூர்யா, காயத்ரி, காளிதாஸ் ஜெயராம், சந்தான பாரதி, செம்பன் வினோத் ஜோஸ் |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]