Home Cinema News Thug Life படத்தில் இணையும் நாசர் மற்றும் அபிராமி!  

Thug Life படத்தில் இணையும் நாசர் மற்றும் அபிராமி!  

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் படம் 'Thug Life'. பெரிய நடிகர் பட்டாளம் நடிக்கும் இந்த படத்தில் மேலும் இணைகிறார்கள் நடிகர் நாசர் மற்றும் நடிகை அபிராமி. 

by Vinodhini Kumar

இயக்குனர் மணிரத்னம் அடுத்ததாக இயக்கிவரும் படம் ‘Thug Life’. ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கும் இந்த படத்தின் தொடர் அப்டேட் சமீபத்தில் கிடைத்துள்ளது. கமல் ஹாசன் இந்தாண்டு ‘கல்கி 2898 AD‘ மற்றும் ‘இந்தியன் 2‘ படங்களை நடித்து முடித்துள்ளார். 

அடுத்தக்கட்டமாக மணி ரத்னம் இயக்கத்தில் ‘Thug Life‘ படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். படப்பிடிப்பை தொடர்ந்து, இந்த படத்தின் டப்பிங் கொடுக்க தொடங்கினார் கமல் ஹாசன். இதை ஒரு விடியோவாக வெளியிட்டனர் தயாரிப்பாளர்கள். 

Nassar in Thug Life

இதே போல் இன்று ‘தக் லைஃப்’ படத்தில் மேலும் இரண்டு நடிகர்கள் இணைந்துள்ளதாக போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர் படக்குழு. நடிகர் நாசர் மற்றும் நடிகை அபிராமி தற்போது ‘Thug Life‘ படத்தில் இணைந்துள்ளனர். நடிகர் நாசர் ஏற்கனவே கமல் ஹாசனுடன் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை அபிராமியின் புகழ்பெற்ற கதாபாத்திரமாக அமைந்த அன்னலட்சுமி, ‘விருமாண்டி’ படத்தில் கமல் ஹாசனுடன் நடித்தார். 

Abirami in Thug Life

இந்த இரண்டு தகவலும் கிடைத்த நிலையில், ‘தக் லைஃப்’ படம் இந்தாண்டின் கடைசியில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே இந்தியா முழுவதிலும் இருந்து திறமையான நடிகர்கள் பலர் இந்த படத்தில் இணைந்துள்ளனர். நடிகர்கள் சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷமி, ஹிந்தி நடிகர்கள் பங்கஜ் த்ரிபாதி, அலி பாஸில், சானியா மல்ஹோத்ரா, ரோஹித் ஷராஃப், மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.