பொதுவாக சிறந்த கதை, திரைக்கதை, கனகச்சிதமாக கதாபாத்திரத்தில் பொருந்தும் நடிகர்கள் என சிறந்த படத்திற்கு தேவையான எல்லா சிறப்புகளும் அந்த திரைபடத்திற்கு இருந்தாலும் திரையரங்கில் ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்படுவது இல்லை. இது பல ஆண்டுகளாகவே கோலிவுட் திரையுலகில் நடந்து கொண்டு வருகிறது. அப்படி 2024ல் வெள்ளித்திரையில் வெளியாகி மக்களால் பெரிதாக கொண்டாடப்படாத Top 10 underrated தமிழ் திரைப்படங்களின் பட்டியல்.
1.ஜே.பேபி
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கிய “ஜே.பேபி” இதுவரை கண்ட அனைத்து பார்வையாளர்களின் மனதையும் உலுக்கியது. ஆக்ஷன் படங்கள் மிகுதியாக வெளியாகும் இந்த காலகட்டத்தில் யதார்த்தமான படங்கள் வெள்ளித்திரைக்கு வருவது அரிதாக உள்ளது என்றே கூறலாம். மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட திரைக்கதை அதை மேலும் சிறப்பாக ஆக்கும் விதமாக அமைந்த உணர்ச்சிகரமான காட்சிகள், உண்மை சம்பவத்தில் இருந்த சில கதாபாத்திரங்களை திரைப்படத்திலும் இயக்குனர் காட்சிப்படுத்தியது படத்தின் வலிமையை மேலும் கூட்டுகிறது. அட்டகத்தி தினேஷ், ஊர்வசி, மாறன், கவிதா பாரதி, ஜெயா மூர்த்தி, இந்த படத்தின் மற்றொரு மிகப்பெரிய பலம் அதில் நடித்த நடிகர்கள் ஆகும். இந்த ஆண்டின் மிகச் சிறந்த படைப்புகளில் தவிர்க்க முடியாத ஒன்று “ஜே.பேபி.
ஸ்ட்ரீமிங் OTT : Amazon Prime Video
Image Source – IMDb
2.போகுமிடம் வெகு தூரமில்லை
அறிமுக இயக்குனர் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவான பேமிலி டிராமா திரைப்படம் “போகுமிடம் வெகு தூரமில்லை”. இந்த திரைப்படத்தின் முக்கிய கூறு மனிதாபிமானம், ஆகையால் அதை சுற்றி நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளும் அதில் தோன்றும் கதாபாத்திரங்களும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த திரைப்படத்தில் தோன்றும் பல நிகழ்வுகள் நமது அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளை தத்ரூபமாக படமாக்கப்பட்டிருக்கும்.
ஸ்ட்ரீமிங் OTT : Amazon Prime Video, ஆஹா தமிழ்
3.குரங்கு பெடல்
1980 களின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த ஆண்டு பலரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படாத மிகச் சிறந்த படைப்பு “குரங்கு பெடல்”. ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாரியப்பன் என்ற சிறுவன் தனது ஊருக்கு கோடை விடுமுறைக்கு செல்கிறான். அந்த விடுமுறை முழுவதும் நிகழும் சுவையான நிகழ்வுகளே இந்த படத்தின் முழுக்கதை. ஒவ்வொரு 90ஸ் மற்றும் ஆரம்ப ஆண்டு கால 2k கிட்ஸ்களின் பசுமரத்தாணி போன்ற கோடை விடுமுறை நினைவுகளை மீண்டும் தூண்டும் வண்ணம் அறிமுக இயக்குனர் கமலக்கண்ணன் படித்திருக்கிறார்.
ஸ்ட்ரீமிங் OTT : Amazon Prime Video, ஆஹா தமிழ்
Image Source – IMDb
4.சட்டம் என் கையில்
நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி சில வருடங்களுக்கு முன் கதாநாயகன் அவதாரம் எடுத்த நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான க்ரைம் த்ரில்லர் படம் “சட்டம் என் கையில்” என்ற திரைப்படம் இதுவரை அவர் வெளிப்படுத்திய நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக அமைந்துள்ளது. இந்த படத்தின் நாயகன் கவுதம் தவறுதலாக ஏற்படுத்தும் விபத்து அதன் பிறகு சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொண்ட நாயகனின் நிலை என்ன? என்பதை பரபரப்பான திரைக்கதையில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ட்ரீமிங் OTT : Amazon Prime Video
Image Source – IMDb
5.ஜமா
திருவண்ணாமலையில் இருக்கும் பள்ளிகொண்டாப்பட்டு என்ற கிராமத்தில் கல்யாணம் என்ற நாட்டுப்புறக் கலைஞர் தனது தந்தைக்கு பிறகு அந்த கலையை சிறப்பிக்க வேண்டும் என்ற பயணத்தில் என்னென்ன இன்னல்கள் சந்திக்கிறார் என்பதை உணர்ச்சிகளின் கலைவையாக படைத்திருக்கிறார் “ஜமா” திரைப்படத்தின் நாயகன் மற்றும் இயக்குனர் ஆன பாரி இளவழகன்.
ஸ்ட்ரீமிங் OTT : Amazon Prime Video
Image Source – IMDb
6.ரசவாதி
‘மகாமுனி, மௌன குரு’ போன்ற உறுதியான திரைக்கதைகளை கொண்ட படங்களை இயக்கிய சாந்தகுமாரின் அடுத்த ரொமான்டிக் திரில்லர் படம் தான் ‘ரசவாதி’. திரில்லர் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் விருந்தாக அமையும்.
ஸ்ட்ரீமிங் OTT : Amazon Prime Video
Image Source – IMDb
7.பைரி
ராஜலிங்கம் என்ற பொறியாளர் தனது தந்தையின் இறப்புக்கு பிறகு புறா ரேஸிங்கில் ஈடுபடும் நாயகன் வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழும் எதிர்பாராத நிகழ்வுகள் அவனின் அம்மாவின் உயிருக்கு ஆபத்தாக இருக்கிறது. இந்த ஆண்டின் மிகச் சிறந்த திரைப்படங்கள் என்ற பட்டியலில் இடம் பெறும் தகுதி பெற்ற படம் ஆகும்.
ஸ்ட்ரீமிங் OTT : Amazon Prime Video
Image Source – IMDb
8.ராக்கெட் டிரைவர்
டைம் ட்ராவல் செய்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் சிறு வயது சிறுவனாக தற்போது இருக்கும் காலத்தில் ஆட்டோ டிரைவர் ஆக பிரபாவை தற்செயலாக சந்திக்கிறார். எதற்காக கடந்த கால அப்துல் கலாம் இப்போது இருக்கும் காலத்தில் வரவேண்டும் என்ற சஸ்பென்ஸ் இந்த படத்தின் மையக்கரு.
ஸ்ட்ரீமிங் OTT : Amazon Prime Video, ஆஹா தமிழ்
Image Source – IMDb
9.போட்
இரண்டாம் உலகப் போர் பின்னணியில் இயக்குனர் சிம்பு தேவன் உருவாக்கிய நகைச்சுவை கலந்த சர்வைவல் டிராமா திரைப்படம் ‘போட்’. இதுவரை சிம்புதேவன் இயக்கிய ஆறு திரைப்படங்களும் வித்யாசமான கதை மற்றும் genre-ல் உருவாக்கப்பட்டிருக்கும் அதே போல் அவரின் படைப்பில் வெளியான மற்றொரு வித்யாசமான கதைக்களம் ‘போட்’. வித்யாசமான படங்களை தேர்ந்தெடுத்து பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த படம் சிறந்த தேர்வாக இருக்கும்.
ஸ்ட்ரீமிங் OTT : Amazon Prime Video, ஆஹா தமிழ்
Image Source – IMDb
10.கொட்டுக்காளி
சூரி, ஆன்னா பென் நடிப்பில் வெள்ளித்திரையில் வெளியான ‘கொட்டுக்காளி’ கலவையான விமர்சனங்களை பெற்றது. இதுவரை தமிழ் ரசிகர்கள் கண்டிடாத கதை விவரிப்பு, திரைக்கதை, மிகவும் நேர்த்தியாகவும் ஆழமான உருவகங்களை படம் முழுவதும் கொண்ட ‘கொட்டுக்காளி’ போன்ற சர்வதேச சினிமாவிற்கு ஆதரவு அளிக்க வேண்டியது ஒவ்வொரு சினிமா ரசிகர்களின் கடைமையாகும்.
ஸ்ட்ரீமிங் OTT : Amazon Prime Video, ஆஹா தமிழ்
Image Source – IMDb