ரசிகர்களின் ரசனை reviews மற்றும் rating மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையையும் வைத்துள்ள காலமாக தற்போதைய சூழல் மாறியுள்ளது. அந்த அடிப்படையில் IMDb முதலில் ரசிகர்களால் 1990ல் இயக்கப்பட்டது பிறகு 1993ல் வலைக்கு மாற்றப்பட்டு 1998 முதல் அமேசான் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறது. உலகத்தில் வெளியாகும் எல்லாவித மொழி படம், வெப் சீரிஸ், podcasts என அனைத்து விதமான பொழுதுபோக்கு காணொளி சம்பந்தப்பட்ட விவரங்கள் இதில் தெரிந்து கொள்ளலாம்.
மகாராஜா
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை வெளியான தமிழ் திரைப்படங்களில் IMDb rating-ல் பல படங்கள் நல்ல மதிப்பாய்வை பெற்றுள்ளது. முதல் இடமாக ஜூன் 14ஆம் தேதி வெளியான “மகாராஜா” பெற்றுள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50-வது படமாகும், இதற்கு முன் “குரங்கு பொம்மை” படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் தான் இந்த படத்தின் இயக்குனர் ஆவார். சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் மனதை உருக்கும் வகையில் அமைந்த வசனம், காட்சி இந்த படத்திற்கு பக்க பலமாக அமைந்தது. இந்த மொத்த படத்தையும் விஜய் சேதுபதி அவரின் நடிப்பால் உச்சத்தில் வைத்துவிட்டார். IMDb இப்படத்திற்கு 8.6/10 கொடுத்துள்ளது.

அந்தகன்
ஹிந்தியில் 2018 ஆம் ஆண்டு உருவான ‘அந்தாதுன்’ படத்தை தமிழில் “அந்தகன்” என்ற தலைப்பில் டாப் ஸ்டார் பிரசாந்தின் comeback ஆக இருந்தது. சில காட்சிகளை தவிர மத்த எல்லா கட்சிகளும் ஹிந்தியில் உருவாக்கப்பட்டதை போலவே இருந்தது. நடிகரும், இயக்குனரும் ஆன தியாகராஜன் இந்த படத்தின் உரிமம் பெற்று இயக்கியுள்ளார். இப்படம் IMDb rating-ல் 8.1/10 பெற்றுள்ளது.

தங்கலான்
மூன்றாவது இடத்தில், கர்நாடகா கோலார் தங்க சுரங்கத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை மற்றும் சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட “தங்கலான்” இடம் பெற்றுள்ளது. நடிகர் விக்ரம், பசுபதி, நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் 7.4/10 IMDb rating பெற்றுள்ளது.

கருடன்
7.1/10 rating உடன் நான்காவது இடத்தில் “கருடன்” இடம்பெற்றுள்ளது. நகைச்சுவை நடிகர் சூரி தனது சிறப்பான நடிப்பாற்றலால் கதாநாயகனாக “விடுதலை” படத்தில் அறிமுகமாகி பின்னர் கருடன் திரைப்படத்தில் சிறந்த நடிகராக மிளிர்ந்தார். சசிகுமார், உன்னி முகுந்தன், ரோஷினி, ஷிவாடா ஆகியோர் இத்திரைப்படத்தில் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர். R.S.துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.

Lover
பிரபு ரேம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன், நடிகை கவுரி பிரியா ரெட்டி நடித்த “Lover” படம் ஐந்தாவது இடம் பெற்றுள்ளது. 7.0/10 IMDb rating பெற்றுள்ளது. இப்போது இருக்கும் modern couple மற்றும் lovers எதிர்கொள்ளும் உளவியல் மற்றும் relationship பிரச்சனைகளை மிகவும் எதார்த்தமாக கூறப்பட்டிருக்கும்.

Merry Christmas & Blue Star
6.9/10 rating-உடன் இரண்டு திரைப்படங்கள் ஆறு மற்றும் ஏழாவது இடத்தை “Merry Christmas”, “Blue Star” பெற்றுள்ளது. விஜய் சேதுபதி, கத்ரினா கைப் இணைந்து நடித்த Merry Christmas படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் bilingual படமாக எடுக்கப்பட்டது. அசோக் செல்வன் மற்றும் சாந்தனு கதாநாயகர்களாக வெளியான “Blue Star” ஒரு sports drama திரைப்படமாக வெளியானது. இந்த படத்தின் இயக்குனர் எஸ்.ஜெயக்குமார் ஆகும்.


ராயன் & கேப்டன் மில்லர்
அடுத்த இரண்டு படங்கள் நடிகர் தனுஷ் இயக்கி நடித்த “ராயன்” மற்றும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்த “கேப்டன் மில்லர்” எட்டு மற்றும் ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த இரு படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. IMDb rating 6.6/10 ராயன் படத்திற்கும், 6.5/10 கேப்டன் மில்லர் படத்திற்கும் கிடைத்துள்ளது.


பத்தாவது இடத்தில் R.ரவிக்குமார் இயக்கத்தில் sci-fi படமாக வெளிவந்த “அயலான்” பெற்றுள்ளதது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் இது சற்று வித்யாசமான கதைக்களமாக அவருக்கு அமைந்தது. இசைப்புயல் A.R.ரஹ்மானின் இசை இந்த படத்துக்கு பெரிய பலமாக இருந்தது. இந்த படத்தில் இடம் பெற்ற வேற்றுகிரகவாசி கதாபாத்திரம் அதன் CGI பணிகளுக்கு பெரிய வரவேற்பு மக்களிடையே கிடைத்தது இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியாக கூறலாம். 6.0/10 rating இப்படம் பெற்றுள்ளது.

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]