பெரும்பாலும் ஹீரோவாக நடித்து வந்த ஒரு சில திரை நட்சத்திரங்கள் ஆண்டுக்கு ஒன்று, இரண்டு படங்கள் என சினிமா வாழ்வில் 50 படங்களை கடந்து நடித்து வந்துள்ளனர். அந்த வகையில் முன்னணி நடிகர்களின் 50-வது படங்கள்.
MGR:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான MGR 1936 முதல் நடித்து வந்து 1947-ல் ராஜகுமாரி என்ற படத்தில் முதன் முதலாக லீட் ரோலில் நடித்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த MGR 1961-ல் நடித்த “தாய் சொல்லை தட்டாதே” என்ற படம் தன் அவரது சினிமா வாழ்வில் நடித்த 50-வது படமாகும்.
MA. திருமுகம் இயக்கத்தில், MGR, MR. ராதா, சரோஜா தேவி, அசோகன் ஆகியோர் நடிப்பில் வெளியானது. 20 வாரங்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. MGR ராஜு என்ற கேரக்டரில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.
சிவாஜி கணேசன்:

நடிப்பின் திலகமாக இருந்து வந்த சிவாஜி கணேசன் 1952-ல் பராசக்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தனது கண்ணியமான பேச்சால் பல கேரக்டர்களுக்கு உயிர்ப்பித்து ரசிக்க வைத்தார். தொடர்ந்து வருடத்திற்கு 7,8 படங்களில் நடித்து வந்த சிவாஜி, 1958-ல் VS. ராகவன் இயக்கத்தில் வெளியான “சாரங்கதாரா” என்ற படம் தான் அவரது சினிமா வாழ்வில் 50-வது படமாக அமைந்தது.
சிவாஜி கணேசன், SV. ரங்கா ராவ், நம்பியார், பானுமதி, சாந்தகுமாரி, ராஜசுலோசனா ஆகியோர் நடித்திருந்தனர். ஆனந்த விகடன் இந்த படத்தை எதிர்மறையாக விமர்சித்து இருந்தது.
கமல் ஹாசன்:

1960-ல் “களத்தூர் கண்ணம்மா” படத்தில் சிறு குழந்தையாக “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே” என்ற பாடலின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் கமல் ஹாசன். பின்னர் 1973-ல் K. பாலச்சந்தரின் அரங்கேற்றம் படத்தில் லீட் ரோலில் அறிமுகமானார். தொடர்ந்து நடித்து வந்த கமல் திரைவாழ்வில் 50-வது படமாக K. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான “மூன்று முடிச்சு” படம் இருந்தது. கமல், ரஜினி, ஸ்ரீதேவி ஆகிய மூவரை சுற்றி மட்டுமே கதை நகர்ந்தது. ஸ்ரீதேவி தனது 13-வது வயதில் முதன் முதலில் லீட் ரோலில் இந்த படத்தில் நடித்திருந்தார்.
ரஜினிகாந்த்:

1975-ல் K. பாலசந்தர் இயக்கத்தில் அபூர்வ ரகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரஜினிகாந்த் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்தார். திரை வாழ்வில் 50-வது படமாக D, யோகநாத் இயக்கத்தில் 1979-ல் வெளியான “நான் வாழவைப்பவன்” என்ற படம் இருந்தது. சிவாஜி கணேசன், KR. விஜயா, ரஜினிகாந்த், ஜெய் கணேஷ், மேஜர் சுந்தராஜன், VK. ராமசாமி, தேங்காய் சீனிவாசன் நடிப்பில் வெளியானது. இளையராஜா இசையில் பாடல்கள் ரசிக்கும் படியாக இருந்து வந்தது.
விஜய்:

10 வயதில் வெற்றி படத்தில் குழந்தை வேடத்தில் நடித்து வந்த விஜய் ” நாளைய தீர்ப்பு” படத்தின் மூலம் லீட் ரோலில் நடித்திருந்தார். தொடர்ந்து பல கஷ்டங்கள், அவமானங்களை கடந்து 2010-ல் SP. ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான சுறா படத்தில் நடித்தார். இது விஜய்யின் சினிமா வாழ்வில் ஹீரோவாக நடித்த 50-வது படமாக அமைந்தது. விஜய், தமன்னா, வடிவேலு, தேவ் கில் நடிப்பில் சுமாரான வரவேற்பை பெற்றது. மீனவனாக ஒரு கிராமத்தில் வாழும் மீனவ மக்களின் நிலையை சரி செய்யும் கேரக்டரில் நடித்திருப்பார்.
அஜித் குமார்:

தன்னம்பிக்கை நாயகனாக சினிமாவில் வலம்வரும் அஜித்குமார் 2011-ல் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான “ மங்காத்தா” படம் இவரது சினிமா வாழ்வில் 50-வது படமாக இருந்தது. அஜித்குமார், அர்ஜுன், திரிஷா, பிரேம்ஜி, வைபவ், அஞ்சலி, லட்சுமி ராய் ஆகியோர் நடித்திருந்தனர். பெரிய அளவில் வரவேற்பை பெற்று அஜித்குமாரின் சினிமா வாழ்வில் டாப் 5 படங்களில் ஒன்றாக அமைந்தது. நெகட்டிவ் ரோலில் நடித்து மாஸ் காட்டியிருப்பார். IPL போட்டியில் நடைபெறும் சூதாட்டத்தை வைத்து பணத்தை கொள்ளை அடிப்பதை சுவாரஸ்யம் நிறைந்து காட்டியிருப்பார்.
விக்ரம்:

நடிப்பிற்காக தன்னை வருத்தி படத்திற்கு தேவையானதை தந்து வரும் விக்ரம் 1990-ல் என் காதல் கண்மணி படத்தின் மூலம் அறிமுகமானார். காதல், ஆக்சன், செண்டிமெண்ட் என பல விதங்களில் நடிப்பை வெளிப்படுத்தி வந்த விக்ரம் 2015-ல் ஷங்கர் இயக்கத்தில் “ஐ” படத்தில் நடித்திருந்தார். இது இவரது 50-வது படமாக இருந்தது. உடலை ஏற்றி, இறக்கி பல சிரமத்தை கடந்து படத்திற்கு முழு அர்ப்பணிப்பை தந்தார்.
விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ் கோபி, சந்தானம், உபேன் பட்டேல், G. ராம்குமார் போன்றோர் நடித்து பெரிய அளவில் ஹிட் அடித்தது. பாடி பில்டராக விக்ரம் லிங்கேசன் (லீ) கேரக்டரில் நடித்திருப்பார். பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனில் 200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
விஜய் சேதுபதி:

நடிப்பில் வெறியேசன் காட்டி நடித்து வரும் விஜய் சேதுபதி ஆரம்ப காலத்தில் சிறு சிறு வேடத்தில் நடித்து வந்த நிலையில் பீட்சா படத்தின் மூலம் லீட் ரோலில் நடிக்க தொடங்கினார். தற்போது நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான “மகாராஜா” படம் இவருக்கு 50-வது படமாக அமைந்தது.
சலூன் கடைக்காரராக மகாராஜா கேரக்டரில் சிறப்பாக நடித்திருப்பார். விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், “சதுரங்க வேட்டை” புகழ் நட்டி, மணிகண்டன், சிங்கம் புலி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, முனிஷ்காந்த் ஆகியோர் நடித்து 100 கோடி வரை வசூல் செய்து ஹிட் அடித்தது.
தனுஷ்:

தனது முதல் படத்தில் அண்ணன் செல்வராகவன் திரைகதையில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமாகிறார். நடிப்பை மூச்சாக கொண்டு பல கேரக்டரில் நடித்து வந்த தனுஷ் தற்போது வெளியான “ராயன்” படம் இவருடைய சினிமா வாழ்வில் 50-வது படமாக அமைந்தது.
தனுஷ், SJ. சூர்யா, சுதீப் கிருஷ்ணன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷார விஜயன் ஆகியோர் நடித்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இயக்குனராக தந்து 50-வது படத்தை இயக்கி, நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]