2023 இம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை பெற்ற Box Office’யில் இடம்பிடித்த படங்களை ஒவ்வொன்றாக காண்போம். இவற்றில் ஒரு சில படங்கள் மிகவும் வரலாறு காணாத அளவில் வசூல் பெற்றன.
ஜெயிலர்

ரஜினியை முக்கிய கதாபாத்திரமாக கொண்ட இந்த படம் சன் பிச்ச்சர்சால் வெளியிடப்பட்ட படம். இதை இயக்குனர் நெல்சன் அவர்கள் இயக்கினர். இந்த படத்தில் ரஜினி ஒரு ரிட்டையர்டு ஜெயிலர் ஆக வயதான தோற்றத்தில் நடித்திருப்பார். இது ஒரு சிலை திருட்டு பற்றிய படம். ரம்யா கிருஷ்ணன் இக்கு அதிகமாக காட்டப்படவில்லை என்றாலும் ஒரு சில இடங்களில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். தனியாக காமெடி சீன்கள் இல்லை ஆனால் படத்தோடு ஒன்றிய பல சீன்களில் வயிறு குலுங்க சிரிக்க வேண்டியதாயிற்று. இந்த படத்தில் மிக விமர்சையாக பேசப்பட்டது இந்த படத்துடைய வில்லன் மலையாள மொழியில் பேசியது மிகவும் வைரல் ஆனது. இந்த படம் உலக அளவில் 650 கோடி வசூல் சாதனை பெற்றது.
லியோ

பொதுவாவே விஜய் படம் என்றாலே மக்கள் எல்லாரும் குடும்பத்தோட பாக்கறமாதிரி தான் இருக்கும். இந்த படமும் அதே மாதிரி தான் ஆக்சன் கலந்த படம். இந்த படம் லோகேஷ் கனகரஜால் இயற்றப்பட்டது. இதில் திரிஷா, அர்ஜுன், மடோனா, பிரியா ஆனந்த் மற்றும் சாண்டி மாஸ்டர் நடித்து இருப்பார்கள். இந்த படம் 620 வசூல் ஆனது. இந்த படத்தில் வரும் நா ரெடி தான் வரவா எனும் பாடலில் “விரல் இடுக்கில் தீப்பந்தம்” எனும் பாடல் சர்ச்சைக்கு உள்ளானது. மொத்தத்தில் இந்த படம் ஒரு பிலடி ஸ்வீட்.
பொன்னியின் செல்வன் 2

மணிரத்னம் இயக்குன இந்த படம் ஒரு வரலாற்று கதைன்னு எல்லாருக்குமே தெரியும். இந்த படம் விக்ரம், இஷ்வர்யாராய், திர்சா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி உள்ளிட்ட பல நடிகர்களால் உருவாக்கப்பட்டு மிகபெரிய அளவில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டது. இதன் முதல் பாகம் நமக்கே தெரியும் மிகபெரிய வெற்றின்னு இதனோட இரண்டாம் பாகமும் அதே போல் தான் வசூல் சாதனையில் உலக அளவில் வெற்றி பெற்றது. இது 345 கோடி வசூல் ஆனது. வசூல் மட்டுமல்லாமல் கல்கியின் கதையை பழங்கால வாழ்க்கையில் ராஜாக்களின் ஆட்சி அவர்களின் தோற்றம் அனைத்தையும் அழகாக திரையில் காட்டி மக்களை பிடரம்மிக்க வைத்தனர்.
வாரிசு

வாரிசு இந்த படத்தின் பெயரிலேயே தெரியும் இது ஒரு குடும்ப கதை. வம்சி அவர்கள் இந்த படத்தை இயக்கினார். இந்த படத்தில் விஜயின் அப்பாவாக சரத்குமார் ஒரு பெரிய கோடீஸ்வரராக இருப்பார். அவருக்கு 3 மகன்கள். அவருடைய சொத்துக்களை யார் பதிரப்படுதுகிராரோ அவர்களே வாரிசு என்று மையப்படுத்தி படம் இயக்கப்பட்டு இருக்கும். இதில் ராஷ்மிகா மாந்தநா வேறு விதத்தில் காமெடி ஆகா இன்றோ செய்து சிரிக்கவைத்து உள்ளனர். இந்த படம் 310 கோடி வசூல் ஆனது. இந்த படத்தில் ரஞ்சிதமே மற்றும் ஆராரிராரோ கேட்குதம்மா மக்களால் வரவேற்கத்தக்கது.
துணிவு

இயக்குனர் H.வினோத் இயக்கப்பட்டு நடிகர் அஜித்குமார் நடித்த படம் தான் இந்த துணிவு படம். இதுல நடிகர் அஜித் ஒரு பேங்க் ல கொள்ளை அடிக்க போன மாதிரி ஆரம்பமாகி பின் பேங்க் ல நடக்கற பிரச்சனைகளையும் ஷேர் மார்க்கெட்டில் நடக்கின்ற தவறுகளையும் சுட்டிகாற்ற மாதிரி கொண்டு போயிருகாங்க. இதல காமெடி என்னன்னா இந்த படத்தை பற்றி இயக்குனர் அஜித்திடம் முழுவதும் கூறாமல் ஒரு சீன் சொன்னாராம் அவர் அதை கேட்டதும் ஓகே சொல்லிட்டாராம். ஆனா படத்தில் அந்த சீனே வரவில்லையாம். இந்த படம் 190 வசூல் ஆனது.
வாத்தி

வாத்தி படத்தை வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாகவும் சமுத்திரகனி வில்லனாகவும் நடித்து உள்ளனர். தனியார் பள்ளிகளை அரசிடம் இருந்து காப்பாற்ற சமுத்திரகனி தனியார் ஆசிரியர்களை அரசு பள்ளியில் பணியற்றவைத்து ஒரு திட்டம் தீட்டுகிறார். ஆனால் அதில் ஒருவரான ஹீரோ தனுஷ் அவர் பணியாற்றும் அரசு பள்ளியை மேன்மைபடுத்த அதை எதிர்க்கும் வில்லனாகவும் படத்தின் கதை அமைகிறது. இந்த படத்தில் வாத்தி பாடல் சுபெர்ஹிட் ஆனது. ஆனால் சாட்டை, ராட்சசி போன்ற படங்களை போலவே இருந்ததால் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை என்றாலும் இந்த படம் 118 கோடி வசூல் ஆனது.
மார்க் ஆண்டனி

நடிகர் விஷால் மற்றும் S.J.சூர்யா வின் விசித்திரமான தோற்றத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியானது இந்த படம். நடிகர் விஷால்க்கு அவருடைய அப்பாவை பிடிக்காமல் போக பின் அவருடைய கையில் டைம் ற்றவேல் மேசென் கிடைக்க பின் 70 இம் ஆண்டுக்கு சென்று அவருடைய அப்பா வை பற்றி தெரிந்துகொள்வதே இதன் சுருக்க கதை. இதில் கதை பிரம்மாண்டமாக இல்லை என்றாலும் படத்தில் S.J.சூர்யா வின் நடிப்பு வயிறு குலுங்க சிரிக்கவைத்தது. அதுமட்டுமல்லாமல் சில்க் ஸ்மிதா போலவே ஒருவரை திரைக்கு மீண்டும் கொண்டு வந்தது ரசிகர்களை அமர்களபடுத்தியது . இந்த படத்தின் வசூல் 110 கோடி.
மாவீரன்

இந்த படத்தில் சிவகர்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படபடத்தை மனோன் அஸ்வின் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நம்ம ஹீரோவை ஒரு தைரியம் இல்லாத சகமனிதனாக கட்டிருப்பாங்க ஆரம்பத்தில். பின்பு அவர் காதில் ஒரு சத்தம் அசரீரியாக ஒலிப்பதை மேலே கேட்பதுபோல் விஜய் சேதுபதியின் குரலில் அசத்தீருபார்கள். ஆந்த அசரீரி சத்தம் தான் இந்த படத்தின் ஹைலைட்.
குடிசை வீடுகளில் உள்ளவர்களுக்கு குடுக்கப்படும் அரசாங்க மாடி வீடு பாதுகாபற்றமுரையில் இருப்பதை தட்டி கேட்கும் ஹீரோ அவருக்கு உதவும் அசரீரி சத்தம் இதுதான் இந்த படத்தின் கதை. இந்த படம் 89 கோடி வசூல் ஆனது.
மாமன்னன்

இந்த படத்தில் வடிவேலு, உதயநிதி, பாஹத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். மாரி செல்வராஜ் இயற்றிய இந்த படம் ஒரு அரசியல் தொடர்புடைய கதையாகும். இந்த படத்தில் நம்ம வடிவேலு அவர்களுக்கு கொடுக்கப்பட்டு சீன்களில் அவர் அற்புதமாக தனது திறமையை வெளிபடுத்தியுள்ளார். தாழ்த்தப்பட்ட சாதிக்கும் ஆதிக்கம்செயும் சாதிக்கும் இடையில் நடக்கும் பிரச்சனையாக கதை உருவாகியது. இஎடைவேலையில் உதியநிதியின் நடிப்பு ரசிகர்களை கை தட்ட வைத்திருக்கும். இந்த படம் 75கோடி வசூல் அடைந்தது.
போர் தொழில்

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான படம தான் போர் தொழில். திருச்சியில் இளம்பெண்களை கொலை செய்யும் ஒரு சீரியல் கில்லரை கண்டுபிடிக்கும் விதம்மகவும் பின் அவன் எதற்கு கொலை செய்கிறான் என்பதை தெரிந்து கொள்வதையும் சுவாரசியமாக கொண்டு சென்றிருப்பார்கள். எந்த ஒரு சண்டையும், நடனமும், பாடலும் இல்லாமல் அடுத்து என்ன நடக்கபோகிறது என்று கவனத்தை ஈர்க்கும் கதை. இந்த படத்தின் வசூல் 50 கோடி. சரத்குமார் அனுபவமுள்ள போலீஸ் ஆகவும் அசோக் செல்வன் அனுபவமில்லா அறிவுப்பூர்வமாக யோசிக்கும் போலீஸ் ஆகவும் கதை உருவாக்கப்பட்டது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]