Home Cinema News ‘Thug Life’ல் இணையும் Simbu- போஸ்டர் வெளியிட்டது படக்குழு! 

‘Thug Life’ல் இணையும் Simbu- போஸ்டர் வெளியிட்டது படக்குழு! 

'Thug Life' படத்தில் கமல் ஹாசனுடன் முதல் முறையாக நடிக்கிறார் Simbu.

by Vinodhini Kumar

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் ThugLife. தமிழ் சினிமாவின் கிளாசிக்கான ‘நாயகன்’ படத்துக்குப்பிறகு கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணையும் திரைப்படம் என்பதால் #ThugLife படத்துக்கு இப்போது பயங்கர எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே நாம் www.kollywoodglam.com சிம்பு இந்தப்படத்தின் ஷூட்டிங்கிற்காக டெல்லியில் இருக்கிறார் என எழுதியிருந்தோம். அதை நிரூபிக்கும்வகையில் இப்போது ஜெய்சால்மீரில் எடுக்கப்பட்ட சிம்பு டீசரை வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

ராஜஸ்தான் பாலைவனத்தில் பார்டர் பேட்ரோல் ஜீப்பில் வீலிங் செய்தபடி மாஸாக வந்து சிம்பு துப்பாக்கியில் சுடும்  டீசரை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த டீசர் இப்போது ட்ரெண்டாகிவருகிறது. 

#ThugLife படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இருவர் சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் உள்ள யமுனா கட் பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. 

சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி Thug Life படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். 60 நாட்களில் சிம்புவின் காட்சிகள் படமாக்கப்படும் என்றும் அந்த வேலைகள் விரைவாக தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. 

Thug Life படத்தின் காட்சிகள் சில டெல்லியில் படமாக்கப்பட்டது. அடுத்ததாக சைபீரியாவில் படப்பிடிப்பு நடந்து. வரலாற்று படமாக உருவாகி வரும் Thug Life, பெரிய ஸ்டார்கள் நடித்து வருகிறார்கள். தேர்தலால் படப்பிடிப்பில் இருந்து விலகி இருந்த கமல் ஹாசன், தற்போது படக்குழு உடன் இணைந்துள்ளார். இதற்கு நடுவே STR48 படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. Thug Lifeன் ஷுட்டிங் முடிந்த பிறகு தான் Simbuவின் 48வது படம் ஆரம்பமாகும் என்று தெரிகிறது. இதை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. 

இப்படம் இந்தாண்டு இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

‘Thug Life’ படத்தில் இருந்து விலகினாரா ஜெயம் ரவி?

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.