Home Cinema News தமிழ்ல இவ்ளோ படம் தான் நடிச்சாங்களா!!! ஆச்சர்யமூட்டும் Top – 5 நடிகைகள் 

தமிழ்ல இவ்ளோ படம் தான் நடிச்சாங்களா!!! ஆச்சர்யமூட்டும் Top – 5 நடிகைகள் 

தமிழில் 15 படங்கள் கீழ் நடித்த கோலிவுட் சினிமாவில் முன்னணி வகித்த/வகித்து வரும் Top-5 நடிகைகள்‌ பட்டியல்.

by Shanmuga Lakshmi

தற்போது உள்ள கால கட்டத்தில் ஒரு படத்திற்கு பிறகு அடுத்த படத்தில் நடிப்பதற்குள் பார்வையாளர்கள் நினைவில் இருந்து மறைந்துவிடும் சூழல் நிலவி வருகிறது. தமிழில் 15 படங்களுக்கும் கீழாக நடித்தாலும் நூற்றுக்கணக்கான படங்களில் தோன்றுவது போன்ற நினைவு அவரது ரசிகர்களுக்கு நிலவும். அப்படி தற்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் தமிழ் சினிமாவின் Top-5 கதாநாயகிகள்.

.

1.அசின் 

தமிழ்ல இவ்ளோ படம் தான் நடிச்சாங்களா!!! ஆச்சர்யமூட்டும் Top - 5 நடிகைகள் 
Source Image:@simply.asin(Instagram)

2004 முதல் 2011 ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அசின் அவர்கள் தமிழில் மொத்தம் 11 படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த “M.குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மலையாளம்,  தெலுங்கு, மற்றும் ஹிந்தி மொழிகளில் உள்ள உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து பிளாக்பஸ்டர் படங்களை அளித்துள்ளார். இன்று வரை பல ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நடிகையாக உள்ளார்.

வருடம் படம் இயக்குனர் 
2004M.குமரன் SON OF மஹாலக்ஷ்மி M.ராஜா 
2005உள்ளம் கேட்குமே ஜீவா 
2005கஜினி A.R.முருகதாஸ் 
2005மஜா ஷவி 
2005சிவகாசி பேரரசு 
2006வரலாறு கே.எஸ்.ரவிக்குமார் 
2007ஆழ்வார்செல்லா 
2007போக்கிரி பிரபு தேவா 
2007வேல் ஹரி 
2008தசாவதாரம் கே.எஸ்.ரவிக்குமார் 
2011காவலன் சித்திக் 

2.ஐஸ்வர்யா ராய்

தமிழ்ல இவ்ளோ படம் தான் நடிச்சாங்களா!!! ஆச்சர்யமூட்டும் Top - 5 நடிகைகள் 
Source Image:@aishwaryaraibachchan_arb(Instagram)

 

உலக அழகி என்று சொன்னாலே நமது நினைவுக்கு வரும் முதல் பெயர் ஐஸ்வர்யா ராய் தான். 1994-ல் உலக அழகி பட்டம் பெற்று திரையில் கதாநாயகியாக தோன்றிய முதல் படம் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் வெளியான “இருவர்”. 1997-ல் இந்த திரைப்படம் அவர் திரையுலக பயணத்தின் முக்கிய பங்கு ஆற்றியது என்றே கூறலாம். மணிரத்னம் தான் தனது குரு என்று பல மேடைகளில் அவர் சொல்ல கேட்டு இருக்கிறோம். 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு திரைப்படங்களை மிகவும் கவனமாக தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான “பொன்னியின் செல்வன் I & II” படத்திற்கான சிறந்த முன்னணி நடிகை (கிரிட்டிக்) விருதும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருடம் படம் இயக்குனர் 
1997இருவர் மணிரத்னம் 
1998ஜீன்ஸ் ஷங்கர் 
2000கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ராஜீவ் மேனன் 
2010ராவணன் மணிரத்னம் 
2010எந்திரன் ஷங்கர் 
2022 & 2023பொன்னியின் செல்வன் I & II மணிரத்னம் 

3.ஸ்ருதிஹாசன்

தமிழ்ல இவ்ளோ படம் தான் நடிச்சாங்களா!!! ஆச்சர்யமூட்டும் Top - 5 நடிகைகள் 
Source Image:@shrutzhaasan(Instagram)

 

புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்பது பழமொழி. அதை நிரூபிக்கும் விதமாக சினிமாவில் தனக்கான இடத்தை தனது பல்துறை திறமையால் தக்கவைத்து கொண்டிருக்கும் முன்னணி நடிகை தான் ஸ்ருதிஹாசன். நடிப்பு மட்டும் அல்லது இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதால், அவ்வப்போது ஆல்பம் பாடலை எழுதி, இசையமைத்து, பாடி வெளியிடுவார். குழந்தை நட்சத்திரம் ஆக “ஹே ராம், தேவர் மகன்” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் கதாநாயகியாக தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான “7 ஆம் அறிவு” திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் குணச்சித்திர நடிகர்களாக மாறிய Comedy நடிகர்கள்! 

வருடம் படம் இயக்குனர் 
20117 ஆம் அறிவு A.R.முருகதாஸ் 
20123/மூணு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 
2014பூஜை ஹரி 
2015புலி சிம்புதேவன் 
2015வேதாளம் சிவா 
2017சிங்கம் 3ஹரி 
2020புத்தம் புது காலை (anthology) “coffee anyone?”சுஹாசினி மணிரத்னம் 
2021லாபம் S.P.ஜனநாதன் 

4.நித்யா மேனன் 

தமிழ்ல இவ்ளோ படம் தான் நடிச்சாங்களா!!! ஆச்சர்யமூட்டும் Top - 5 நடிகைகள் 
Source Image:@nithyamenen(Instagram)

தென்னிந்திய மொழிகள் ஆன தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகி ஆக உள்ள நித்யா மேனன் தமிழில் மொத்தம் 10 படங்களில் பணியாற்றி உள்ளார். 1998-ல் வெளியான பிரெஞ்சு-ஆங்கில மொழி திரைப்படம் “ஹனுமான்”-ல் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். அதன் பிறகு கன்னடா, தெலுங்கு, மலையாள மொழியில் கதாநாயகியாக அறிமுகமாகி தனக்கான ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். பன்மொழி வித்தகர் என கூறப்படும் நடிகை நித்யா மேனன் 2011 ஆம் ஆண்டு “நூற்றெண்பது/180” திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிட்சயம் ஆனார். அவரின் யதார்த்த நடிப்பு, glamor ரோல் எடுத்து நடிக்காமல் தனக்கான பாணியை உருவாக்கி அதில் சிறந்து விளங்கி வருகிறார். 2022-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி படம் ஆன “திருச்சிற்றம்பலம்” படத்திற்காக சிறந்த நடிகைக்கான Filmfare விருது வழங்கப்பட்டது. 

நடிகர் விஜய்யிடம் உதவி கேட்டதாக வந்த செய்தியால் பொங்கியெழுந்த நடிகை சிம்ரன்! 

வருடம் படம் இயக்குனர் 
2011180ஜெயேந்திர பஞ்சாபகேசன் 
2011வெப்பம் அஞ்சனா 
2014மாலினி 22 பாளையங் கோட்டை ஸ்ரீப்ரியா 
2015JK எனும் நண்பனின் வாழ்க்கை சேரன் 
2015ஓ காதல் கண்மணி மணிரத்னம் 
2015காஞ்சனா 2ராகவா லாரன்ஸ் 
201624விக்ரம் குமார் 
2016முடிஞ்சா இவன புடி கே.எஸ்.ரவிக்குமார்
2016இரு முகன் ஆனந்த் ஷங்கர் 
2017மெர்சல் அட்லீ 
2020PSYCHO மிஸ்க்கின் 
2022திருச்சிற்றம்பலம் மித்ரன் R.ஜவகர் 

5.சாய் பல்லவி

தமிழ்ல இவ்ளோ படம் தான் நடிச்சாங்களா!!! ஆச்சர்யமூட்டும் Top - 5 நடிகைகள் 
Source Image:@saipallavi.senthamarai(Instagram)

 

தமிழில் அறிமுகம் ஆவதற்கு முன்பே மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் நடிகை சாய் பல்லவி. 2015-ல் வெளியான “ப்ரேமம்” என்ற மலையாள திரைப்படத்தில் ‘மலர் டீச்சர்’ ஆக நடித்து பல ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்த நடிகை சாய் பல்லவி 2018-ல் “தியா” படத்தின் வாயிலாக தமிழுக்கு அறிமுகமானார். கதாநாயகிக்கு முன் உரிமை கொடுக்கும் ஆழமான திரைக்கதை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 2024-ல் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் ஜோடி சேர்ந்து நடித்த “அமரன்” திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வருடம் படம் இயக்குனர் 
2018தியா A/L.விஜய் 
2018மாரி 2பாலாஜி மோகன் 
2019NGK செல்வராகவன் 
2020பாவக் கதைகள் (Anthology) “ஓர் இரவு”வெற்றிமாறன் 
2022கார்கி கவுதம் ராமசந்திரன் 
2024அமரன் ராஜ்குமார் பெரியசாமி 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.