தமிழ் சினிமாவில் பாடல்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அர்த்தமுள்ள இனிமையான பாடல்களை எழுதிய திறமையான பாடலாசிரியர்கள் பலரில் இன்றளவும் மக்களுடன் தங்களின் வரிகள் மூலம் பயணிப்பவர்கள் சிலர் மட்டுமே.
கவியரசர் கண்ணதாசன்

மகாகவி பாரதிக்குப் பின் புலமைவாய்ந்த கவிஞராக கருதப்படுபவர். 1950களில் தொடங்கி அவரின் இறப்பு வரையில் அவரை தவிற தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்கள் இல்லாத மாதிரி அவரின் ஆளுமை இருந்தது. ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்ற வரிகளால் உருகாத மனமே இல்லை. ‘பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது’ பாடலின் ஆழ்ந்த அர்த்தம், ‘போனால் போகட்டும் போடா’ பாடல் பேசிய எளிமையான தத்துவம் இன்றும் மக்களுக்கு மருந்தாய் இருக்கிறது.
தத்துவத்தை எளிய சாமானிய மனிதர்களுக்கும் கொண்டு சேர்த்தவர் கண்ணதாசன். ‘உன்னை அறிந்தால்’ பாடலில் அவர் தரும் நம்பிக்கை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் புத்துணர்ச்சி கிடைப்பது அவரின் மகிமை. ‘மயக்கமா கலக்கமா’ பாடலில் வரும் எளிமையான தத்துவம் ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும்’ என துவண்டு போகும் நேரங்களில் மனதிற்கு கிடைக்கும் பலத்துக்கு நிகர் இல்லை.
கவிஞர் வாலி

கவிஞர் கண்ணதாசனின் மகிப்பெரிய போட்டியாளர் கவிஞர் வாலி. வாலிபர் கவிஞர் வாலி தன்னுடைய திரைப்பயணத்தில் 15,000 பாடல்கள் எழுதியுள்ளார். 50 ஆண்டுகளுக்கு மேல் மாறும் தலைமுறையினரின் விருப்பத்துக்கு ஏற்றமாதிரி பாடல்களை மிக எளிமையாக எழுதும் ஆற்றல் உடையவர். ‘கொடுத்தெல்லாம் கொடுத்தான், அவன் யாருக்காக கொடுத்தான்’ என்று MGR க்கு பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். சிவாஜி கணேசனுக்கு 80க்கும் மேற்பட்ட பாடல்களும் எழுதியுள்ளார். 2000ம் ஆண்டுக்கு பின்னர் புதிய நூற்றாண்டுக்கு தகுந்தவாறு துடிப்பான வரிகளையும் எழுதியுள்ளார்.
‘காதில் வளையம் போட்டா தப்பு, முடியில் கலர் அடிச்சா தப்பு….break the rules!’ என்று இளைஞர்களின் மனதில் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியதும், அவரின் வயதை பொருட்படுத்தி அதே இளைஞர்களுக்கு ஆலோசனை சொல்லாமல் சமுதாயம் போடும் பூட்டை உடை என்று இளைஞர்களுடன் தன்னையும் இணைத்த வாலிப கவிஞராக வாழ்ந்தவர்.
‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ என M.S. விஸ்வநாதன் முதல் ‘Speedu speedu speedu வேணும் speedu காட்டி போடா நி’ என அனிருத் ரவிச்சந்திரன் வரை ரசிகர்களை மகிழ்வித்த ‘வாலி’பன்.
கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளும் புதினங்களும் தமிழ் மொழியை கொஞ்சி தாலாட்டி பொன்னாக மக்கள் மனதில் நிற்க வைக்கும். ‘நிழல்கள்’ படத்தில் ‘இது ஒரு பொன் மாலை பொழுது’ என தொடங்கிய பயணம் இன்றளவும் வெற்றிகரமாக தொடர்கிறது. இளையராஜாவின் இசைக்கு ரசிகர்கள் மயங்குவதற்கு முக்கிய காரணம் இவரின் வரிகள். ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் ‘ஆயிரம் தாமரை மொட்டுகளே’ , ‘புத்தம் புது காலை’ என்ற காலத்தால் அழியாத பாடல்களை எழுதியவர் வைரமுத்து. ‘முதல் மரியாதை’ படத்தில் கதையோடு பயணிக்கும் பாடல்களை மண் மணம் மாறாமல் எழுதி தன்னுடைய முதல் தேசிய விருதை பெற்றார்.
ஏ. ஆர். ரஹ்மான் உடன் ‘ரோஜா’ படத்தில் இணைந்தவர், பிரியாமல் தொடர்ந்து ஹிட் பாடல்களை தந்தார். ‘சின்ன சின்ன ஆசை’, ‘கண்ணாளனே’, ‘ஸ்நேகிதனே’ என பல பாடல்கள் மக்களுடன் மாலையில் இளைப்பாற துணையாய் இருக்கிறது. மற்ற பாடலாசிரியர்கள் பொட்டிக்கு இடமில்லாமல், தனித்து வெற்றியை அனுபவிக்கிறார்.
கவிஞர் நா. முத்துக்குமார்

இளைஞர்களின் மனதில் காதலின் வலியையும், தூய்மையையும் சற்றும் முகம் சுழிக்காத முறையில் இனிமையாக எழுதும் கவிஞர். ஆழமான தத்துவத்தையும் கருத்துகளையும் இயல்பான மொழியில் எழுதி அதை கேட்பவர்களின் எண்ணத்துக்கு விட்டுவிடும் எழுத்தாளர்.
மிக எளிமையாக இயக்குனர்கள் தரும் காட்சிகளுக்கு ஏற்ப கவிதைகளை இயற்றி அதில் தன்னுடைய நடைமுறையான நயத்தை சேர்த்து மறக்கமுடியாத பாடல்களை தந்தவர். புகழுக்காக எதையும் எழுதும் சில சினிமா பாடலாசிரியர்களுக்கு மத்தியில், “எந்த காரணத்துக்காகவும் கொச்சையான வரிகளையும் மற்றவர்களை இழிவுபடுத்தும் வண்ணம் எழுதமாட்டேன்” என தீர்மாணமாக இருந்த மனிதர். ‘ரகசியமாய் ரகசியமாய் புன்னகையித்தால்’, ‘ஒரு பாதி கதவு நீயடி, மறுபாதி கதவு நானடி’ , ‘நினைத்து நினைத்து பார்த்தால்’ என காதல் உணர்வை தூண்டும் பாடல்களையும். துள்ளலான ‘சூர தேங்கா அட்ரா அட்ரா’, ‘காதல் யானை வருகிற ரெமோ’, ‘பல்லேலக்கா பல்லேலக்கா’ பாடல்களையும் எழுதிய கவிஞர் நா. முத்துக்குமார், அவரின் பாடல்களால் எந்நாளும் வாழ்வார்.
கவிஞர் தாமரை

சினிமா பாடலாசிரியர்கள் பணியில் பெண்களும் சாதிக்க முடியும் என்றும் பெண்களின் பங்கை தொடக்கி வைத்தவர் கவிஞர் தாமரை. ஆண்களின் கண்ணோட்டத்தில் பாடல்களை கேட்டு மக்களுக்கு பெண்ணின் கண்கள் வழியே கவிதையை காட்டியவர். ‘இனியவளே’ படத்தில் அறிமுகமானாலும் ‘தெனாலி’ படத்தில் ‘இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ’ பாடல் வழியாக தன்னுடைய வருகையை பதிவிட்டார் கவிஞர் தாமரை. ‘வசீகரா’ பாடலை முனுமுனக்காதவரே இல்லை என்ற அளவிற்கு தன்னுடைய புதுமையான நடையில் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதே இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உடன் ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’, ‘வேட்டையாடு விளையாடு’ என தொடர்ந்தார். பெண்களின் காதல் எதிர்பார்ப்புகளையும் ஏக்கங்களையும் ‘பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா உன் இனிய கண்ணியம் பிடிக்குதே’ என்றும் ‘கண்டேன் உன் அலாதி தூய்மையே, என் கண் பார்த்து பேசும் பேராண்மையை’ என்றும் எழுதிய இலக்கிய கவிஞர்.
கவிஞர் யுகபாரதி

மகாகவி பாரதியாரின் மேல் கொண்ட பற்றால் தன்னுடைய இயற் பெயரான பிரேம் குமார் -ஐ யுகபாரதி என்று மாற்றிக்கொண்டார். தமிழ் சினிமாவில் தன்னுடைய முதல் பாட்டில் இருந்து புகழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் இருப்பவர். 2001ல் வெளியான ‘ஆனந்தம்’ படத்தில் ‘பள்ளாங்குழியின் வட்டம் பார்த்தேன்’ என நம்மை சுற்றி உள்ள, நாம் கவனிக்க மறந்து பொருட்களை பாடலாக தந்திருப்பார். ‘ரன்’ படத்தில் துடிப்பான ‘காதல் பிசாசே’ பாடலை எழுதியதும் ‘பார்திபன் கனவு’ படத்தில் ‘கனா கண்டேனடி’ பாடலையும் எழுதி தன்னுடைய பன்முக திறமையும் காட்டியிருப்பார்.
24 வருடங்களில் 1000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர். நாம் அதிகம் கேட்டு மகிழ்ந்த பாடல்களான ‘மன்மத ராசா’, ‘கில்லி’ படத்தில் வந்த ‘கொக்கர கொக்கரக்கோ’, ‘சண்டக்கோழி’ படத்தில் வரும் evergreen பாடலான ‘தாவணி போட்ட தீபாவளி’ என பல ஹிட் பாடல்களை அந்தந்த படத்தின் கதைக்கு ஏற்ப அழகாக எழுதும் புதுமை கவிஞர் யுகபாரதி.
‘வித்தக கவிஞர்’ பா. விஜய்

நடிகராக நடிக்க தொடங்கி பாடலாசிரியராக கோலாச்சும் கவிஞர், பா. விஜய். 1996ல் ஆரம்பூத்த பயணம் 2024 வரை நடிகர், எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல துறையில் கலக்கி வருகிறார். ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ பாடலின் பயன்பாடு மீம் காலகட்டத்தில் அதிகர்த்துள்ளது, இதை எழுதியவர் பா. விஜய். ரசிகர்கள் மனதில் நிற்கும் வரிகளை எழுதி அதில் தன்னுடைய கற்பனையால் கவிநயத்தை ஊற்றி எழுதும் கவிஞர் இவர். ‘கருப்பு தான் எனக்கு புடிச்ச கலர்’, ‘எனக்கொரு girlfriend வேண்டுமடா’, ‘அப்படி போடு போடு’ என தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் பிரபல பாடல்களின் வரிகள் இவருடையது தான்.
இயக்குனர் சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் வரும் ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது வரவிருக்கும் இந்தியன் 2 படத்தின் ஓரளவுக்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ‘பாரா’ பாடலின் புரட்சிகர வரிகளை எழுதியவர் பா. விஜய். கேட்கும்போதே சிலிர்க்க வைக்கும் வீரமான சுத்ந்திர வரிகளை எழுதுவதில் பா. விஜய் வல்லவர்.
கவிஞர் மதன் கார்க்கி

2009ல் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக ஆரம்பித்து வசன எழுத்தாளர், மொழியியலாளர் என நாளுக்கு நாள் தன்னுடைய கற்றலை வளர்த்துக்கொண்டே போகும் நபர் கவிஞர் மதன் கார்க்கி. ‘கண்டேன் காதலை’ படத்தில் வரும் ‘ஓடோடி போறேன்’ பாடல் தான் சினிமாவில் இவர் எழுதி வெளியான முதல் பாடல். இயக்குனர் ஷங்கரின் ‘எந்திரன்’ படத்தில் ‘இரும்பிலே ஓர் இருதயம்’ பாடல் தான் அவர் சினிமாவில் எழுதிய முதல் பாடல். இயல்பான தமிழ் பார்த்தோம் இல்லாமல் புதிய தொழில்நுட்ப சொற்கள் மற்றும் புதிய மாற்று மொழி வார்த்தைகளை தமிழ் மொழியில் சேர்த்தவர். ‘ஏனோ குவியமில்லா காட்சி பேழை’, ‘பனிக்கூழ்’ என இளைஞர்களை கவரும் புதிய அர்த்தமுள்ள பல வார்த்தைகளை உருவாக்குவதில் பெயர் போனவர்.
‘பாகுபலி’, ‘மகாநடி’ போன்ற படங்களில் இணைந்து வசனம் எழுதியுள்ளார். அதிலும் ‘பாகுபலி’ படத்திற்காக புதிய ஒரு மொழியையே உருவாக்கியுள்ளார். இதுவரை இந்த நூற்றாண்டில் ஒரு புது பேச்சு மொழியை இலக்கணத்துடன் உருவாக்கியிருக்க மாட்டார்கள். கலை மொழியாக மட்டுமில்லாமல் இதில் 3000த்திற்கும் மேற்பட்ட சொற்களையும் இலக்கணத்துடன் சேர்த்துள்ளார்.
கவிஞர் சினேகன்

இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் அவர்களின் அறிவுரையால் சினிமாவில் பாடல்கள் எழுத தொடங்கினார் சினேகன். இதுவரை 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். 1995 முதல் பாடலாசிரியராக வலம் வந்தாலும் 2001ல் ‘பாண்டவர் பூமி’ படத்திற்காக ‘அவரவர் வாழ்க்கையில்’ அவர் எழுதிய பாடல் அவருக்கு புகழை தேடி தந்தது. அதன்பின் ‘மௌனம் பேசியதே’, ‘சாமி’, ‘சார்லி சாப்லின்’ ஆகிய படங்களில் பிரபலமானார்.
இயக்குனர் அமீரின் ‘ராம்’ படத்தில் தாயின் அன்பை பற்றி உருக்கமாக அவர் எழுதிய வரிகள் கல்லையும் கரைய செய்யும். ‘உனக்கே ஓர் தொட்டில் கட்டி, நானே தாயாய் மாறிட வேண்டும்’ என்ற வரிகளில் கவிஞர் சினேகன் கலைஞனானார். ‘சூரரை போற்று‘ படத்தில் ‘காட்டு பயலே’ பாடல் நல்ல பேசுபொருளாக இருந்தது. ‘பருத்திவீரன்’ படத்தின் அனைத்து பாடல்களும் மண் மனம் மாறாமல் படத்தின் வேகத்தையும் உணர்ச்சிகளையும் பிரதிபலித்தது.
கவிஞர் விவேக்

கவிஞர் விவேக் திரைத்துறைக்கு 2015ல் சேர்ந்தாலும் 200க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். வைரமுத்து அவர்களின் எழுத்தால் ஈர்க்கப்பட்டு கவிஞராக மாறிய விவேக், ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் எழுத தொடங்கி கேப்டன் மில்லர் வரை பிரபல பாடல்களை தந்துள்ளார். ‘பூ அவிழும் பொழுதிலே’ பாடலின் அழகியல் அவருடைய அழகிய தொடக்கமாக அமைந்தது. சந்தோஷ் நாராயணன் உடன் இணைந்து ‘36 வயதினிலே’ படத்தில் எழுதிய பாடல்களுக்கு பலத்த பாராட்டுக்கள் கிடைத்தது. ‘இறுதி சுற்று’ படத்தின் ‘ஏ சண்டக்காரா’ மற்றும் ‘உசுரு நரம்புல நீ’ பாடல்கள் இன்றும் கோடிக்கணக்கான மக்கள் பயணங்களின் பங்காக உள்ளது. சந்தோஷ் நாராயணன் உடன் கவிஞர் விவேக் இணையும் அனைத்து பாடல்களும் உணர்ச்சிகளின் உச்சமாகவும் பல முறை கேட்கக்கூடிய தன்மையும் கொண்டு அமைகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com